Latest Updates
-
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஏப்ரல் மாசத்துல இந்த 4 ராசிக்காரங்களோட அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகுது... உங்க ராசி இதுல இருக்கா?
2022 ஏப்ரல் மாதத்தில் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் வந்துவிட்டது. ஏனெனில் இந்த மாதத்தில் தான் பலரது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் பல முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. இதனால் ஏப்ரல் மாதம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் முக்கியமான மாதமாகும். ஏப்ரல் மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைத்தாலும், சில ராசிக்காரர்கள் அதிக சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இப்போது 2022 ஏப்ரல் மாதத்தில் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஏப்ரல் மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதமாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் ராகு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறப் போகிறார். ரிஷப ராசியில் இருந்து விலகுவதால், இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். இம்மாதத்தில் கடின உழைப்பின் முழு பலனும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இம்மாதத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். மாணவர்களுக்கு இம்மாதம் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் பல விஷயங்களில் வெற்றி கிடைக்கும். இம்மாதத்தில் பணியிடத்தில் உங்கள் வேலை உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். உத்தியோகத்தில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். புதிய பொறுப்புகள் வழங்கப்படும். வியாபாரத்தில் லாபம் கூடும். மாணவர்கள் படிப்பில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். வீட்டில் அமைதியான சூழல் ஏற்படும். இம்மாதத்தில் லட்சுமி தேவியின் சிறப்பான ஆசீர்வாதம் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் நன்மைகளைத் தரும் மாதமாக இருக்கும். இம்மாதத்தில் விரும்பிய முடிவுகளை எதிலும் பெறுவீர்கள். கேது உங்கள் ராசியில் இருந்து விலகி துலாம் ராசிக்கு செல்வதால், பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கு. காதல் விஷயங்களில் வெற்றி கிடைக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். இம்மாதம் முதலீடு செய்வதற்கான சிறந்த மாதமாகும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களின் நிதி நிலைமை ஏப்ரல் மாதத்தில் மேம்படும். சனி பகவானால் இதுவரை சந்தித்து வந்த துன்பங்கள் இம்மாதத்தில் இருந்து குறையும். லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். அதனால் இம்மாதத்தில் நல்ல பண வரவும் கிடைக்கும். முக்கியமாக இந்த மாதம் பணிபுரிபவர்கள் வேலையை மாற்ற சாதகமான காலம் ஆகும்.



Click it and Unblock the Notifications
