Latest Updates
-
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
லட்சுமி நாராயண யோகத்தால் அடுத்த 2 நாட்கள் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
2022 ஆம் ஆண்டின் கடைசி யோகம் தான் லட்சுமி நாராயண ராஜயோகம். இந்த யோகத்தால் ஆண்டின் கடைசி 2 நாட்கள் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.
ஜோதிட சாஸ்திரத்தில் யோகங்களானது கிரகங்களின் சேர்க்கைகளால் உருவாகும். யோகங்களில் பல ராஜயோகங்கள் உள்ளன. அதில் ஒரு மங்களகரமான ராஜயோகம் தான் லட்சுமி நாராயண ராஜயோகம். இது புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் உருவாகிறது. ஏற்கனவே புதன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு 2022 டிசம்பர் 29 ம் தேதி நுழைந்தார். அதைத் தொடர்ந்து 2022 டிசம்பர் 29 ஆம் தேதி ஆடம்பரம், காதல், அழகு, செல்வம் ஆகியவற்றின் அதிபதியான சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு நுழைந்தார்.

சுக்கிரன் மகர ராசிக்கு வந்ததும், புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் மகர ராசியில் லட்சுமி நாராயண யோகம் உருவானது. இந்த ராஜயோகம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை மட்டுமே நீடித்திருக்கும். ஏனெனில் புதன் 2022 டிசம்பர் 31 ஆம் தேதி வக்ர நிலையில் தனுசு ராசிக்கு செல்கிறார். 2022 ஆம் ஆண்டின் கடைசி யோகம் தான் லட்சுமி நாராயண ராஜயோகம். இந்த யோகத்தால் ஆண்டின் கடைசி 2 நாட்கள் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராய ராஜயோக காலம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். ஏனெனில் இந்த யோகமானது 10 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இனால் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியும், லாபமும் கிடைக்கும். வணிக விரிவாக்கத்திற்கான திட்டங்கள் நிறைவேறும். வேலையை மாற்ற திட்டமிட்டால், அதில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இக்காலத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தந்தையுடனான உறவு வலுவாகும்.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகியுள்ளது. எனவே இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் அனைத்து சுகங்களையும் பெற முடியும். நண்பர்களுடன் தொலைதூர பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் தாயுடனான உறவு வலுவாகும். இந்த யோகத்தின் பார்வை பத்தாவது வீட்டில் விழுவதால், வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியுடன், லாபமும் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகியுள்ளது. இது அன்பு, உறவு, குழந்தைகள் ஆகியவற்றின் வீடாக கருதப்படுகிறது. எனவே இந்த யோகத்தால் இந்த ராசிக்காரர்களின் காதல் உறவுகளில் இனிமை இருக்கும். காதலித்துக் கொண்டிருந்தால் வரக்கூடிய புத்தாண்டில் காதல் திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். மறுபுறம் குழந்தைகளால் நற்செய்திகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் விரும்பிய படிப்புக்களை படிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
