Latest Updates
-
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
Hanuman Jayanti 2022: கஷ்டங்கள் தீர ராசிப்படி அனுமனை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?
ஒவ்வொரு ராசிக்கேற்றவாறு அனுமனை வழிபட்டால், இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம். இப்போது ராசிப்படி ஒவ்வொரு ராசிக்காரரும் எப்படி அனுமனை வழிபட வேண்டும் என்பதைக் காண்போம்.
Hanuman Jayanti 2022: அஞ்சனையின் மைந்தனான அனுமன் பிறந்த தினம் தான் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அனுமன் வலிமை, வீரம், துணிச்சல், குறும்புத்தனம், அறிவு, புகழ் என அனைத்தையும் தன்னுள் கொண்டவராவார். மேலும் அனுமன் ராமரின் தீவிர பக்தர். அனுமனின் அருளைப் பெற்றிருந்தால், வாழ்வில் உள்ள துன்பங்கள், துயங்கள் அனைத்தும் நீங்கி, நன்மைகள் தேடி வரும்.

இப்படிப்பட்ட அனுமன் மார்கழி மாதத்தில் வரும் அமாவாசை திதியும், மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் பிறந்தார். இந்த அனுமன் ஜெயந்தி இந்தியாவில் பல தேதிகள் கொண்டாடப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 2022 டிசம்பர் 23 ஆம் தேதி, அதாவது இன்று தான் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அனுமன் பிறந்த நாளில் அவருக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைத்து, அவரை வணங்கினால், அவரது அருளைப் பெறலாம்.
இது தவிர, ஒவ்வொரு ராசிக்கேற்றவாறு அனுமனை வழிபட்டால், இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம். இப்போது ராசிப்படி ஒவ்வொரு ராசிக்காரரும் எப்படி அனுமனை வழிபட வேண்டும் என்பதைக் காண்போம். இந்த வழிபாட்டை அனுமன் ஜெயந்தி அன்று மட்டும் பின்பற்றாமல், மற்ற தினங்களிலும் மேற்கொண்டால், வாழ்நாள் முழுவதும் அனுமனின் ஆசியைப் பெறலாம்.

மேஷம்
செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர்கள், செந்தூரத்தை அனுமக்கு படைத்து வழிபடுவது நல்லது. குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமனை வழிப்பட்டால், சிறப்பான பலன்களைப் பெறலாம்.

ரிஷபம்
சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப ராசிக்காரர்கள், அனுமனின் ஆசியைப் பெற நினைத்தால், தினமும் ஒருமுறையாவது அனுமன் சாலிசாவை பாராயணம் செய்ய வேண்டும். இதனால் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் அனுமன் விடுவித்து, நல்ல ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் வழங்குவார்.

மிதுனம்
புதனை அதிபதியாக கொண்ட மிதுன ராசிக்காரர்கள் பிறப்பிலேயே அனுமனின் ஆசியைப் பெற்றிருப்பதால், இந்த ராசிக்காரர்கள் தினமும் அனுமனை மனதார வணங்குவதாடு, லட்டுவை பிரசாதமாக வழங்கலாம்.

கடகம்
சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசிக்காரர்கள் அனுமனின் அருளைப் பெற சிவப்பு நிற உடையை வாங்கி கொடுங்கள். இதனால் அவரை மகிழ்வித்து, அவரின் அருளைப் பெறலாம்.

சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். ஏற்கனவே சூரியன் அனுமனின் குருவாக கருதப்படுகிறார். எனவே அனுமனின் அருளைப் பெற, சிம்ம ராசிக்காரர்கள் ஸ்ரீ ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து, ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.

கன்னி
புதனை அதிபதியாக கொண்ட கன்னி ராசிக்காரர்கள், அனுமனின் பரிபூர்ண ஆசீர்வாதத்தைப் பெற, 108 முறை அனுமன் சாலிசாவை பாராயணம் செய்ய வேண்டும். இதனால் வாழ்வில் உள்ள தடைகள் மற்றும் இன்னல்கள் நீங்கும்.

துலாம்
சுக்கிரனை அதிபதியாக கொண்ட துலாம் ராசிக்காரர்கள், அனுமனின் அருளைப் பெற நோய்களில் இருந்து விடுபட்டு, வாழ்வில் செல்வமும் வெற்றியையும் பெற, ராமசரிதமானஸின் பால்கண்டத்தை படிக்க வேண்டும்.

விருச்சிகம்
செவ்வாயை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள், ஓம் ஸ்ரீ ஹனுமதே நம என்று ஒரு நாளைக்கு எவ்வளவு முறை சொல்ல முடியுமோ, அவ்வளவு முறை சொல்வதன் மூலம், நோய்களில் இருந்து விடுபட்டு, அனுமனின் அருளைப் பெறலாம்.

தனுசு
குருவை அதிபதியாக கொண்ட தனுசு ராசிக்காரர்கள் ஏற்கனவே அனுமனின் அருளைப் பெற்றவர்கள் என்பதால், இவர்கள் 'ஸ்ரீ சீதா ராம்' என்று சொல்வதன் மூலமும், கோவிலில் ராமர் சரித மானஸ் தானம் செய்வதாலும், அனுமனின் அருளால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம்.

மகரம்
சனியை அதிபதியாக கொண்ட மகர ராசிக்காரர்கள், அரச மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் தீபத்தை ஏற்றி அனுமனை வழிபட வேண்டும். மேலும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த தீபத்தை ஏற்றி அனுமன் சாலிசாவைப் பாராயணம் செய்தால், இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் அதிபதியும் சனி ஆவார். எனவே இந்த ராசிக்காரர்கள் அனுமனை கவரவும், வாழ்வில் அன்பு, அமைதி மற்றும் மகிழ்ச்சியைப் பெறவும், தன்னால் இயன்ற வரை 'ராம், ராம், ராம்' என்று சொல்ல வேண்டும்.

மீனம்
மீன ராசியின் அதிபதி குரு ஆவார். எனவே மீன ராசிக்காரர்கள் 'ஓம் ஸ்ரீ ஹனுமதே நம' என்ற மந்திரத்தை தினமும் சொல்ல வேண்டும். இதனால் அனுமனின் அருளால் வாழ்வில் வெற்றியும், செல்வமும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications