Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன?
இந்த பொருட்களை வீட்டில் வெச்சிருந்தா உங்க அதிர்ஷ்டம் பிரகாசிக்குமாம்... ட்ரை பண்ணி பாருங்களேன்...
ஒவ்வொருவரும் சந்தோஷமான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ களிமண்ணால் செய்யப்பட்ட பொருட்களை வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இப்போது அந்த பொருட்கள் என்னவென்பதைக் காண்போம்.
நாம் அனைவருமே சந்தோஷமாகவும், செல்வ செழிப்போடும் வாழ விரும்புவோம். ஒருவரது வீட்டில் சந்தோஷம் இல்லாவிட்டால் அந்த வீட்டில் வாஸ்து தோஷம் இருக்க வாய்ப்புள்ளது. மேலும் ஒருவரது தூங்கிக் கொண்டிருக்கும் அதிர்ஷ்டத்தை ஒருசில பொருட்களைக் கொண்டு பிரகாசிக்க வைக்க முடியும்.

வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் ஒருசில பொருட்களை வைத்திருப்பது மகிழ்ச்சியையும் செழிப்பையும் அதிகரிப்பதாக கூறுகிறது. குறிப்பாக களிமண்ணால் செய்யப்பட்ட பொருட்ள வீட்டில் வைத்திருப்பதால் வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். அதோடு ஒருசில பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளியும் வைக்கப்படும். அதுமட்டுமின்றி, களிமண்ணால் ஆன பொருட்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். ஆகவே ஒவ்வொருவரும் சந்தோஷமான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ களிமண்ணால் செய்யப்பட்ட பொருட்களை வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இப்போது அந்த பொருட்கள் என்னவென்பதைக் காண்போம்.

மண் பானை
மண் பானையில் நீரை ஊற்றி வைத்து குடித்தால் குடிக்கும் நீர் மட்டுமின்றி உடலும் குளிர்ச்சியாக இருக்கும். வாஸ்துப்படி ஒரு வீட்டில் மண் பானை இருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. மண் பானையானது வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. அதுவும் வீட்டின் வடக்கு திசையில் மண் பானையை வைத்திருக்க வேண்டும். முக்கியமாக அதில் எப்போதும் தண்ணீர் இருக்க வேண்டும். காலி மண் பானையை வைத்திருந்தால், அது அதிர்ஷ்டத்தை தராது.

களிமண் சிலைகள்
வீட்டின் வடகிழக்கு மற்றும் தென் மேற்கு திசையில் களிமண் சிலைகளை வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் இச்செயலால் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும் என்பது ஐதீகம். முக்கியமாக இப்படி செய்வதால் நிதி நெருக்கடியில் இருந்து விடுபடலாம்.

மண் குவளை
வீட்டின் வடக்கு திசையில் ஒரு மண் குவளையில் தண்ணீரை எப்போதும் வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக இச்செயலால் தெய்வங்களின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

மண் விளக்குகள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, தெய்வ வழிபாடுகளின் போது மண் விளக்குகளைப் பயன்படுத்துவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இப்படி செய்வதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல் தங்கி, சந்தோஷம் பெருகி, அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

மண் பாத்திரங்கள்
வீட்டில் மண் பாத்திரங்களை வைத்திருப்பது மிகவும் மங்களகளரமானதாக கருதப்படுகிறது. வாஸ்துப்படி, இந்த பொருட்களைப் பயன்படுத்துவது வீட்டில் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் மண் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் வீட்டில் உள்ளவர்களின் உடல்நிலை சீராக இருக்கும்.



Click it and Unblock the Notifications
