Latest Updates
-
வெந்தய கஞ்சியும்.. கறிவேப்பிலை துவையலும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-புதன்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாக் அடிக்கப்போகுது.. -
Tamil Nadu Election 2026: தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏன் ஜிகர்தண்டாவை அவசியம் குடிக்கணும் தெரியுமா? -
ரம்ஜான் ஸ்பெஷல் திண்டுக்கல் ஸ்டைல் மட்டன் பிரியாணி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2026 IPL T20-யில் உள்ள டாப் 5 இளம் வீரர்கள்.. சிஎஸ்கே அணியிலும் ஒருவர் உள்ளார்.. யாருன்னு பாருங்க.. -
ஏப்ரலில் 6 முறை உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
பாவக்காயை இப்படி தொக்கு செய்யுங்க.. கசப்பே தெரியாது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க... -
இந்த சட்னியை தினமும் 2 ஸ்பூன் சாப்பிடுங்க.. உடம்பில் இரத்தமும் ஊறும்.. முடி உதிர்வும் குறையும்.. -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 21 முதல் இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது..
திருமண உறவை தாண்டிய ரகசிய உறவுகள் எப்படி ஏற்படுதுன்னு தெரியுமா?
காதல் என்பது அற்புதமான உணர்வு, அந்த காதல் ஒருவருடன் மட்டுமே நிகழ்ந்தால் பாதிப்பு இல்லை. இன்றைய கால கட்டத்தில் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் திருமண வாழ்க்கையை சீரழித்து விடுகின்றன.
காதல் என்பது அற்புதமான உணர்வு, அந்த காதல் ஒருவருடன் மட்டுமே நிகழ்ந்தால் பாதிப்பு இல்லை. இன்றைய கால கட்டத்தில் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் திருமண வாழ்க்கையையும், குடும்ப உறவுகளையும் சீரழித்து விடுகின்றன. பணத்தேவைகள் மட்டுமல்லாது உடல் தேவைகளும் திருமணத்தை தாண்டிய உறவுகள் ஏற்பட காரணமாகின்றன. அன்பு, காதல், கடமை என்ற வந்த பின்னர் சில மாதங்கள், வருடங்களில் படிப்படியாக காதல் மறைந்து காமமும் உடல் தேவைகளுமே திருமணத்தை தாண்டிய ரகசிய உறவுகளுக்கு காரணமாகிறது. திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் ஏன் ஏற்படுகிறது என்று ஜாதகத்தை பார்த்து கண்டுபிடிக்கலாம்.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற பாரம்பரியம் இன்றைக்கு மாறி வருகிறது. ஆணோ பெண்ணோ இன்றைக்கு திருமணத்தை தாண்டிய உறவில் அதிகமாக ஈடுபடுகின்றனர். இந்த ரகசிய உறவு வெளிப்படும் போது குடும்பங்களில் பூகம்பங்கள் ஏற்படுகின்றன. ஒருவரின் ஜாதகத்தை வைத்தும் கிரகங்களை வைத்தும் திருமணத்தை தாண்டிய உறவுகளையும் ரகசிய சிநேகங்களையும் அறிந்து கொள்ளலாம்.
பெரும்பாலான கள்ளத் தொடர்புகள் கொலையிலும் தற்கொலையிலும் முடிகின்றன. ஜாதகத்தில் எட்டாம் வீடு ஆயுள், அவமானம், கண்டம், கெட்ட செயல் போன்றவைகளை குறிக்கும் இடம் ஏழாம் வீட்டிற்கு இரண்டாம் வீடு எட்டாம் இடம், ரகசிய குடும்ப உறவை குறிக்கும் இடம், இந்த இடத்துடன் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடம் ஐந்தாம் பாவக அதிபதி, ஏழு களத்திர ஸ்தானம் இந்த இடங்களின் மூலம், கிரகங்களின் கூட்டணியை வைத்தும் முடிவு செய்யலாம்.

ரகசிய சிநேகங்கள்
காதல், காமம், உறவுகளை சொல்வது மனதில் உள்ள எண்ணங்களை உருவாக்குவது ஜாதகத்தில் உள்ள ஐந்தாம் பாவகம். பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் ஐந்தாம் பாவகம் காதல், கற்பனைகளை உருவாக்குகிறது. ஐந்தாம் பாவம் பூர்வ புண்ணிய ஸ்தானம். ஏழாம் பாவம் உடல் சேர்க்கை. களத்திர ஸ்தானம். ஐந்தாம் பாவகம் அதனுடைய கேந்திர ஸ்தானங்கள் எட்டாம் இடம், 11ஆம் இடம், இரண்டாம் இடம் ஆகிய பாவகங்களிடையே உள்ள கிரகங்களின் கூட்டணி சேர்ந்தால் திருமணத்தை தாண்டிய தவறான உறவு ஏற்படும். ஒன்றுக்கு மேற்பட்ட நபருடன் தொடர்பு ஏற்படும்.

கள்ளத் தொடர்புக்கு காரணங்கள்
ஐந்தாம் பவாக அதிபதி எட்டாம் பாவக அதிபதியுடன் தொடர்பு ஏற்பட்டால் கள்ளத் தொடர்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ரகசிய சிநேகங்கள் உருவாகும். திருமணத்திற்கு முன்பும் திருமணத்திற்கு பின்பும் உறவுகள் ஏற்படும். ஒருவரின் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் குரு அல்லது சுக்கிரன் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் காதல் கொள்வதற்கான, கள்ளக்காதல் ஏற்படுவதற்கான சூழல் உள்ளது.

ஒழுக்கமான காதல் வாழ்க்கை
ஜாதகத்தில் 4வது இடம் சுக ஸ்தானம். எல்லா விதமான சுகங்களுக்கும் இந்த இடம்தான் முக்கியம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெற்று இருந்தால் காதல் சிறப்பாக நடக்கும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானம். ஒழுக்க நெறியை பற்றி சொல்லும் இடம். நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி தவறாத வாழ்வு அமையும். நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் கூடா நட்புகள் தேடி வரும்.

பிற பெண்களின் தொடர்பு
ஆண்கள் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தால் சபல புத்தி உண்டாகும். ஏழாம் வீட்டில் சனி சுக்கிரன் கூட்டணி இருந்தால், ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த பெண்ணின் தொடர்பு உண்டாகும். லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்து பத்தாம் இடத்தில் புதன் இருந்தால் வயதில் மூத்த காதலி அமைவார். லக்னத்துக்கு 7, 8ல் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்துடன் அதே சமதோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதன் மூலம் அவர்களின் ஆசைகள், தேவைகள் ஒத்துப்போகின்றன. அதனால்தான் தோஷம் உள்ள ஜாதகத்துடன் தோஷம் உள்ள ஜாதகங்களை சேர்க்க வேண்டும் என்கின்றனர்.

கள்ள தொடர்பு ஏற்படும்
மிதுனம், தனுசு, மீனம், கன்னி ஆகிய ராசிகள் இரட்டை பட்ட ராசிகள் ஐந்து, ஏழு, எட்டு, பதினொன்றாம் பாவகமாக வந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குரு போக காரகன், சுக்கிரன் காம காரகன். இந்த இருவரும் இணைவது, பார்ப்பதில் நல்லதும் கெட்டதும் இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களுக்கும் பாவ கிரக பார்வை, நீச்ச சேர்க்கை ஏற்பட்டால் ரகசிய உறவுகள் ஏற்படலாம். எட்டாம் இடத்தில் குரு அல்லது சுக்கிரன் இருப்பதால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் காதல் கொள்வதற்கான, கள்ளக்காதல் ஏற்படுவதற்கான சூழல் உள்ளது. சிலருக்கு இரண்டு திருமணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதிகரிக்கும் காதல் வேட்கை
ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனும், செவ்வாயும் கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள எந்த எல்லை வரை போகவும் தயங்கமாட்டார்கள். சனி, சந்திரன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை, நட்சத்திர சாரம், சனி வீட்டில் சந்திரன், சந்திரன் வீட்டில் சனி, சனி, சந்திரன் நீசம் போன்ற அமைப்புகள் மூலம் திருமணத்தை தாண்டிய ஏற்படும். ஐந்து, எட்டு, 11, இரண்டு பணபர ஸ்தானங்கள் பணத்தை கொடுக்கும். அதிக பணவரவினால் அதிக அளவில் தொடர்பும் ஏற்படும். திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் ஏற்படும்.

இரண்டாம் திருமண யோகம்
ஏழாம் வீட்டில் சனி, புதன் இணைந்து இருந்து, வேறு ஏதேனும் இரு கிரகங்கள் 11 ஆம் வீட்டில் இருந்தால், அப்படிப்பட்ட ஜாதகர் இருமுறை திருமணம் செய்வார்கள். இந்த அமைப்பில் கேது ஏதாவது ஒரு வழியில் வகையில் தொடர்பு பெற்றால் அந்த இரண்டாவது திருமணம் ரகசியமாகவே நடைபெறும். ஒருவரின் ஜாதகத்தில், 7 ஆம் அதிபதி, 6, 8, 12 ஆம் இடங்களைத் தொடர்பு பெறும் போதோ அல்லது தொடர்பு பெறும் இடங்கள் உபய ராசியாகும் போதோ அது நிச்சயம் இரண்டாம் திருமண யோகத்தை அளிக்கும்.

பரிகாரங்கள்
என்னதான் கிரகங்கள் தவறான கூட்டணியில் இருந்தாலும் இந்த கிரக கூட்டணியை குரு பார்வை செய்தால் பாதிப்புகள் நீங்கும், தவறான பாதையில் செல்ல மனது இடம் கொடுக்காது. குலம் காப்பவர் குல தெய்வம். பவுர்ணமி, அமாவாசை நாட்களில் குலதெய்வ வழிபாடு செய்வதால் கெட்டது நீங்கி நன்மைகள் பெருகும். மனோகாரகன் சந்திரன், திங்கட்கிழமைகளில் சிவ ஆலய தரிசனம் செய்வது பாதிப்புகளை நீக்கும். அதே போல புதன் புத்திகாரகன், புத்தியை தெளிவாக செயல்பட வைப்பவர். நல்ல புத்தி கிடைக்க திருவெண்காட்டில் அமைந்துள்ள புதன் பகவானை வழிபட வேண்டும்.



Click it and Unblock the Notifications











