Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
மீனத்தில் குரு வக்ரமாவதால் நவம்பர் வரை இந்த 4 ராசிகளுக்கு அதிக பிரச்சனை வரப்போகுது.. கவனமா இருங்க...
குருவின் வக்ர பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், 4 ராசிகளில் அதன் தாக்கம் சற்று மோசமானதாக இருக்கும். ஜூலை 29 அன்று குரு வக்ரமாவதால் அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார்?
ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் சுப கிரகமான குரு அனைத்து மக்களின் வாழ்விலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அதுவும் குரு ஒரு ராசியில் வக்ரமாகும் போது, அது தொழில் மற்றும் நிதியை பாதிப்பதோடு, சிலரின் திருமண வாழ்க்கையையும் மோசமாக பாதிக்கிறது. தற்போது குரு பகவான் சொந்த ராசியான மீன ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் 2022 ஜூலை 29 ஆம் தேதி மீன ராசியில் வக்ரமாகிறார். குருவின் வக்ர பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், 4 ராசிகளில் அதன் தாக்கம் சற்று மோசமானதாக இருக்கும். இப்போது ஜூலை 29 அன்று குரு வக்ரமாவதால் அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக பல சவால்களை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கை பாதிக்கப்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தம்பதிகளுக்குள் பரஸ்பர ஒற்றுமையின்மை காரணமாக சண்டைகள் அதிகரிக்கும். சரியான தொடர்பு இல்லாததால் வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையும். வாழ்க்கைத் துணையுடன் ஈகோ பிரச்சனை அதிகரிக்கும்.
பரிகாரம்: குருவின் மோசமான தாக்கத்தைத் தவிர்க்க, வியாழக்கிழமைகளில் குருவை தவறாமல் வழிபடுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் குரு வக்ர காலத்தில் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கலாம். குறிப்பாக திருமண வாழ்க்கை மோசமாக பாதிக்கப்படும். உங்கள் குழந்தைகளால் சில அசௌகரியங்கள் ஏற்படலாம். உங்கள் குழந்தைகளின் கல்வியைப் பற்றி கவலைப்படுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு நன்றாக இருக்காது.
பரிகாரம்: குரு வக்ர பெயர்ச்சியின் மோசமான தாக்கத்தைத் தவிர்க்க 'ஓம் குருவே நமஹ' என்ற மந்திரத்தை தினமும் உச்சரிக்கவும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தொழிலில் கலவையான முடிவுகளைப் பெற்றாலும், திருமண வாழ்க்கையில் உங்கள் துணையுடனான உறவு பாதிக்கப்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இருக்கும் இக்காலத்தில் உங்கள் ஈகோ அதிகரிக்கும். நிதி பிரச்சனைகள் காரணமாக, துணையுடனான உறவில் விரிசல் ஏற்படலாம். உங்கள் துணையுடனான இணக்கம் மோசமடையலாம்.
பரிகாரம்: 'ஓம் நம சிவாய' என்னும் மந்திரத்தை தினமும் உச்சரித்தால், குருவின் மோசமான தாக்கத்தைத் தவிர்க்கலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு குரு அசுப பலன்களைத் தருவார். இக்காலத்தில் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் ஏற்படலாம். இது பரஸ்பர புரிதல் இல்லாததால் இருக்கலாம். எனவே பாதகமான சூழ்நிலை ஏற்படும் போது கொஞ்சம் அனுசரித்து செல்வது நல்லது.
பரிகாரம்: 'ஓம் பிருஹஸ்பதயே நமஹ' என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்ல வேண்டும்.

குரு தோஷத்திற்கான பரிகாரம்
குருவினால் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவும் சில பரிகாரங்கள் உள்ளன. அவை பின்வருமாறு...
* வியாழக்கிழமைகளில் வெல்லம் மற்றும் பருப்பை தானம் செய்யவும்.
* புஷ்பராகம் மோதிரத்தை ஆள்காட்டி விரலில் அணிவது நல்லது. அதுவும் இந்த மோதிரத்தை வியாழக்கிழமைகளில் அணியுங்கள்.
* விஷ்ணு பகவானை வணங்கி விஷ்ணு சகஸ்ரநாமத்தை சொல்லவும்.
* பரமேஷ்வரரை வணங்கி சிவலிங்கத்திற்கு தினமும் நெய் தீபம் ஏற்றுங்கள். இது குருவின் தீய விளைவுகளை சமாளிக்க சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.
* ஏழைகளுக்கு உதவி, சமூக சேவைகளில் ஈடுபடுங்கள் மற்றும் பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள்.
* 'ஓம் க்ராம் கிரீம் க்ரோம் சஹ குருவே நமஹ' என்ற குரு மந்திரத்தை தினமும் 28 அல்லது 108 முறை சொல்லுங்கள்.



Click it and Unblock the Notifications