Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
சீன புத்தாண்டு பற்றி உங்களுக்குத் தெரியாத சில சுவாரஸ்யமான விஷயங்கள்!
இந்த ஆண்டு சீன புத்தாண்டு பிப்ரவரி 01 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 15 நாட்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் இந்த சீன புத்தாண்டு, வசந்த கால திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.
நீங்கள் இன்னும் 2022 புத்தாண்டு கொண்டாட்டத்தில் தான் இருக்கிறீர்களா? அப்படியானால் சந்திர புத்தாண்டு என்று அழைக்கப்படும் சீன புத்தாண்டையும் சேர்த்து கொண்டாடுங்கள். இந்த ஆண்டு சீன புத்தாண்டு பிப்ரவரி 01 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 15 நாட்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் இந்த சீன புத்தாண்டு, வசந்த கால திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது. இது உலகெங்கிலும் உள்ள சீன மக்களால் சற்று மாறுபட்ட மரபுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
நம்மில் பலருக்கும் சீன புத்தாண்டு பற்றி தெரிந்திருக்காது. ஆகவே நாங்கள் 2022 சீன புத்தாண்டு எப்போது, அதன் வரலாறு என்ன, எப்படி கொண்டாடப்படுகிறது மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த சில விஷயங்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

2022 சந்திர புத்தாண்டு/சீன புத்தாண்டு எப்போது?
சீன புத்தாண்டு/சந்திர புத்தாண்டு இரண்டு நாட்கள் மிகவும் உற்சாகத்துடன் கொண்டப்படுகிறது. அந்த இரண்டு நாட்களாவன இந்த ஆண்டு ஜனவரி 31 (புத்தாண்டு ஈவ்) மற்றும் பிப்ரவரி 01 ஆகும். சந்திர புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒரே தேதியில் கொண்டாடப்படுவதில்லை. சந்திரனின் சுழற்சியைக் கொண்டு இது கொண்டாடப்படுகிறது. வழக்கமாக கிரிகோரியன் நாட்காட்டியின் படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 20 முதல் பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள் கொண்டாடப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் எலி, எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய் மற்றும் பன்றி என ஒவ்வொரு விலங்குகளுடனும் தொடர்புடையது அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு எருது ஆண்டு. 2022 ஆம் ஆண்டு புலி ஆண்டு ஆகும்.

சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள்
சீன புத்தாண்டை முன்னிட்டு மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்வார்கள். இதனால் கடந்த ஆண்டின் துக்கங்கள் மற்றும் துரதிர்ஷ்டங்கள் நீங்கி, அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பால் ஆசீர்வதிக்கப்படுவதாக நம்புகிறார்கள். முக்கியமாக சீன மக்களுக்கு சிவப்பு நிறம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.இந்த புத்தாண்டு அன்று மக்கள் வீடுகளை சிவப்பு நிறத்தால் அலங்கரிப்பார்கள் மற்றும் வீட்டில் உள்ள பெரியோர் குழந்தைகளுக்கு சிவப்பு நிற கவர்களில் பணத்தை வைத்து வழங்குவார்கள். மேலும் பரிசுகளைப் பரிமாறி கொள்வார்கள்,பெரிய விருந்துகளை ஏற்பாடு செய்து விருந்தினர்களை அழைத்து விருந்து உணவு உண்பார்கள், நிறைய பட்டாசுகள், நடனமாடும் டிராகன்கள் மற்றும் சிங்கங்களுடன் தங்கள் புத்தாண்டை விமரிசையாக கொண்டாடி மகிழ்வார்கள்.
முக்கியமாக இந்த சீன புத்தாண்டு கொண்டாட்டம் 2 வாரங்கள் நடைபெறும். இந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி பௌர்ணமி அன்று அகல் விளக்கு திருவிழாவுடன் இந்த கொண்டாடட்டம் நிறைவடையும்.

வரலாறு மற்றும் முக்கியத்துவம்
சீன புத்தாண்டு கொண்டாடும் பழக்கமானது கி.மு 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கூறப்படுகிறது. பழங்காலத்தில் நியான் என்ற அசுரன் இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த அசுரன் மக்களைத் தாக்கி மிகவும் அச்சுறுத்தியது. ஆனால் இந்த அசுரனுக்கு சிவப்பு நிறம், பட்டாசுகளின் சப்தம் மற்றும் பட்டாசு வெடிப்பதைப் பார்த்தால் பயம். ஆகவே மக்கள் இந்த அசுரனை பயமுறுத்தி விரட்டுவதற்கு இவற்றைப் பயன்படுத்தினார்கள். அன்று முதல் மக்கள் சீன புத்தாண்டை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.

சீன புத்தாண்டு/சந்திர புத்தாண்டைக் கொண்டாடும் பிற நாடுகள்
சீன புத்தாண்டை கிழக்கு ஆசிய நாடுகளும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றன. மேலும் வியட்நாம், தென்கொரியா, வட கொரியா மற்றும் மங்கோலியா போன்ற நாடுகளும் இந்நாளில் வெவ்வேறு பெயர்கள் மற்றும் பாரம்பரியங்களுடன் இந்த நாளைக் கொண்டாடி வருகின்றன.



Click it and Unblock the Notifications