Latest Updates
-
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
அக்டோபர் மாசத்துல அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிக்காரங்க யார்யார் தெரியுமா?
அக்டோபர் மாதத்தில் 7 கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. கிரகங்களின் ராசி மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தைக் கொண்டிருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
அக்டோபர் மாதம் மிகவும் முக்கியமானது மற்றும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த மாதத்தில் ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி போன்ற பல கொண்டாட்டங்கள் வருகின்றன. இது தவிர பல கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றுகின்றன. முக்கியமாக அக்டோபர் மாதத்தில் 7 கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன.

கிரகங்களின் ராசி மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தைக் கொண்டிருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். இப்போது அக்டோபர் மாதம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதாக என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் மிகவும் சாதகமான மாதமாக இருக்கும். இம்மாதத்தில் வேலையில் மாற்றம் ஏற்படும். அரசு வேலை செய்பவர்கள் நற்செய்தியைப் பெறுவார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை உங்களின் வேலையில் இருந்த தடைகள் நீங்கும். வியாபாரிகளின் வியாபாரம் விரிவடைவதோடு, நிதி ரீதியாகவும் நற்பலன்கள் கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் பொன்னான மாதமாக இருக்கும். இம்மாதத்தில் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ளது. இங்நத பயணத்தால் நல்ல ஆதாயம் கிடைக்கும். திடீரென்று கைக்கு பணம் வரும். இம்மாதத்தில் எந்த சொத்தும் வாங்க வாய்ப்புள்ளது. வணிகத்தில் முதலீடு செய்வதால் லாபம் கிடைக்கும். ஆனால் வாகனம் ஓட்டும் போது மட்டும் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு பலவிதமான பலன்கள் கிடைக்கும். சிலர் வருமானத்தில் ஏற்றத்தைக் காண்பார்கள். குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை சிறந்த மாதமாக இருக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். தொழிலில் கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதால், வருமானம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை இரண்டும் வெற்றிகரமாகவும் இனிமையாகவும் இருக்கும். மாணவர்களுக்கு சிறந்த மாதமாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இதுவரை குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் இம்மாதத்தில் தீர்க்கப்படும். நிதி நிலைமையும் நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். இருப்பினும், திருமண வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications