Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
கும்ப ராசியில் குரு-சூரிய சேர்க்கையால் ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
2022 பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்குள் நுழைந்தார். ஏற்கனவே குரு கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த இரண்டு கிரகங்களும் மார்ச் 14 ஆம் தேதி வரை ஒன்றாக கும்ப ராசியில் பயணிப்பார்கள்.
பொதுவாக இரண்டு கிரகங்களின் சேர்க்கை ஒருவரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்கள் மோசமான பலன்களையும் பெறலாம். கிரகங்களில் குரு மற்றும் சூரியன் ஆகிய இரண்டு ஆண் கிரகங்கள் மற்றும் ஜோதிடத்தின் படி, இந்த கிரகங்களும் 2022 பிப்ரவரி மாதத்தில் இணைகின்றன.

அதில் 2022 பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்குள் நுழைந்தார். ஏற்கனவே குரு கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த இரண்டு கிரகங்களும் மார்ச் 14 ஆம் தேதி வரை ஒன்றாக கும்ப ராசியில் பயணிப்பார்கள். இப்படி குருவும் சூரியனும் ஒன்றாக கும்ப ராசியில் பயணிப்பதால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறுவார்கள் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் குரு-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நிதி நிலைமை சராசரியாக இருக்கும். பணிபுரிபவர்கள் அல்லது வியாபாரிகளுக்கு இக்காலம் சற்று கடினமாக இருக்கும். திருமணமான தம்பதிகள் ஒன்றாக அதிக நேரத்தை செலவிட வாய்ப்புள்ளது. சிவனை வழிபடுவது இந்த ராசிக்காரர்களுக்கு நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் குரு-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் நோய்வாய்ப்படுவற்கான வாய்ப்புள்ளது. ஆகவே கவனமாக இருங்கள். நிதி ரீதியாக, சிக்கலில் சிக்க வாய்ப்புள்ளதால் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்பவர்களுக்கு அல்லது வியாபாரம் செய்பவர்களுக்கு நேரம் சராசரியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் விநாயரை வணங்கினால் நற்பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் குரு-சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சில உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நிதி நிலை மேம்படும். வியாபாரிகள் அல்லது பணிபுரிபவர்ள் புதிய வாய்ப்புக்களைப் பெறலாம். தம்பதிகளிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் விஷ்ணுவை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் குரு-சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. உங்களைச் சுற்றி நடப்பதை கவனியுங்கள். புதிய முதலீடு எதையும் செய்யாதீர்கள். வியாபாரம் மற்றும் பணிபுரிபவர்கள், தங்கள் பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமணமான தம்பதிகள் தங்களின் உறவை வலுப்படுத்த வாய்ப்புள்ளது. இந்த ராசிக்காரர்கள் நற்பலன்கள் கிடைக்க அனுமனை வழிபட வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் குரு-சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. நிதி நிலைமை சராசரியாக இருக்கும். பணிபுரிபவர்கள் அல்லது தொழில் செய்பவர்கள், தங்களின் அதிக செயல்திறனை காட்ட வாய்ப்புள்ளது. திருமணமான தம்பதிகளுக்கு நேரம் நன்றாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் விநாயரை வணங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் குரு-சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் ஆரோக்கியம் அவ்வளவு நன்றாக இருக்காது. இந்த சேர்க்கையால் நிதி நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். கிடைக்கக்கூடிய ஆதாரங்களைக் கொண்டு முயற்சி செய்து நிர்வகிக்கவும். யாரிடமும் கடன் வாங்கிவிடாதீர்கள். திருமணமான தம்பதிகள் தங்கள் உறவை வலுப்படுத்த சரியான காலம் இது. இந்த ராசிக்காரர்கள் விஷ்ணுவை வழிபடுவது நல்லது.

துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் குரு-சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் அல்லது வியாபாரிகள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தம்பதிகள் தங்களின் எதிர்கால திட்டங்களை நிறைவேற்றுவதற்கான சரியான காலம். இந்த ராசிக்காரர்கள் துர்கை அம்மனை வழிபடுவது மிகவும் நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் குரு-சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் உடல் ரீதியாக அல்லாமல் மன ரீதியாக பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். தியானம், யோகா போன்றவற்றை செய்தால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். அதே வேளையில் இக்காலத்தில் சில நிதி பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி, தங்கள் செயல்பாடுகளில் கவனம் செலுத்தாவிட்டால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தம்பதிகளிடையே சிறிய விஷயங்கள் பெரிய பிரச்சனையாக மாறலாம். பிரச்சனைகளைத் தவிர்க்க இந்த ராசிக்காரர்கள் அனுமனை வழிபடுவது நல்லது.

தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் குரு-சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் எந்தவொரு நிதி விஷயங்களிலும் எச்சரிக்கையாக இருங்கள். வணிகம் அல்லது தொழிலுக்கான புதிய பொறுப்புகள் குறித்து புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுங்கள். எந்த ஒரு உறவுகளிலும் அமைதியும் நல்லிணக்கமும் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் சிவபெருமானை வழிபடுவது நல்லது.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் குரு-சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் சில உடல்நல பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. சில காரணங்களால் அதிகப்படியான செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், உங்கள் நிதிகளை கவனமாக நிர்வகிக்கவும். சொந்தமாக தொழில் செய்பவர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த ராசிக்காரர்கள் அனுமனை வழிபட்டு வந்தால் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் குரு-சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் மன அல்லது உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். பழைய முதலீடுகளில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. புதிய முதலீடு அல்லது முயற்சியை இறுதி செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. தொழில் ரீதியாக இக்காலம் சாதகமாக இல்லை. திருமணமான தம்பதிகள் தங்கள் துணையின் ஆதரவைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இந்த ராசிக்காரர்கள் சிவனை வழிபடுவது நல்லது.

மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் குரு-சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம். வருமானத்தை விட கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான காலமாகும். திருமணமான தம்பதிகளுக்கு ஒன்றாக நேரத்தைக் கழிக்க சிறந்த காலமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் விநாயகரை வணங்கினால் அனைத்து பிரச்சனைகளையும் தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications
