Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
குரு பெயர்ச்சி: குரு பலத்தால் குழந்தை பாக்கியம் பெறப்போகும் ராசிக்காரர்கள்
குரு நின்ற இடம் பாழ் என்றும் பார்க்கும் இடம் சுபிட்சம் அடையும் என்பதால்தான் குரு பார்க்க கோடி நன்மைகள் என்று சொன்னார்கள். குரு பார்வையால் திருமண யோகமும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும். இந்த மாத இறுதிய
நவகிரகங்களில் குருபகவான் சுப கிரகம். குருவின் புண்ணியத்தால் திருமணம் நடக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு பார்க்க கோடி நன்மை கிடைக்கும். குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். தனுசு ராசியில் இருந்து குரு நேரடியாக மிதுனம் ராசியை பார்க்கிறார். குரு ஐந்தாம் பார்வையாக மேஷம் ராசியையும் ஒன்பதாம் பார்வையாக சிம்மம் ராசியை பார்க்கிறார். இந்த குரு பெயர்ச்சியால் குரு பலம் பெற்று குழந்தை பாக்கியம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
ஜோதிட ரீதியாக புத்திர பாக்கியம் சிறப்பாக அமைய பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் அருள் முக்கியம். குரு பகவான் புத்திர காரகன் என்பதால் அவர் பலமாக அமையப் பெறுவது முக்கியமானதாகும். அதுபோல 5ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும், கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும் சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும்.

ஓரு மனிதனுக்கு புத்திர ஸ்தானம் என்பது அவனது ஜாதகத்தில் உள்ள 12 கட்டங்களில் ஐந்தாவது கட்டமாகும். இதே கட்டம் தான் பூர்வபூண்ணியஸ்தானம். இதிலிருந்து முற்பிறப்பில் நல்ல புண்ணிய காரியங்களில் ஈடுபட்டிருந்தால் இப்பிறப்பில் நல்ல புத்திரம் கிடைக்கும் என்பதனை சூட்சுமமாக தெரிவிக்கும் பொருட்டே வைத்துள்ளார்கள். ஐந்தாமிட அதிபதி புத்திரஸ்தானாதிபதி. பிரகஸ்பதி என அழைக்கப்படும் குரு பகாவானை புத்திரகாரகன் என அழைக்கிறோம். நல்ல புத்திர பாக்கியம் கிடைக்க பாக்கிய ஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் இடத்தையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். குருவின் பார்வை ஐந்து மற்றும் ஒன்பதாம் இடங்களில் விழும் போது புத்திரபாக்கியம் கிடைக்கிறது.

புத்திர ஸ்தானம்
ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 5ம் பாவம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதை போலவே சந்திரனுக்கு 5ம் பாவமும் பலமாக அமைந்து விட்டால் குழந்தை பாக்கியம் அமைய எந்தத் தடையும் இருக்காது. அதுபோலவே 5ம் வீட்டையும், 5ம் வீட்டதிபதியையும் குரு பகவான் பார்வை செய்தால் குழந்தை செல்வம் சிறப்பாக அமைந்து மகிழ்ச்சியை உண்டாக்கும். 5ம் வீட்டில் சுப கிரகம் இருப்பதும், சுபர் பார்வை பெறுவதும் சிறப்பானது என்பது போல 5ம் அதிபதி பாவியாக இருந்தாலும் வலுப்பெற்று அமைந்து சுபர் பார்வை பெறுவது சிறப்பான புத்திர பாக்கியத்தை ஏற்படுத்தும். குரு பார்வை ஐந்தாம் வீட்டின் மீது விழுந்தால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ஆண் வாரிசு
நவகிரகங்களில் ஆண் கிரகங்களான குரு, சூரியன்,செவ்வாய் வலுப்பெற்று ஐந்தாம் வீட்டில் இருந்தாலும் ஐந்தாம் அதிபதியுடன் இருந்தாலும் ஆண் கிரகங்களின் வீடு என வர்ணிக்கப்படக் கூடிய மேஷம், விருச்சிகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய பாவங்களில் ஐந்தாம் அதிபதி பலமாக அமைந்திருந்தாலும் சிறப்பான ஆண் குழந்தை பாக்கியம் உண்டாகும். இந்த பாவங்களில் குரு அமைந்திருந்தாலும் சிறப்பான ஆண் வாரிசு உண்டாகும்.

பெண் வாரிசு யாருக்கு
பெண் கிரகங்கள் என வர்ணிக்கப்படக் கூடிய சுக்கிரன் சந்திரன் ஐந்தாம் வீட்டில் வலுவாக அமைந்தாலும் ஐந்தாம் அதிபதியாக சுக்கிரன், சந்திரன் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் சந்திரன் வீடான கடகத்தில் அமைந்திருந்தாலும் பெண் குழந்தை யோகம் உண்டாகும். அதுபோல இரட்டை படை ராசிகளான ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவற்றில் 5ம் அதிபதி அமைந்திருந்தாலும் பெண் குழந்தை யோகத்தைக் கொடுக்கும்.

குழந்தை பாக்கியம் யாருக்கு
புத்திர ஸ்தானமான 5ல் அமைந்துள்ள கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும், 5ம் அதிபதி மற்றும் 5ம் அதிபதி சாரம் பெற்ற தசா புக்தி காலங்களிலும், குரு மற்றும் குரு சாரம் பெற்றுள்ள தசா புக்தி காலங்களிலும் குழந்தை பாக்கியம் உண்டாவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

மேஷம் ராசிக்கு குரு பலம்
ஒன்பதாம் வீட்டில் அமரப்போகும் குரு நிறைய பாக்யத்தையும் தேடித்தருவார். உங்க ராசியை குரு பார்ப்பதால் புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் தீரும். குரு பார்வை மூன்றாம் வீட்டில் விழுகிறது. சகோதர சகோதரிகளுக்கு நன்மைகள் நடக்கும் திருமணம் நடைபெறும். மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும். ஐந்தாம் வீட்டை குரு பார்ப்பதால் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்கு காத்திருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். உங்க வீட்டில் குவா குவா சத்தம் கேட்கும்.

சிம்ம குரு புண்ணிய குரு
சிம்மத்திற்கு 5ல் குரு வந்தால் எதிர்பார்த்ததை விட பலன்கள் தேடி வரும். சிம்மராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி புண்ணியங்கள் நிறைந்த ஆண்டாக அமைகிறது. ஐந்துக்கு அதிபன் ஐந்தில் ஆட்சி பெற்று அமர்வது பூர்வ ஜென்ம புண்ணியம் தேடி வரும். குருவின் ஆதரவு அற்புதமாக இருக்கும். பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியங்கள் உங்களுக்கு நன்மை செய்யும். குழந்தை இல்லையே என்று தவித்தவர்களுக்கு குரு இந்த முறை குழந்தை பாக்கியத்தை கொடுப்பார், திருமணத்தை நடத்தி கொடுப்பார்.

தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு ஜென்மகுருவாக அமரும் குரு பகவான் 5, 7, 9, ஆகிய வீடுகளை பார்க்கிறார். ஜந்தாம் பாவத்தை குரு பார்வையிடுவதால் குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளினால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆண் பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் எல்லா கனவுகளும் பூர்த்தியாகும். ஒன்பதால் வீட்டினை பார்ப்பதால் பாக்கியம் கிடைக்கும் ஆசைகள் நிறைவேறும். ஏழாம் வீட்டினை பார்ப்பதால் புது முயற்சிகள் கை கூடும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமணம் கைகூடி வரும் கணவன் மனைவி உறவு உற்சாகமடையும்.

கும்பம்
லாப ஸ்தானத்தில் அமரப்போகும் குரு பகவான் கும்பம் ராசிக்கு மூன்று, ஐந்து, ஏழாம் வீடுகளை பார்வையிடுகிறார். ஓரே நேரத்தில் பஞ்சம ஸ்தானம் களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சிலருக்கு ரத்த வழி சம்பந்தபட்ட உறவில் திருமணம் நடக்கும். சொந்த தொழில் கூட்டு தொழில் லாபம் தரும். குலதெய்வ அனுகிரகம் கிடைக்கும். கனவுகள் பூர்த்தியாகும். திருமணம் ஆகியும் நீண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications