Latest Updates
-
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்..
மேஷத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: மார்ச் இறுதி முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கும்...
மேஷ ராசியில் ஏற்கனவே சுக்கிரன் உள்ள நிலையில், புதனும் மேஷ ராசிக்கு செல்லும் போது, அந்த ராசியில் லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது.
Lakshmi Narayan Yoga In Aries On March 2023: ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்களின் இயக்கங்களால் சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கமானது 12 ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் 2023 மார்ச் 12 ஆம் தேதி செல்வம், ஆடம்பரம், காதல், அழகு, செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் மேஷ ராசிக்கு சென்றார்.

இந்நிலையில் மார்ச் மாதத்தின் இறுதியில், அதாவது 2023 மார்ச் 31 ஆம் தேதி புத்திசாலித்தனம் மற்றும் வியாபாரத்தின் காரணியாக கருதப்படும் புதன் மேஷ ராசிக்கு செல்கிறார். அதே நாளில் மேஷ ராசியில் அஸ்தமன நிலையில் இருந்த புதன் உதயமாகிறார். மேஷ ராசியில் ஏற்கனவே சுக்கிரன் உள்ள நிலையில், புதனும் மேஷ ராசிக்கு செல்லும் போது, அந்த ராசியில் லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது ஒரு சுப யோகம் என்பதால், 3 ராசிக்காரர்கள் இந்த யோக காலத்தில் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார், எந்த மாதிரியான பலன்களைப் பெறுவார்கள் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் புதன், சுக்கிர சேர்க்கையால் லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை கிடைக்காமல் நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், இக்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். வியாபாரம் செய்து வருபவர்களும் இந்த யோக காலத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நல்ல லாபத்தைக் காண்பார்கள்.
நீண்ட காலமாக முதலீடு செய்ய நினைத்தால், இக்காலத்தில் செய்தால் நல்ல லாபத்தைக் காணலாம். மேலும் பணிபுரிபவர்கள் இக்காலத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. நிதி நிலை வலுவாகும் வாய்ப்புள்ளது. உங்கள் தந்தையுடனான உறவுகள் மேம்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் சுக்கிர சேர்க்கையால் லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் சிம்ம ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். நீண்ட நாட்களாக பண பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இந்த யோக காலத்தில் அது நீங்கும். மேலும் இக்காலத்தில் சுப காரியங்களில் பங்கு கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களின் ஆசைகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புள்ளது.

மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் சுக்கிர சேர்க்கையால் லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது. இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடாக கருதப்படுகிறது. எனவே இக்காலத்தில் மிதுன ராசிக்கார்கள் தங்களின் வருமானத்தில் நல்ல உயர்வைக் காண வாய்ப்புள்ளது. மேலும் பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தை காணலாம். நீண்ட நாட்களாக முதலீடு செய்ய நினைத்தால், இக்காலத்தில் அதை செய்யுங்கள். இதனால் நல்ல லாபம் கிடைக்கும். அந்த முதலீட்டை வியாபாரத்தில் மட்டுமின்றி, பங்கு சந்தைகளிலும் செய்யலாம். இதனால் நல்ல லாபத்தை பெற வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
