Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சந்திர கிரகண நாளில் உருவாகும் சிறப்பான யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணமாக இருக்கும்.
இந்து மதத்தில் கிரகணங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒரு ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழும். அதில் 2 சந்திர கிரகணம் மற்றும் 2 சூரிய கிரகணம். இவற்றில் 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணமாக இருக்கும்.
இந்த சந்திர கிரகண நாளில் இரண்டு சுப யோகங்கள் உருவாகி வருவதால், இந்நாள் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக மாறியுள்ளது. அதோடு இந்த சந்திர கிரகணம் வைகாசி மாதத்தின் பௌணர்மி நாளில் வருகிறது. இந்த நாளில் புனித நதிகளில் நீராடுவதும், தானம் செய்வதும் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது.

கிரகணங்கள் மங்களகரமானதாக கருதப்படுவதில்லை
கிரகணத்தின் போது எந்த ஒரு சுப காரியமும் செய்யக்கூடாது என்பது நம்பிக்கை. கிரகண காலத்தில் கோவில்கள் அனைத்தும் மூடப்படும். இருப்பினும் எப்படி ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியவில்லையோ, அதேப் போல் சந்திர கிரகணமும் தெரியாது. இதனால் இந்தியாவில் சூதக் காலம் எதுவும் இல்லை. ஆனால் இந்த சந்திர கிரகணம் மூன்று ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலனைத் தரப் போகிறது.

சந்திர கிரகணத்தின் போது உருவாகும் சிறப்பு யோகங்கள்
இந்து நாட்காட்டியின் படி, ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்நாளில் காலை 6.16 மணி வரை வரியன் யோகம் இருக்கும். இந்த யோக காலத்தில் மேற்கொள்ளும் எந்த வேலையும் வெற்றிகரமாக இருக்கும் என்பது நம்பிக்கை. மே 16 ஆம் தேதி காலை முதல் மதியம் 2.30 மணி வரை, பரிகா யோகம் இருக்கும். இந்த யோகத்தில் எதிரிகள் வீழ்த்தப்பட்டு வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மேஷம்
சந்திர கிரகணத்தின் போது மேஷ ராசிக்காரர்கள் நிதி விஷயங்களில் நற்பலனைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு இக்காலம் சாதகமான காலம். இந்நாளில் வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணம் சாதகமாக இருக்கப் போகிறத. இக்காலத்தில் பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். திருமணமாகாதவர்களுக்கு இந்நாளில் திருமண வரன் உங்களைத் தேடி வரக்கூடும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கும் இந்த சந்திர கிரகணம் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்களின் முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கப்படும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரலாம். பணியிட மாற்றத்திற்கான வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications