For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குரு பெயர்ச்சி 2019 - 20: மீனம் லக்னத்திற்கு பணம் பொருளை தரும் குருபகவான்

குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. குரு பகவான் சுப கிரகம் என்பதால் யாருக்கும் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். குரு நின்ற இடம் பாழ் என்றும் பார்க்கும் இடம் சுபிட்சம் அடையும் என்று சொன்னாலும் இம்முறை கு

|

நவகிரகங்களில் குருபகவான் சுப கிரகம். குரு பெயர்ச்சியை அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். வாக்கியப்பஞ்சாங்கப்படி அக்டோபர் 29ஆம் தேதி குருப்பெயர்ச்சி நிகழப்போகிறது. விருச்சிகத்தில் இருந்து தனசு லக்னத்தில் அமரப்போகிறார் குரு பகவான். மீனம் லக்னத்திற்கு லாப ஸ்தானம் மற்றும் தன ஸ்தான வீட்டு அதிபதி குரு பகவான். தனுசுவில் அமரும் குருவின் பார்வை மீனம் லக்னத்திற்கு இரண்டு, நான்கு, ஆறாம் வீடுகளின் மீது விழுகிறது. குருவின் சஞ்சாரம் மற்றும் பார்வையால் மீனம் லக்னத்திற்கு பலன்களையும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.

குரு பகவான் மீனம் லக்னத்திற்கு லக்னாதிபதி. உங்க தொழில் ஸ்தான அதிபதி. கரும ஸ்தான அதிபதி, லக்னாதிபதி கரும ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். குரு அமரும் இடத்தைப் போல குரு பார்க்கும் இடமும் அற்புதமாக அமைந்துள்ளது. குரு பார்வை தனுசுவில் இருந்து மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய லக்னங்களின் மீது விழுகிறது. குருவின் பார்வை உங்க லக்னத்திற்கு இரண்டு, நான்கு, ஆறாம் வீடுகளின் மீது விழுகிறது. குருவின் சஞ்சாரமும், பார்வையையும் பொறுத்து சந்தோஷங்களும் சில சங்கடங்களும் ஏற்படும். அதற்கேற்ப பரிகாரம் செய்தால் போதும் இந்த குரு பெயர்ச்சியை சந்தோஷமாக கடந்து விடலாம்.

Guru peyarchi

குரு பெயர்ச்சி மீன லக்னகாரர்களுக்கு நல்ல பணவரவு கூடவே செலவுகளையும். குடும்பத்தில் குதூகலத்தையும் தரப்போகிறார். வேலை வாய்ப்பு, கல்வி, தொழில் வருமானம் இந்த குரு பெயர்ச்சியால் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உழைப்பு உயர்வு தரும்

உழைப்பு உயர்வு தரும்

பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி நான்கு பாதங்கள் ரேவதி 4பாதங்கள் என மீன லக்னத்தில் உள்ளன. மீன லக்னகாரர்கள் லக்னாதிபதி கர்ம ஸ்தானத்தில் ஆட்சி பெறுகிறார். பத்தாம் வீடு பொதுவாகவே கர்ம ஸ்தானம். இந்த வீட்டில் பாவ கிரகங்கள் இருப்பது நல்லது. லக்னாதிபதி கரும ஸ்தானத்தில் ஆட்சி பெறுவதால் கடமைகளை செய்ய வேண்டும். தொழில் ஸ்தானம். நம்முடைய வேலையை நாம நல்லா வேலை செய்யணும் கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்கவே முடியாது. நீங்க செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. தாய் தகப்பனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன.

MOST READ: இந்தியா - பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து - முஸ்லீம் ஓரினச்சேர்க்கை தம்பதி...

தொழில் ஸ்தான குரு

தொழில் ஸ்தான குரு

குரு இப்போது ஒன்பதாம் வீட்டில் இருக்கிறார். பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் அமரப்போகும் குரு புதிய பதவியை கௌரவத்தை தேடித்தருவார். குருபகவான் பார்வை தன ஸ்தானம், சுக ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானத்தின் மீது விழுகிறது. பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும் என்பார்கள் இந்த குரு பதவியை கொடுப்பார். நிறைய சொத்துக்களை வாங்குவீர்கள். தொழில் வருமானம் பெருகும். சொத்துக்களை விற்றும் பணம் வரும். சிலருக்கு நெருங்கிய உறவினர்களால் பிரச்சினையும் பிரிவும் ஏற்படும்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

சிலருக்கு காதல் திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. வம்பு வழக்குகள் தீரும். தொழில் வியாபாரத்தில் கவனம் தேவை. என்னதால் வேலை கிடைக்கும் என்றாலும் எந்த வேலையையும் அவசரப்பட்டு விட வேண்டாம். சிலருக்கு வெளிநாடு யோகம் வாய்ப்பு வருது. திருமணம், குழந்தைகளால் சுப செலவு ஏற்படும்.

எச்சரிக்கை தரும் குரு

எச்சரிக்கை தரும் குரு

பூராட்டாதி நட்சத்திரத்தை கொண்ட மீன லக்னகாரர்களுக்கு உங்க லக்னாதிபதி குரு உயிர் கொடுத்தவர். குரு குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். அப்பாவிற்கோ அம்மாவிற்கோ கடைசி காரியங்களை செய்ய வேண்டியிருக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த மீன லக்னகாரர்கள் எதையும் பணமாக்கி விடுவீர்கள். பழங்கள், காய்கறிகள், மீன் போன்றவற்றை ஏற்றுமதி இறக்குமதி செய்வீர்கள். உங்களுக்கு வெளிநாட்டு வாய்ப்பு மூலம் பணம் வரும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த மீன லக்னகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்துவார். ரேவதி புதனின் நட்சத்திரம். புதன் குருவிற்கு பகையானவர். சில கெடுபலன்கள் வரும். என்றாலும் கவலை வேண்டாம்

MOST READ: சுமாரான கலரா இருக்கோம்னு கவலைப்படறீங்களா? இந்த மேக்கப் போடுங்க... பளிச்னு தெரிவீங்க...

உடல் நலத்தில் கவனம்

உடல் நலத்தில் கவனம்

இந்த ஒரு வருஷமும் உழைப்பை மட்டுமே நிறைய நம்பி இருக்கணும். கடமையை நல்லா செய்யுங்க பலன் தானா வரும். எவ்வளவு சம்பாதித்தாலும் கையில நிக்கலையே என்று கவலை பட வேண்டாம். ஜனவரிக்குப் பிறகு கவனம் தேவை. உடல் நலத்தில் சின்ன பிரச்சினை வந்தாலும் கவனம் நீரிழிவு, இதயநோய் பிரச்சினை உள்ளவர்கள் உடம்பில கவனம். மீன லக்னகாரர்கள் இந்த குரு பெயர்ச்சிக்கு ஆலய தரிசனம் செய்வதோடு மகான்கள், சித்தர்களை தரிசனம் செய்வது நல்லது. குழந்தைகள் மீது அன்பும் பசமும் தேவை. ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு பொருட்களை வாங்கி கொடுங்கள் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும். வியாழக்கிழமைகளில் குருவை வணங்க நன்மைகள் நடக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: marriage
English summary

Guru peyarchi 2019: Guru Peyarchi For Meenam Lagna Prediction

Guru peyarchi from Viruchigam to Dhanusu rasi on October 29 Vakkiya panchangam November 5th for Tirukanitha panchangam. here is the prediction for Meenam lagnam.
Story first published: Saturday, October 19, 2019, 16:23 [IST]
Desktop Bottom Promotion