Latest Updates
-
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும்
நீங்க இன்ஜினியருக்கு படிச்சிருக்கீங்களா?அப்ப இது உங்களுக்கான செய்திதான்... மிஸ் பண்ணாம படிங்க..!
Happy Engineers' Day In Tamil: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி இந்தியாவில் பொறியாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள பொறியாளர்களின் முக்கியத்துவம் மற்றும் மதிப்புமிக்க பங்களிப்பை எடுத்துக்காட்டும் நாள் இது.
இந்த நாள் உண்மையில் சர் எம்வி விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளைக் குறிக்கிறது. இவர் புகழ்பெற்ற இந்திய பொறியாளர் ஆவார். இவர் கர்நாடக மாநிலம் சிக்கபல்லபுரா மாவட்டத்திலுள்ள முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் 1861ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பிறந்தார்.

ஆரம்பப் படிப்பை முடித்த பிறகு, சர் விஸ்வேஷ்வர்யா உயர் படிப்புக்காக பெங்களூரு சென்றார். கலையில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, புனேவில் உள்ள பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் முடித்தார். பொறியியல் படிப்பு முடித்ததும் விஸ்வேஸ்வரய்யா மும்பை பொதுப் பணித்துறையில் பணிக்கு சேர்ந்தார். பின்னர், இந்தியாவின் பிரபலமான பொறியாளராக திகழ்ந்தார்.
விஸ்வேஷ்வர்யாவின் செயல்பாடுகளை பாராட்டும் வகையில், இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1955இல் வழங்கப்பட்டது. இவர் நினைவாக செப்டம்பர் 15 இந்தியாவில் பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இவர் பிறந்த மாநிலமான கர்நாடகாவில் செப்டம்பர் 15 பொது விடுமுறை நாளாகும். இந்த பொறியாளர் தினத்தில், உங்களைச் சுற்றியுள்ள இன்ஜினியர்களுக்கு நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய சில மேற்கோள்கள், செய்திகள் மற்றும் வாழ்த்துக்களை இக்கட்டுரையில் காணுங்கள்.

வாழ்த்து 1
இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்!

வாழ்த்து 2
பொறியாளர் தின நல்வாழ்த்துக்கள்

வாழ்த்து 3
உலகிற்கு தேவையான பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து வழங்கும் இன்ஜினியர்களுக்கு இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4
இன்ஜியர்கள் இல்லையென்றால் இவ்வுலகில் நவீன தொழில்நுட்பங்கள் ஏதுமில்லை. இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்!

வாழ்த்து 5
பொறியியல் முடிவடையும் இடத்தில் கட்டிடக்கலை தொடங்குகிறது. அனைத்து இன்ஜினியர்களுக்கும் இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்!

வாழ்த்து 6
எங்கள் வாழ்க்கையை உண்மையிலேயே மாற்றிய உங்கள் சிறந்த யோசனைகள் மற்றும் புதுமைகளுக்கு நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம். பொறியாளர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7
பொறியாளர்கள் இல்லாமல் எந்த நாடும் முழுமையடையாது. அனைத்து இன்ஜினியர்களுக்கும் இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8
சோர்வுற்று கடினமாக உழைத்து உரிமம் பெற்ற நிபுணர்களின் கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றலால் நாம் அனைவரும் மகிழ்ச்சியடைவோம். நீங்கள் உண்மையில் அற்புதமானவர்கள்! இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9
உலகத்தால் நம்மை மாற்ற முடியாது, ஆனால் நம்மால் உலகை மாற்ற முடியும்! உங்களிடம் புத்தகங்கள் இல்லை, ஆனால் மனதில் புரட்சிகர யோசனைகள் உள்ளன! இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்

வாழ்த்து 10
பொறியாளர்கள் தங்கள் பேனா மற்றும் மூளை மூலம் உலகைக் கண்டறியும் நபர்கள். பொறியாளர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 11
பொறியியல் என்பது 45 பாடங்களைப் படிப்பது மட்டுமல்ல, அறிவார்ந்த வாழ்வின் தார்மீக ஆய்வுகள் ஆகும். இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்!



Click it and Unblock the Notifications
