Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
குரு பெயர்ச்சி 2019 - 20: விருச்சிகம் லக்னகாரர்களுக்கு பணவரவை அள்ளித்தரும் குடும்ப குரு
குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. குரு பகவான் சுப கிரகம் என்பதால் யாருக்கும் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். குரு நின்ற இடம் பாழ் என்றும் பார்க்கும் இடம் சுபிட்சம் அடையும் என்று சொன்னாலும் இம்முறை கு
நவகிரகங்களில் குருபகவான் சுப கிரகம். குரு பெயர்ச்சியை அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். வாக்கியப்பஞ்சாங்கப்படி அக்டோபர் 29ஆம் தேதி குருப்பெயர்ச்சி நிகழப்போகிறது. விருச்சிகத்தில் இருந்து தனசு லக்னத்தில் அமரப்போகிறார் குரு பகவான். விருச்சிக லக்னத்திற்கு தன வாக்கு ஸ்தானம். இரண்டாம் வீட்டு அதிபதி இரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். இந்த குரு பெயர்ச்சியால் விருச்சிக லக்ன காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
குரு அமரும் இடத்தைப் போல குரு பார்க்கும் இடமும் அற்புதமாக அமைந்துள்ளது. குரு பார்வை தனுசு ராசியில் இருந்து மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய லக்னங்களின் மீது விழுகிறது. குருவின் பார்வை உங்க லக்னத்திற்கு ருண ரோக சத்ரு ஸ்தானம், ஆயுள் ஸ்தானம், மற்றும் தொழில் ஸ்தானங்களின் மீது விழுகிறது.

இந்த குரு பெயர்ச்சியால் விருச்சிக லக்னகாரர்களுக்கு நிறைய பணவரவு இருக்கும். கடன்கள் அடைபடும். நோய்கள் இருந்தாலும் தீரும். நல்ல வேலைகள் கிடைக்கும். தொழில் தொடங்குவீர்கள் அபரிமிதமான வருமானமும் அதிர்ஷ்டமும் தேடி வரப்போகிறது. கடந்த பல ஆண்டுகாலமாக பட்ட கஷ்டங்கள் நீங்கும் காலம் வரப்போகிறது.

அதிர்ஷ்டம் தேடி வரும்
இந்த குரு பெயர்ச்சியால் விருச்சிக லக்னத்திற்கு ஜென்ம குரு இரண்டாம் வீட்டிற்கு நகர்வதால் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. குருபகவான் வெற்றியை தரப்போகிறார். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். பணவருமானம் அதிகரிக்கும். சுபிட்சம் அதிகம் ஏற்படும். ஆன்மீன பயணங்கள் அதிகம் செல்வீர்கள். சமுதாயத்திலும் இருக்கும் இடத்திலும் மதிப்பும் மரியாதை கூடும்.

கடன்கள் தீரும்
ஆறாம் வீட்டினை குரு பார்ப்பதால் உடல் நல பாதிப்புகள் தீரும். கடன்கள் தீரும். கஷ்டங்களுக்கு விடிவுகாலம் பிறக்கப் போகிறது. உடம்பில் வலிமை அதிகரிக்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும். வருமானம் ஒரு பக்கம் அதிகரிக்க அதே போல ஆரோக்கியமும் அதிகரிக்கும். ஆயுள் ஸ்தானத்தில் குரு பார்ப்பதால் ஆரோக்கியம் அதிகரிக்கும். தடைகள் நீங்கும். துரதிர்ஷ்டங்கள் உங்களை விட்டு ஓடிப்போகும். கண்டங்கள் விலகுவதோடு அவமானங்கள் தீரும். பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் நீங்கும். தாலி பாக்கியத்தை கொடுப்பார்.

குரு பார்வையால் நன்மை
பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் உங்களின் வேலையில், தொழிலில் இருந்த தொல்லைகள் நீங்கும். இந்த குரு பெயர்ச்சியால் உங்களுக்கு இருந்த கஷ்டங்கள் எல்லாம் தீரும் காலம் வரப்போகிறது. உங்களை எதிரிகளாக நினைத்தவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். குடும்ப குருவினால் திருமணம் சுபகாரியம் புது முயற்சிகள் கைகூடும்.

தொழில் ஸ்தானம் வளர்ச்சி
மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். கை நிறைய சம்பளமும் வரும். சிலர் வேலைக்காக வெளிநாட்டு பயணமும் செல்வீர்கள். படித்து தகுதிகேற்ற வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் கிடைக்கும். இந்த குருப்பெயர்ச்சி இருட்டில் சிக்கித் தவித்தவர்களுக்கு வெளிச்சம் கிடைக்கும் நிறைய நல்லது நடக்கும். விருச்சிக லக்னகாரர்கள் பிரதோச காலங்களில் சிவனையும் நந்தியையும் வழிபாடு செய்வது நல்லது. ராகவேந்திரரை வழிபட நன்மைகள் நடக்கும். திருசெந்தூர் முருகனை தரிசனம் செய்து வர நல்ல மாற்றங்கள் கிடைக்கும். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திடீர் திருப்பங்கள் ஏற்படும்.



Click it and Unblock the Notifications