For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 5 ராசிக்காரங்கள 2022 வருஷம் வச்சு செய்யப்போகுதாம்... கடவுள்தான் காப்பாத்தணும் இவங்கள...!

|

உலகம் முழுவதும் மக்களை பாடாய்ப்படுத்திய 2021 ஆம் ஆண்டு முடிவுக்கு வரப்போகிறது. மக்கள் அனைவரும் புதிய ஆண்டை வரவேற்க ஆவலுடன் உள்ளனர். ஆனால் வரப்போகிற வருடம் அனைவருக்கும் ஒரே மாதிரியானதாக இருக்கப்போவதில்லை. ஒவ்வொருவரின் ராசிப்படியும் அவர்களின் வருட பலன்கள் மாறுபடும்.

இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 5 மாத குழந்தை உயிர் பிழைக்க உதவுங்கள் ப்ளீஸ்

சில ராசிக்காரர்களுக்கு வரப்போகிற 2022 ஆம் வருடம் அவர்கள் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாக இருக்கப்போகிறது. மறுபுறம், சில ராசிக்காரர்களுக்கு வரப்போகிற இந்த வருடம் துரதிர்ஷ்டத்தை வாரி வழங்கப்போகிற வருடமாக இருக்கப்போகிறது. இதனால் அவர்கள் அடுத்த வருடம் பல இன்னல்களை சந்திக்கப் போகிறார்கள். எந்தெந்த ராசிக்காரர்கள் இப்படி சிக்கப்போகிறார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மிதுனம்

மிதுனம்

இந்த ராசிக்காரர்கள் ஒரு ஆபத்தான அமைதியான அம்சத்தைக் கொண்டுள்ளது, அவர்கள் மிகவும் ஜென் தன்மையைக் கொண்டுள்ளவர்கள் என்பது நன்கு அறியப்பட்டதாகும், ஆனால் சிவப்புக் கோட்டைக் கடந்தவுடன் அவர்கள் திரும்புவதற்கு வழி இல்லை. இந்த சின்னம் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படுகிறது. 2022 ஆம் ஆண்டில் மிதுன ராசிக்காரர்கள் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும், அவை மிகவும் துரதிர்ஷ்டவசமான ஜோதிட அறிகுறிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் மாதமான ஜனவரியே உங்களுக்கு மோசமான மாதமாக இருக்கும். எதுவும் சரியாக நடக்காது, நட்சத்திரங்கள் உங்களுக்கு எதிராக இருப்பதால் உங்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடையும். இந்த வருடம் உங்களுக்கு இரண்டு சோதனையான காலகட்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம்

கடகம்

சக்திவாய்ந்த ராசிகளில் ஒன்றான கடகம் இந்த ஆண்டு பல இன்னல்களை சந்திக்க போகிறது. துரதிர்ஷ்டம் உங்களை துரத்துவதால் நீங்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பீர்கள். நீங்கள் எதிர்பாராத இடத்திலிருந்து செய்யப்படும் துரோகம், நீங்கள் கனவிலும் விரும்பாத பல நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும். இந்த ஆண்டு நீங்கள் பல எதிரிகளை சம்பாதிக்கப் போகிறீர்கள், குறிப்பாக உங்கள் பணியிடத்தில் உங்களுக்கு எதிரான நிகழ்வுகள் நிறைய நடக்கலாம். யாருடடைய சவாலையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏனெனில் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கப்போவதில்லை. இந்த ஆண்டை கடக்க உங்களுக்கு அளவற்ற வலிமை தேவை.

MOST READ: இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகள் புதிய கொரோனா பிறழ்வான ஓமிக்ரானைத் தடுக்குமா? ஆய்வுகள் சொல்வது என்ன?

மீனம்

மீனம்

மிகவும் மென்மையான ராசிக்காரர்களான மீன ராசிக்காரர்கள் இந்த ஆண்டு கடுமையான சூழ்நிலைகளை சந்திக்கப் போகிறார்கள். பெரிய மனவருத்தம், மன்னிக்க முடியாத தவறுகள், மோசமான தேர்வுகள், தீர்க்க முடியாத சிக்கல்கள் என இந்த ஆண்டு முழுவதும் அவர்கள் பல இடையூறுகளை சந்திப்பார்கள். பல தருணங்களில் அதிர்ஷ்டம் அவர்களிடம் இருந்து பல மைல் தொலைவில் இருக்கும். அக்டோபர் மாதம் அவர்கள் நிலை அதள பாதாளத்திற்குச் சென்றுவிடும். தாங்கள் தொலைந்து போய்விட்டதாக அவர்களே உணர்வார்கள், அவர்களை காப்பாற்றவும் யாரும் இருக்க மாட்டார்கள். அடுத்த ஆண்டு வரும் குருபெயர்ச்சிக்குப் பிறகு அவர்களின் சிக்கல்களில் சில தீர்வைக் காணலாம். அதுவரை அவர்கள் எதிர்நீச்சல் போட்டுத்தான் ஆகவேண்டும்.

மகரம்

மகரம்

இந்த ஆண்டு மகர ராசிக்காரர்கள் நிதிரீதியாக மட்டுமின்றி நம்பிக்கைரீதியாகவும் பல சோதனைகளை சந்திக்கப் போகின்றனர். மிகுந்த நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் அவர்கள் வருடத்தை எதிர்கொள்ள தயராகலாம், ஆனால் எதுவும் அவர்களுக்கு உதவப்போவதில்லை. அவர்களின் மோசமான தேர்வுகளாலும், பிடிவாதத்தாலும் தொடர் தோல்விகளை சந்திக்க வாய்ப்புள்ளது. உங்களின் முதலீடுகள் நஷ்டத்தை ஏற்படுத்துவதுடன் உங்களின் சேமிப்பும் கரைய வாய்ப்புள்ளது. நீங்கள் எதிர்பாராத கெட்ட செய்திகள் ஆண்டின் நடுப்பகுதியில் தேடிவரலாம். காதல் வாழ்க்கை வருடத்தின் முதல் பகுதியில் சிறப்பாக இருக்கும், ஆனால் இரண்டாம் பாதி மிகவும் மோசமானதாக இருக்கும்.

MOST READ: எத்தனை வயது இடைவெளியில் திருமணம் பண்ணுனா கல்யாண வாழ்க்கை செமையா இருக்கும் தெரியுமா? பாத்து பண்ணுங்க!

கும்பம்

கும்பம்

காதலில் பிரச்சினை, பணியிடத்தில் சிக்கல், அனைத்திலும் ஆர்வமின்மை, எதிர்காலம் பற்றிய குழப்பம் என இந்த ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் கடினமான ஆண்டாக இருக்கப்போகிறது. புதிதாக காதலிப்பவர்கள் பெரும்பாலும் தவறான துணையைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் வரும்காலங்களில் தீவிர மனஉளைச்சலை சந்திக்க நேரிடும். ஜூலை மாதத்திற்கு பிறகு உங்களின் நிலை மேலும் மோசமாகும். தற்போது இருக்கும் வேலையில் பணிச்சுமை அதிகரிக்கலாம், கிரக மாற்றங்கள் சாதகமாக இல்லாததால் புதிய வேலையும் இப்போதைக்கு கிடைக்க வாய்ப்பில்லை. எந்த சூழ்நிலையிலும் உங்கள் நேர்மையை விட்டுவிடாதீர்கள், அதுமட்டும்தான் எதிர்காலத்தில் உங்களைக் காப்பாற்றும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Horoscope 2022: Unluckiest Zodiac Signs in 2022 in Tamil

Horoscope 2022: Read to know which are the unluckiest zodiac signs in 2022.