Latest Updates
-
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்!
குரு உதயமாவதால் ஏப்ரல் 12 வரை இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமான காலம்.. உங்க ராசி இதுல இருக்கா?
குரு பகவான் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அஸ்தமனமானார். தற்போது மார்ச் 26 ஆம் தேதி மாலை 6.38 மணிக்கு உதயமாகிறார். குரு பகவான் உதயமாகும் போது குறிப்பிட்ட ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களிலேயே குரு மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருந்தால், அவர்கள் எப்போதும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் சந்தோஷமான திருமண வாழ்க்கையை பெற்றிருப்பார்கள். இம்மாதிரியான சூழ்நிலையில் குரு ராசி மாற்றம், குரு அஸ்தமனம் அல்லது உதயம் போன்றவை ஒருவரது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இப்படிப்பட்ட குரு பகவான் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அஸ்தமனமானார். தற்போது மார்ச் 26 ஆம் தேதி மாலை 6.38 மணிக்கு உதயமாகிறார். வேத ஜோதிடத்தின் படி, குரு அஸ்தமிக்கும் போது அதன் தாக்கம் குறைய தொடங்கும். அதே வேளையில் குரு உதயமாகும் போது, நற்பலன்கள் கிடைக்க ஆரம்பிக்கும். அதுவும் தற்போது கும்ப ராசியில் அஸ்தமனமாகியுள்ள குரு பகவான் உதயமாகும் போது குறிப்பிட்ட ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆம் வீட்டில் குரு உதயமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். அதுவும் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். இதனால் அதிக பணத்தை சம்பாதிப்பார்கள். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் குரு உதயமாகிறார். இதனால் தொழில் ரீதியாக இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத லாபம் பெற வாய்ப்புள்ளது. ஏதேனும் பெரிய வேலையைத் தொடங்க விரும்பினால் அல்லது புதிய தொழிலைத் தொடங்க விரும்பினால், அதற்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் குரு உதயமாகிறார். இதனால் தொழிலில் நல்ல முடிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகளும் வெற்றி பெறும். மாமியார் பக்கத்திலிருந்தும் ஆதரவைப் பெறுவீர்கள்.

துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் குரு உதயமாகிறார். இந்த குருவின் உதயம் துலாம் ராசிக்காரர்களுக்கு எல்லா வகையிலும் நன்மை தரும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இக்காலம் நல்ல காலம். மேலும் வேலை செய்பவர்களுக்கு மிகவும் சாதகமான காலம்.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் குரு உதயமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும் மற்றும் பணம் சம்பாதிக்க பல வாய்ப்புக்கள் கிடைக்கும். நீதிமன்றத்தின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் இக்காலத்தில் முடிவுக்கு வரும். குடும்பத்தில் யாரேனும் சில நாட்களாக கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தால், இக்காலத்தில் அதிலிருந்து விடுபடுவார்கள். இதனால் உங்களின் மருத்துவ செலவுகள் குறையும்.



Click it and Unblock the Notifications
