For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிப்ரவரி மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகுது.. உங்க ராசிக்கு எப்படி?

உங்களுக்கு 2022 பிப்ரவரி மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் பிப்ரவரி மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என கொடுக்கப்பட்டுள்ளன.

|
February 2022 Monthly Horoscope In Tamil

2022 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதத்தில் நுழைய உள்ளோம். ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் பிப்ரவரி மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. உங்களுக்கு 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரி மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் பிப்ரவரி மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என பிப்ரவரி மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள், இம்மாதத்தில் மிகவும் நேர்மையாகவும், கடினமாகவும் உழைப்பார்கள். பணிபுரிபவர்கள், கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவார்கள். ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பால், உங்கள் உயர் அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வியாபாரத்தை விரிவாக்க முதலீடு செய்வதற்கு இது நல்ல நேரம். அதிக செலவுகளால் சிரமத்தில் இருந்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு இம்மாதத்தில் சரியான துணை கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இம்மாதத்தில் தொழில் ரீதியாக சில நற்செய்திகளைப் பெறுவீர்கள். உங்கள் மனதில் உள்ள திட்டங்களை செயல்படுத்த வேண்டிய நேரம் இது. இந்த மாதம் எந்த ஒரு புதிய முயற்சியையும் தொடங்க வேண்டாம் சரியான வாய்ப்புக்காக காத்திருங்கள். செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியமாக இருக்க ஒழுக்கமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். திருமண வாழ்க்கை மன அழுத்தம் நிறைந்திருக்கும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, இம்மாதத்தில் உங்களுக்கு வேலை மாறற்ம் அல்லது இடமாற்றத்திற்கான வாய்ப்புள்ளது. உங்களின் தவறான நடத்தை, பணியிடத்தில் சில சிக்கல்களை ஏற்படும் என்பதால் கவனமாக இருங்கள். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய தொடர்புகள் ஏற்படும். கண்ணை மூடிக் கொண்டு எதிலும் முதலீடு செய்யாதீர்கள். இல்லாவிட்டால் நஷ்டம் ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள். உங்கள் துணையுடன் உணர்ச்சி ரீதியான பிணைப்பு வளரும்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே, இம்மாதத்தில் பணியிடத்தில் விழிப்புடன் இருங்கள். இருப்பினும், சொந்தமாக ஒன்றைத் தொடங்க இது நல்லது நேரம். சிலர் இம்மாதத்தில் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கக்கூடும். ஆனால் இம்மாதத்தில் வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். வயிறு மற்றும் தொண்டை சம்பந்தமான நோய்களில் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இம்மாதத்தில் விரும்பிய முடிவுகளைப் பெற உங்கள் வேலையில் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தைரியமாக இருங்கள் மற்றும் உங்கள் முடிவுகளை நம்புங்கள். வியாபாரிகள் கடனில் இருந்து விடுபடுவார்கள். கடந்த காலத்தில் சிக்கிய பணம் இம்மாதத்தில் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் குடும்பத்தில் இருந்து நிதி உதவியை எதிர்பார்ப்பீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சில குழப்பங்கள் ஏற்படலாம். சிலர் புதிய உறவைப் பெறலாம்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, பணியிடத்தில் சவாலான சூழ்நிலை இருந்தாலும், மற்றவர்களை விட சிறப்பாக செயல்படுவீர்கள். இம்மாதத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். உங்கள் பணியில் நடந்து கொண்டிருக்கும் திட்டங்களில் இடையூறுகளை சந்திக்க நேரிடும். காதலிப்பவர்கள் இம்மாதத்தில் தவறான புரிதலால் நம்பிக்கை தொடர்பான சிக்கல்களை சந்திக்க நேரிடும். பண விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு குடும்ப சூழ்நிலை பாதிக்கப்படும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இம்மாதம் தொழில் ரீதியாக நல்ல மாதமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு வருமானம் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு அரசு தொடர்பான திட்டங்களால் ஆதாயம் கிடைக்கும். தோல் மற்றும் கண்கள் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் தொந்தரவு செய்யலாம். திருமணமாகாதவர்கள், மனதிற்கு பிடித்தவர்களிடம் அன்பை வெளிப்படத்தலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! உங்களின் தற்போதைய வேலையில் உங்கள் பொறுப்பு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு இது சாதகமான காலமாக இருக்கும். புதிய திட்டங்களால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். இம்மாதத்தில் அதிக செலவுகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இம்மாதத்தில்சளி மற்றும் இருமல் போன்றவை உங்களை அசௌகரியப்படுத்தும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இம்மாதத்தில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சில ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும். மாணவர்கள் தங்கள் இலக்குகளை அடைய முடியும் என்பதால் இது ஒரு நல்ல மாதம். எதிர்பாராத செலவுகள் காரணமாக குடும்ப வரவு செலவுகள் சற்று அதிகரிக்கும். நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள் மற்றும் நல்ல டயட்டை பின்பற்றுங்கள். உங்களின் வாழ்க்கைத் துணை உங்கள் மீது அதிக பொசசிவ்வாக மாறுவதால், உங்களுக்கு அது தேவையற்ற மன அழுத்தத்தை உண்டாக்கும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே! இம்மாதத்தில் பணியிடத்தில் கவனமாக இருங்கள். உங்களைக் கட்டுப்பாட்டில் வைத்து, உடன் பணிபுரிபவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். வியாபாரம் நிலையாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் சில கவலைகளை உண்டாக்கும். உங்கள் மனைவியை நம்புங்கள் மற்றும் முக்கியமான விஷயங்களில் அவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இம்மாதத்தில் தொழில் சம்பந்தமாக சில புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். புதிய தொழில் தொடங்குவது குறித்து யோசிப்பீர்கள். பிறர் நலனுக்காகச் செலவிடும் பணம் பலனளிக்கும் மற்றும் அதிக வருமானத்தை உங்களுக்கு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் ஈகோ சண்டைகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே! இம்மாதம் கூடுதல் வேலை அழுத்தத்தால், மன அழுத்தம் ஏற்படலாம். வேலை தொடர்பான பயணங்களுக்கு வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்கள் வளர்ச்சியை மேம்படுத்த புதிய ஒத்துழைப்புகளை ஆராய்வார்கள். உங்கள் சேமிப்பில் கவனம் செலுத்துங்கள் மற்றும் புதிய நீண்ட கால வழிகளில் முதலீடு செய்யுங்கள். இம்மாதத்தில் மூட்டுகள் மற்றும் தோள்பட்டை வலி சில அசௌகரியங்களை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களுடன் சுமூகமான உறவை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

February 2022 Monthly Horoscope In Tamil

Check out the monthly horoscope of february 2022 for all zodiac signs. Read on.
Story first published: Saturday, January 29, 2022, 16:01 [IST]
Desktop Bottom Promotion