Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
குரு பகவானால் அடுத்த ஒரு மாதத்திற்கு இந்த ராசிக்காரங்க அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போறாங்க..
குரு 2022 பிப்ரவரி 19 ஆம் தேதி சனிக்கிழமை காலை 11.13 மணிக்கு கும்ப ராசியில் எரியும் நிலையில் பயணிக்க ஆரம்பித்து, 2022 மார்ச் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.35 மணிக்கு இயல்பு நிலைக்கு திரும்புகிறார்.
வேத ஜோதிடத்தில், அறிவு மற்றும் அதிர்ஷ்டத்துடன் தொடர்புடைய கிரகம் தான் குரு/வியாழன். ஒருவரது ஜாதகத்தில் குரு வலுவாக இருந்தால், அவர் நல்ல இயல்பு மற்றும் குணங்களைக் கொண்டிருப்பார். மேலும் அந்நபர் பொருளாதார ரீதியாக சிறந்த நிலையில் இருப்பார். எப்போது ஒரு கிரகம் சூரியனுக்கு அருகில் 10 டிகிரிக்குள் இணைந்திருக்கிறதோ, அந்நிலை எரியும் நிலை என்று அழைக்கப்படுகிறது.

குரு 2022 பிப்ரவரி 19 ஆம் தேதி சனிக்கிழமை காலை 11.13 மணிக்கு கும்ப ராசியில் எரியும் நிலையில் பயணிக்க ஆரம்பித்து, 2022 மார்ச் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.35 மணிக்கு இயல்பு நிலைக்கு திரும்புகிறார். இப்படி எரியும் நிலையில் குரு இருப்பது 12 ராசிகளையும் பாதிக்கும். சிலருக்கு நல்ல காலமாக இருந்தாலும், சிலருக்கு சவாலான காலமாக இருக்கும். இப்போது கும்ப ராசியில் குரு எரியும் நிலையில் பயணிக்கும் போது ஒவ்வொரு ராசிக்காரர்களும் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க தாமதமாகலாம். கடினமாக உழைத்து வந்தாலும், உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இக்காலத்தில் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் அதிலிருந்து எவ்வித நற்பலன்களும் கிடைக்காது மற்றும் மன அழுத்தம் தான் அதிகரிக்கும். இக்காலத்தில் பணத்தை சிறந்த முறையில் சேமிக்க முயற்சி செய்யுங்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சிறிது அட்ஜஸ்ட் செய்து வாழ வேண்யிருக்கும். இக்காலத்தில் சில நம்பிக்கையின்மையுடன் இருப்பீர்கள். ஆனால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இக்காலத்தில் எந்த முயற்சிகளை எடுத்தாலும், அதில் தடைகள் ஏற்பட்டு அதிருப்தியை உண்டாக்கும். தொழிலைப் பொறுத்தவரை, உங்கள் வேலையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கமாட்டீர்கள். ஆகவ உங்கள் வேலையை சிறப்பாக திட்டமிட வேண்டும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்காது. ஆகவே அதிகம் செலவழிக்காமல், பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள். புரிதலின்மையின் காரணமாக தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது மற்றும் தூக்கமின்மையால் அவதிப்படுவீர்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்காது. பாதுகாப்பற்றதாக உணர்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். ஆனால் உங்கள் பணியை முழுமையாக முடிக்க முடியாது. நீண்ட தூர பயணங்களால் உங்கள் வேலை பாதிக்கப்படலாம். புதிய தொழிலதிபர்கள் முதலீடு செய்யும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். இக்காலத்தில் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறாமல் போகலாம். நிதியைப் பொறுத்தவரை, போதுமான அளவு இருக்காது. சில பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும் மற்றும் நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்படுவீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்படலாம் என்பதால் சரியான உணவு மற்றும் உடற்பயிற்சியை தவறாமல் பின்பற்ற வேண்டும். வேலையில் பல தடைகளை சந்திக்கக்கூடும் மற்றும் கொடுத்த வேலையை முடிக்க முடியாமல் போகும். இக்காலத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. வணிகர்கள் புதிதாக முதலீடு செய்யும் முன் யோசிக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உங்களால் போதுமான பணத்தை சேமிக்க முடியாமல் போகலாம். உங்கள் துணையுடன் சரியான தகவல்தொடர்பு இல்லாததால் பிரச்சனைகள் ஏற்படலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இக்காலத்தில் அவர்களின் நற்பெயரைக் கெடுக்கலாம். பணியிடத்தில் மேலதிகாரிகளிடமிருந்து அங்கீகாரம் கிடைக்காமல் போகும். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். வியாபாரிகள் லாபத்திற்கு பதிலாக நஷ்டம் ஏற்படாமல் இருக்க வேகத்தைக் குறைக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கும். ஈகோ தொடர்பான சில சிக்கல்கள் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டியிருக்கும், ஏனெனில் அவர்கள் சில நாள்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் பணியிடத்தில் வேலைச்சுமை மற்றும் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இக்காலத்தில் புதிய வேலையை தேடுவீர்கள். வியாபாரிகளுக்கு இது நல்ல நேரம் இல்ல. நஷ்டத்தை சந்திக்க நேரிடும். செலவுகள் அதிகமாக இருக்கும். இக்காலத்தில் பணத்தை செலவழிக்கும் முன் நீங்கள் திட்டமிட வேண்டும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்கள் வாழ்க்கை துணையுடன் உங்களுக்கு சில பிரச்சனைகள் இருக்கலாம். இதனால் தேவையற்ற மன அழுத்தம் ஏற்படலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்காது. கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்காது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு பாதிக்கப்படும். நிதி ரீதியாக, நிறைய பணத்தை இழக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, தவறான புரிதல்கள் காரணமாக வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகள் ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அலர்ஜி பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! உங்கள் பணியிடத்தில், நீங்கள் கடினமாக உழைத்தாலும் உங்கள் திறமைகள் பாராட்டப்படாது. உடன் பணிபுரிபவர்களுடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழிலதிபர்கள் புதிய திட்டங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவர்கள் லாபம் ஈட்ட முடியாது. செலவுகள் காரணமாக உங்கள் வருமானத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போகலாம். மேலும், தலைவலி, உங்கள் கால்கள் மற்றும் வயிற்றில் வலி போன்ற உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் உங்களுக்கு இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இக்காலம் கடினமாக இருக்கும். அதுவும் பணிபுரிபவர்கள் வேலையை இழக்கலாம் அல்லது வேறு இடத்திற்கு மாற்றப்படலாம். வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். எனவே முதலீடு செய்யும் போது அல்லது பணத்தை கையாளும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மூத்தவர்களுடன் பேசும் போது உங்கள் வார்த்தைகளை கவனித்துக் கொள்ளுங்கள். இக்காலத்தில் சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் மற்றும் அதற்காக பணத்தையும் செலவழிக்க வேண்டியிருக்கும். மேலும், உங்கள் வாழ்க்கை துணையுடன் சில பிரச்சனைகள் இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களே, பணியிடத்தில் உங்களுக்கும் உங்கள் மேலதிகாரிகளுக்கும் இடையே பிரச்சனைகள் இருக்கும். வணிகர்கள் அலட்சியத்தால் சில பணத்தையும் இழக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் துணையுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாமல் போகலாம். இது உங்கள் மன அழுத்தத்திற்கும் காரணமாக இருக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண்கள் மற்றும் தொடைகள் தொடர்பான சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இக்காலத்தில் நீங்கள் கடினமாக உழைத்தாலும், அதற்கான அங்கீகாரம் கிடைக்காமல் போகும் மற்றும் இது உங்கள் மன உளைச்சலுக்கு காரணமாக இருக்கும். பணியிடத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வணிகர்கள் நஷ்டங்களைத் தவிர்க்க புதிய திட்டங்களை நிறுத்த வேண்டும். நிதியைப் பொறுத்தவரை, வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். இதனால் பணத்தை சேமிக்க முடியாமல் போகலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலம் பாதிக்கப்படலாம். எனவே உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க சில சிகிச்சைகளை முயற்சி செய்யுங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களே! இக்காலத்தில் அதிகப்படியான வேலையின் காரணமாக மன அழுத்தத்தை உணரலாம். உங்கள் வேலையில் உங்களுக்கு திருப்தி இருக்காது. வணிகர்கள் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் முடிவுகளின் அடிப்படையிலேயே லாபம் மற்றும் நஷ்டம் ஏற்படலாம். உங்கள் துணையுடனான உங்கள் உறவைப் பற்றி நீங்கள் நன்றாக உணராமல் இருப்பீர்கள். உங்கள் குடும்பத்தில் பிரச்சினைகள் தொடர்ந்து இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது. ஆனால் ஆற்றல் பற்றாக்குறையினால் எப்போதும் மந்தமாக இருப்பீர்கள்.



Click it and Unblock the Notifications
