Latest Updates
-
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
குரு பெயர்ச்சி 2019 - 20: சிம்ம லக்னகாரர்களுக்கு பூர்வ புண்ணிய குருவால் ராஜயோகம்
குரு பெயர்ச்சி அடுத்தமாதம் நிகழப்போகிறது. குரு பகவான் சுப கிரகம் என்பதால் யாருக்கும் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். குரு நின்ற இடம் பாழ் என்றும் பார்க்கும் இடம் சுபிட்சம் அடையும் என்று சொன்னாலும
Recommended Video
நவகிரகங்களில் குருபகவான் சுப கிரகம். குரு பெயர்ச்சியை அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். வாக்கியப்பஞ்சாங்கப்படி அக்டோபர் 29ஆம் தேதி குருப்பெயர்ச்சி நிகழப்போகிறது. விருச்சிகத்தில் இருந்து தனசு லக்னத்தில் அமரப்போகும் உங்க லக்னத்திற்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அங்கிருந்து உங்க லக்னத்தையும், உங்களுக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார் குருபகவான். சிம்ம லாக்னகாரர்களுக்கு லக்னத்தைப் பார்க்கும் குருபகவான் அபரிமிதமான யோகத்தை தரப்போகிறார்.
குருபகவான் உங்க லக்னத்திற்கு ஐந்து மற்றும் எட்டாம் வீட்டிற்கு அதிபதி. ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி ஐந்தில் அமர்வது ராஜயோகம். பூர்வ புண்ணிய குரு. உங்களின் மனதில் இருக்கும் ஆசைகள், எண்ணங்களை நிறைவேற்றுவார் குருபகவான். கடந்த சில ஆண்டுகளாகவே குருப்பெயர்ச்சியும் சனிப்பெயர்ச்சியும் உங்களுக்கு சாதகமாக இல்லை. இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி உங்க லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டில் வருவது அற்புதமாக அமையப்போகிறது.

குரு அமரும் இடத்தைப் போல குரு பார்க்கும் இடமும் அற்புதமாக அமைந்துள்ளது. குரு பார்வை தனுசு ராசியில் இருந்து மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய லக்னங்களின் மீது விழுகிறது. குருவின் பார்வை உங்க லக்னத்தின் மீது விழுகிறது. உங்க லக்னத்திற்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானங்களின் மீது விழுகிறது. சிம்ம லக்னகாரர்களுக்கு லாபம் கிடைக்கும்.

பூர்வ புண்ணிய குரு
குரு சிம்ம லக்னத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தானம். கால புருஷனுக்கு சிம்மம் ஐந்தாம் வீடு. குரு உங்க லக்னத்திற்கு ஐந்து மற்றும் எட்டாம் வீட்டிற்கு அதிபதி. ஐந்தாம் பாவத்திற்கு குரு சுபர். சிம்ம லக்னத்திற்கு வலிமையானவர் குரு பஞ்சம ஸ்தானத்தில் அமர்கிறார். தனுசு குருவாக இருக்கிறார். மூன்றாம் வீட்டில் இருந்த குருவால் குழப்பம், நான்காம் வீட்டில் இருந்த போது நிம்மதியில்லாமல் இருந்தது. இப்போது குரு ஐந்தாம் வீட்டில் அமரப்போவது மிகப்பெரிய யோகம்.

ஆசைகள் நிறைவேறும்
சுப கிரகம் குரு ஐந்துக்கு அதிபன் ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார். மனம் ஆசைகள் எண்ணங்கள் நிறைவேறும். இந்த கால கட்டத்தில் தொழில் தொடங்கலாம். தைரியமாக தொடங்குங்கள் குருவின் பலனால் புண்ணியம் நல்லதை வெளிப்படுத்துவார். குரு உங்க லக்னத்தை பார்க்கிறார். இது கொடுப்பினை. நல்ல வாய்ப்புகள் கதவை தட்டும். பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

பூர்வீக சொத்துக்கள்
பாக்ய ஸ்தானத்தினை குரு பார்ப்பதால் உங்களுக்கு பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். பெண்கள் பேரும் புகழும் அடைவீர்கள். வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நல்ல கல்வியில் சேருவீர்கள். திட்டமிட்டு செயல்படுங்கள் வெற்றி பெறுவீர்கள். நல்ல தொழிலாளர்களை வைத்துக்கொள்ளுங்கள். அரசியல்வாதிகளுக்கு அற்புதமான காலம். தந்தை வழியில் நல்லது நடக்கும் ஆன்மீக பயணங்கள், ஆகியவற்றை சொல்லலாம்.

அதிர்ஷ்டமான பார்வை
மேஷத்தை குரு பார்ப்பது அதிர்ஷ்டமான பார்வை. ஒன்பதாம் இடம் என்பதால் அப்பா தனது சொத்துக்களை எழுதிக்கொடுப்பார். அப்பா உங்களுக்கு செய்யும் முதன்மையான பலன்களைக் கொடுப்பார். 11ஆம் வீடான மிதுனத்தில் ராகு தனியாக இருக்கிறார் இருக்கிறார். ராகு மீது குரு பார்வை விழுவதால் இனி லாப ராகு உங்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுப்பார். சிம்மத்திற்கு நல்ல நன்மைகளை தரக்கூடிய அமைப்பு. குரு ஒன்பது, லாபம், லக்னத்தை பார்ப்பதால் தடைபட்ட காரியங்கள் நிறைவடையும். அரசு, தொழில் விசயங்களில் முக்கிய வளர்ச்சி இருக்கும்.

திருமணம் குழந்தை பாக்கியம்
இந்த குரு பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு குரு பலன் வந்தாச்சு, சிம்ம லக்னகாரர்களுக்கு திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிநாடு யோகத்தை கொடுப்பார். உயர்ந்த பதவி அதிகாரத்தை தருவார். குரு ஐந்துக்கு அதிபன் பரிபூரண ராஜயோகம். ஏழுக்கு அதிபரும் ஐந்துக்கு அதிபரும் இணையும் காலம் ராஜயோக காலம். பெயர் புகழ் கீர்த்தி கிடைத்தும். பண வருமானம், தொழில் வளர்ச்சி, உங்களின் ஆளுமைத்தன்மை அதிகரிக்கும். மணவாழ்க்கையில் உள்ள சங்கடங்கள் கசப்புகளை நிவர்த்தி செய்வார். பிரச்சினைகளை சரி செய்வார்.

குல தெய்வ வழிபாடு
சிம்மம் எப்பவுமே அதிகாரம். வார்த்தைகளில் கவனம் தேவை. குரு பெயர்ச்சி நிகழும் கால கட்டத்தில் லக்னாதிபதி நீசம் பெறுகிறார். துலாம் ராசியில் சூரியன் இருக்கிறார். ஒரு மாதம் முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். அதுதான் வெற்றியை தரும். மற்றவர்களை அரவணைத்துச் செல்லுங்கள். அப்போதுதான் தலைமைப் பண்புக்கு வெற்றி கிடைக்கும். குல தெய்வ வழிபாடு ரொம்ப முக்கியம். பித்ரு தோஷம் நீங்க திதி கொடுங்க தர்ப்பணம் பண்ணுங்க. முன்னோர்களை வழிபடுங்க.
நல்லது நடக்கும். இல்லாவிட்டால் தோஷம் ஏற்படும். திருமண தடை, புத்திர பாக்கிய தடை, சொத்துக்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இந்த குரு பெயர்ச்சிக்கு வியாழக்கிழமை குரு ஓரையில் விளக்கேற்றி வையுங்கள். நெய் தீபம் ஏற்றுங்கள். கொண்டைக்கடலை பிரசாதமாக விநியோகம் செய்யுங்கள். நிறைய நன்மைகள் நடக்கும்.



Click it and Unblock the Notifications
