Latest Updates
-
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..
காலையில எழுந்ததும் இதெல்லாம் பாத்துடாதீங்க... இல்லன்னா அந்த நாளே மோசமா இருக்குமாம்...
பொதுவாக ஒருவரது தினம் மோசமாக இருந்தால், அனைவரது வாயில் இருந்தும் முதலில் வருவது 'இன்று யார் முகத்தில் முழித்தோமோ என்று தெரியவில்லை' என்பதாகவே இருக்கும்.
பொதுவாக ஒருவரது தினம் மோசமாக இருந்தால், அனைவரது வாயில் இருந்தும் முதலில் வருவது 'இன்று யார் முகத்தில் முழித்தோமோ என்று தெரியவில்லை' என்பதாகவே இருக்கும். நாம் அனைவருமே காலையில் எழுந்ததும் இன்றைய தினம் சிறப்பாக இருக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு தான் எழுவோம். இதனாலேயே பலர் காலையில் எழுந்ததும் கடவுளைத் தொழுது கொண்டே எழுவார்கள். இது ஒரு நல்ல விஷயம் தான். ஆனால் இப்படி கடவுளின் நாமத்தை உச்சரித்தவாறு எழும் போது, ஒருசிலவற்றைக் காண்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அவை உங்களின் தினத்தையே பாழாக்கிவிடும்.

இக்கட்டுரையில் ஒருவர் காலையில் எழும் போது எதையெல்லாம் முதலில் பார்க்கக்கூடாது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. வாஸ்துப்படி இந்த விஷயங்களை காலையில் எழுந்ததும் பார்த்தால், அவை அன்றைய தினத்தை மோசமான நாளாக ஆக்கும். இப்போது அவை என்னவென்பதைக் காண்போம் வாருங்கள்.

கண்ணாடியைப் பார்க்காதீர்கள்
ஒருவர் காலையில் எழுந்ததும் கண்ணாடியைப் பார்க்கக்கூடாது. அவ்வாறு காண்பது கெட்டதாக கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, காலையில் கண்ணாடியைப் பார்த்தால், இரவின் எதிர்மறை சக்தி தானாக உள்ளிழுக்கப்படும். ஆகவே கண்ணாடியைக் கண்டால், நாள் முழுவதும் எண்ணங்களில் எதிர்மறை ஆற்றல் நிறைந்து, எந்த வேலையும் செய்ய முடியாமல் அவதிப்படக்கூடும்.

அழுக்கு பாத்திரங்கள்
வாஸ்துப்படி, இரவு தூங்கும் முன் சமையலறையை சுத்தம் செய்து விட்டு, அழுக்கு பாத்திரங்கள் இருந்தால் அவற்றைக் கழுவிய பின்னரே தூங்க வேண்டும். ஏனெனில் அழுக்கு பாத்திரங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இரவு நேரத்தில் அழுக்குப் பாத்திரங்களைப் போட்டு விட்டு, மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த அழுக்கு பாத்திரங்களைப் பார்த்தால், அது அன்றைய நாளையே கெடுத்துவிடும். குறிப்பாக அழுக்கு பாத்திரங்களை காலையில் எழுந்ததும் பார்த்தால், அன்றைய தினம் முழுவதும் டென்சனாகவே இருக்கும். ஆகவே எப்போதும் இரவு தூங்கும் முன் சமையலறையை சுத்தம் செய்து விட்டு தூங்குங்கள். இதனால் மறுநாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.

நிழலைப் பார்க்காதீர்கள்
காலையில் எழுந்ததும் உங்களின் நிழலையோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றின் நிழலையோ பார்க்கக்கூடாது என்று கூறுவார்கள். ஏனெனில் காலையில் எழுந்ததும் நிழலைப் பார்த்தால், அன்றைய தினம் முழுவதும் டென்சனாகவும், அச்சத்துடனும், கோபத்துடனும் இருப்பீர்கள். ஆகவே இதைத் தவிர்த்திடுங்கள்.

மூடிய கடிகாரம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, மூடிய கடிகாரத்தை காலையில் எழுந்ததும் காண்பது கெட்டதாக கருதப்படுகிறத. காலையில் எழுந்ததும் ஒருவர் மூடிய கடிகாரத்தைக் கண்டால், அன்றைய தினமே பாழாகும். இது தவிர, ஊசி, நூல் போன்றவற்றை பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.

காலையில் எழுந்ததும் எதையெல்லாம் பார்க்கலாம்?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவர் காலையில் எழுந்ததும் கைகளைத் தேய்த்து உள்ளங்கைகளைப் பார்ப்பது நல்லதாக கருதப்படுகிறது. அதுவும் உள்ளங்கைகளைப் பார்க்கும் போது காயத்ரி மந்திரம் அல்லது வேறு ஏதேனும் மந்திரங்களைச் சொல்வது இன்னும் நல்லது. காலையில் எழுந்து கண்களைத் திறந்து பார்க்கும் போது, முதலில் கடவுளின் போட்டோ, மயிலின் கண்கள் அல்லது மலர்கள் போன்றவற்றைக் காண்டால், அன்றைய தினம் சிறப்பாக இருக்கும். எனவே இவற்றை தினமும் காலையில் பார்க்க முயற்சி செய்யுங்கள். இதனால் நாள் முழுவதும் நேர்மறை எண்ணங்களுடன் தினத்தை சிறப்பாக செலவிட முடியும்.



Click it and Unblock the Notifications