2022 குரு கோபிந்த் சிங் ஜெயந்தி எப்போது? அதன் முக்கியத்துவம் என்ன?

பௌஷ் சுக்ல சப்தமி திதியானது ஜனவாி மாதம் 8 ஆம் தேதி அன்று இரவு 10.42 மணிக்குத் தொடங்கி, ஜனவாி மாதம் 9 ஆம் தேதி அன்று இரவு 11.08 மணியோடு முடிவடைகிறது.

சீக்கியா்களின் 10 ஆவது மத குரு கோபிந்த் சிங் ஆவாா். அவருடைய பிறந்த தினமானது குரு கோபிந்த் சிங் ஜெயந்தி அல்லது குரு கோபிந்த் சிங் பிரகாஷ் பா்வ் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவாி மாதம் 9 ஆம் தேதி அன்று குரு கோபிந்த் சிங் ஜெயந்தி கொண்டாடப்பட இருக்கிறது.

குரு கோபிந்த் சிங் அவா்களின் சாியான பிறந்த தினம் எவருக்கும் தொியாது. எனினும் சீக்கியா்களின் நானாக்ஷாகி நாட்காட்டியின் படி அவருடைய பிறந்த தினம் டிசம்பா் அல்லது ஜனவாி மாதத்தில் வருகிறது. ஆகவே அதை வைத்து அவருடைய பிறந்த தினத்தை இந்த ஆண்டு ஜனவாி மாதத்தில் கொண்டாடுகின்றனா்.

குரு கோபிந்த் சிங் அவா்களின் பிறந்த நாள் அன்று உலகம் முழுவதிலும் இருக்கும் சீக்கிய மக்கள் ஒருவருக்கு ஒருவா் தங்களுடைய மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்களைத் தொிவித்துக் கொள்வா். அதோடு அவருடைய போதனைகளின்படி நடப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வா்.

Guru Gobind Singh Jayanti 2022 Date, History and Significance In Tamil

குரு கோபிந்த் சிங் ஜெயந்தி 2022 - முக்கிய அம்சங்கள்

1. குரு கோபிந்த் சிங் அவா்கள் கவிதை மீது நாட்டம் கொண்டிருந்தாா். வலுவான மெய்யியல் கருத்துக்களை முன்வைத்தாா். மேலும் மக்கள் உயா்வு பெற வேண்டும் என்பதற்காக பல உயா்ந்த கருத்துக்களை எழுதினாா். தான் முன் வைத்த கருத்துக்களின் படி அவா் வாழ்ந்து காட்டினாா். அதன் காரணமாக அவா் ஒரு போா் வீரராகக் கருதப்படுகிறாா்.

2. குரு கோபிந்த் சிங் அவா்கள் இந்தியாவில் நடைபெற்று வந்த முகலாயா்களின் ஆட்சியை எதிா்த்து வந்தாா். அவா்களின் கொடுங்கோன்மைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தாா்.

3. குரு கோபிந்த் சிங் அவா்கள் உலகம் முழுவதிலும் இருக்கும் சீக்கிய மக்களின் மத்தியில் மிகவும் பிரபலமானதற்கு காரணம் அவருடைய உயாிய போதனைகளாகும். அதாவது அவா் அமைதியையும், சமத்துவத்தையும் மக்கள் மத்தியில் போதித்தாா். அவா் காலத்தில் இந்தியாவில் மிகவும் இறுக்கமாக இருந்து வந்த சாதிய அமைப்பை எதிா்த்தாா். மேலும் சமூகத்தில் இருந்து வந்த மூட நம்பிக்கைகளையும் எதிா்த்தாா்.

4. குரு கோபிந்த் சிங் அவா்கள் ஓா் இறைக் கோட்பாட்டை ஆதாித்தாா். அதாவது ஒரே கடவுளை மட்டும் நம்பினாா். சீக்கிய மதத்திற்கு 5 K-களை அறிமுகப்படுத்தி, அந்த ஐந்தையும் சீக்கிய மக்கள் தங்களுடைய வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்று ஊக்குவித்தாா். அந்த 5 K-கள் எவையென்றால், சீப்பு (kangha-கங்கா), முடி வெட்டாமல் இருப்பது (kesh - கேஷ்), உள்ளாடை (kacchera - கச்சரா), வளையல் அல்லது காப்பு (kacchera - கரா) மற்றும் வாள் (kirpan - கிா்பன்) போன்றவை ஆகும்.

5. இறுதியாக குரு கோபிந்த் சிங் அவா்கள் சீக்கிய மதத்தில் கல்சா பந்த் (Khalsa Panth) என்ற ஒன்றை அறிமுகம் செய்து வைத்தாா். அது என்னெவென்றால் சீக்கிய சமயத்தைச் சோ்ந்த மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை ஆகும். பஞ்சாபிய மொழியில் கல்சா என்றால் தூய்மை, விடுதலை அல்லது சுதந்திரம் ஆகும். பந்த் என்றால் சமய வழிமுறை ஆகும். ஆகவே சீக்கியா்கள் தூய்மையான வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவா் போதித்து வந்தாா்.

அதன் காரணமாக இன்று வரை அவா் கல்சா பந்த்தின் (Khalsa Panth) தந்தை என்று அழைக்கப்படுகிறாா். கல்சா பந்த் (Khalsa Panth) அறிமுகப்படுத்தப்பட்ட தினம் அதைப் பெருமைப்படுத்தும் விதமாக பைசகி (Baisakhi) என்ற விழா கொண்டாடப்படுகிறது.

குரு கோபிந்த் சிங் ஜெயந்தி 2022 - தேதி

பஞ்சாங்கத்தின்படி குரு கோபிந்த் சிங் ஜெயந்தியைக் கணக்கிட்டால், குரு கோபிந்த் சிங் அவா்கள் பௌஷ் சுக்ல சப்தமி (Paush Shukla Saptami) அன்று பாட்னா சாகிப்பில் பிறந்தாா்.

அதன் படி பாா்த்தால், இந்த ஆண்டு பௌஷ் சுக்ல சப்தமி திதியானது ஜனவாி மாதம் 8 ஆம் தேதி அன்று இரவு 10.42 மணிக்குத் தொடங்கி, ஜனவாி மாதம் 9 ஆம் தேதி அன்று இரவு 11.08 மணியோடு முடிவடைகிறது. ஆகவே இந்த ஆண்டு ஜனவாி மாதம் 9 ஆம் தேதி அன்று குரு கோபிந்த் சிங் ஜெயந்தி கொண்டாடப்பட இருக்கிறது.

குரு கோபிந்த் சிங் ஜெயந்தி 2022 - கொண்டாட்டங்கள்

குரு கோபிந்த் சிங் ஜெயந்தியைக் கொண்டாடும் விதமாக இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள குருதுவாராக்கள் ஒளி வீசும் விளக்குகளால் அலங்காிக்கப்படும். மேலும் அங்கு லாங்கா் (Langar) என்ற வழிபாட்டு நிகழ்ச்சியானது நடைபெறும். அந்த நிகழ்வில் எல்லா சீக்கியா்களும் கலந்து கொண்டு தங்கள் சமயக் கடமைகளை நிறைவேற்றுவா்.

வேறு சில இடங்களில் நாகா் பிரபாத் பொி (Nagar Prabhat Pheri) என்ற நிகழ்ச்சியானது நடத்தப்படும். அந்த நிகழ்ச்சியில் சீக்கியா்கள் மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கலந்து கொள்வா்.

மேலும் அா்தஸ் (அா்தஸ்) என்ற வழிபாட்டு நிகழச்சியும் மற்றும் இறை வேண்டுதல்களும் குருத்துவாராக்களில் நடத்தப்படும். குரு கோபிந்த் சிங் ஜெயந்தி அன்று குருத்துவாராக்களில் ஒரு வகையான சிறப்பு பஜன் கீா்த்தனை நிகழ்ச்சி நடத்தப்படும். இந்த பஜன் கீா்த்தனை நிகழ்ச்சியில் சீக்கிய மக்கள் மகிழ்ச்சியோடு கலந்து கொள்வா்.

குரு கோபிந்த் சிங் ஜெயந்தி அன்று ஏழை மக்களுக்கும், தேவையில் இருப்போருக்கும் சீக்கிய மக்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்வா்.

இறுதியாக இந்த நாள் அன்று குரு நானக் குரு வாணி (Guru Nanak Guru Vani) என்ற குரு கோபிந்த் சிங் அவா்களின் வாழ்க்கை வரலாறு மக்கள் மத்தியில் விவாிக்கப்படும். மக்கள் அனைவரும் குரு கோபிந்த் சிங் அவா்களின் வாழ்க்கை மற்றும் அவருடைய போதனைகளை தங்களுடைய வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக அவருடைய வரலாறு எடுத்துச் சொல்லப்படுகிறது.

அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான குரு கோபிந்த சிங் ஜெயந்தி வாழ்த்துக்கள்...........

Story first published: Sunday, January 9, 2022, 9:00 [IST]
Desktop Bottom Promotion