Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
பல ஆண்டுகளுக்கு பின் குரு சுக்கிரனால் உருவான பஞ்சமகா புருஷ யோகம்: இந்த 4 ராசிகளின் கனவு நனவாகப் போகுது...
குரு, சுக்கிரன் ஆகிய இரண்டு சுப கிரகங்களும் மீன ராசியில் இருப்பதால், பஞ்ச மகா புருஷ யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகமானது பல ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது.
கிரகங்களின் இயக்கம் மற்றும் அதன் சேர்க்கை மனித வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பொதுவாக கிரகங்கள் ராசியை மாற்றும் போது சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் இணைந்து பயணிக்க வேண்டியிருக்கும். இந்நிலையில் அந்த கிரகங்களின் சேர்க்கையால் யோகங்கள் உருவாகும். அது சுப அல்லது அசுப யோகங்களாக இருக்கலாம். அந்த வகையில் 2023 பிப்ரவரி 15 ஆம் தேதி சுக்கிரன் குரு ஆளும் மீன ராசிக்கு சென்றுள்ளார். இந்த மீன ராசியில் ஏற்கனவே குரு பயணித்து வருகிறார்.

பொதுவாக குரு பகவான் தனது சொந்த ராசிகளான தனுசு மற்றும் மீனத்தில் இருந்தால் அல்லது உச்சம் பெறும் ராசியான கடக ராசியில் இருந்தால், அப்போது ஹம்ச யோகம் ஏற்படும். அதேப் போல் சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசியில் இருந்தால் அல்லது மீன ராசியில் உச்சம் பெற்றிருந்தால், அப்போது மாளவியா யோகம் ஏற்படும். இந்த இரண்டு சுப கிரகங்களும் மீன ராசியில் இருப்பதால், பஞ்ச மகா புருஷ யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகமானது பல ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது. இப்போது இந்த யோகத்தால் எந்த ராசிக்காரர்களின் கனவுகள் நனவாகப் போகிறது என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் குரு-சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். இதுவரை உங்கள் வேலையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். புதிய தொழில் தொடங்க சிறந்த காலம்.

கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் குரு-சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் கன்னி ராசிக்காரர்கள் நல்ல பண வரவைப் பெறுபார்கள். வியாபாரிகள் தங்கள் தொழிலில் நல்ல லாபத்தைக் காண்பார்கள். முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். வீட்டில் பொருள் செல்வம் அதிகம் சேரும் வாய்ப்புள்ளது.

தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் குரு-சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவார்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கு. வியாபாரிகளுக்கு இக்காலத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு, இக்காலம் அற்புதமான காலமாகும்.

மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் குரு-சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் பல வழிகளில் இருந்து பணம் வரும். புதிய தொழில் தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் உகந்ததாக இருக்கும். இக்காலத்தில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். பழைய கடன்கள் அனைத்தும் அடைத்துவிடுவீர்கள். குடும்ப சூழல் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
