Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
காயத்ரி மந்திரம் சொல்லும் போது இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க.. இல்லன்னா பலன் கிடைக்காது...
காயத்ரி மந்திரத்தை சரியான சடங்குகளைப் பின்பற்றி உச்சரிக்காவிட்டால், அதன் முழு பலனைப் பெற முடியாது என்பது நம்பிக்கை. காயத்ரி மந்திரம் சொல்வது பற்றி சில விதிகள் உள்ளன.
சனாதன தர்மம் என்று அழைக்கப்படும் இந்து தர்மத்தில் காயத்ரி மந்திரம் மிகவும் முக்கியமானதாக கூறப்படுகிறது. ஏனெனில் இதற்கு என்று தனி முக்கியத்துவம் உள்ளது. பலர் தங்களின் குழந்தைகளுக்கு இந்த காயத்ரி மந்திரத்தை தான் முதலில் கற்பிப்பார்கள். அந்த அளவில் காயத்ரி மந்திரம் இந்துக்களுக்கு முக்கியமானது. அதே சமயத்தில் காயத்ரி மந்திரம் தெய்வ வழிபாட்டிலும் உச்சரிக்கப்படுகிறது. ஏனெனில் இந்த மந்திரம் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

காயத்ரி மந்திரத்தை சரியான சடங்குகளைப் பின்பற்றி உச்சரிக்காவிட்டால், அதன் முழு பலனைப் பெற முடியாது என்பது நம்பிக்கை. காயத்ரி மந்திரம் சொல்வது பற்றி சில விதிகள் உள்ளன. இந்த மந்திரத்தை சொல்லும் போது விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தவறான உச்சரிப்புடன் மந்திரத்தைக் கூறினால், அது வாழ்க்கையை பாதிக்குமாம். இப்போது காயத்ரி மந்திரத்தை சொல்லும் போது என்னென்ன விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும் என்பதைக் காண்போம்.

காயத்ரி மந்திரம்
"ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்."

அசைவ உணவை உண்ணக்கூடாது
காயத்ரி மந்திரத்தை சொல்லும் முன் உண்ணும் உணவு மற்றும் குடிக்கும் பானத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்த மந்திரத்தை சொல்லும் முன் சைவ உணவுகளையே உண்ண வேண்டும். எவ்வித அசைவ உணவுகளையும் உண்ணக்கூடாது. அதுமட்டுமின்றி, அல்கஹாலை அருந்தக்கூடாது.

ஒரு டம்ளர் நீரைக் குடிக்கவும்
காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்வதன் மூலம், நோய்களில் இருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது. இது தவிர, வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் நீடித்திருக்கும். வீட்டில் நேர்மறை ஆற்றல் தங்கியிருக்கும். முக்கியமாக இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்த பிறகு, ஒரு டம்ளர் நீரை குடிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

மஞ்சள் நிற ஆடைகளை அணியவும்
காயத்ரி மந்திரத்தை சூரிய உதயத்திற்கு சற்று முன் சொல்ல ஆரம்பிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது தவிர, மதிய வேளையிலும் காயத்ரி மந்திரத்தை சொல்லலாம். முக்கியமாக காயத்ரி மந்திரத்தை சொல்லும் போது மஞ்சள் நிற ஆடைகளை அணியுங்கள். ஏனெனில் இவ்வாறு செய்வது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.

108 முறை சொல்லவும்
நம்பிக்கைகளின் படி, காயத்ரி மந்திரத்தை சொல்வதாக இருந்தால், குறைந்தது 108 முறை சொல்ல வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இந்த மந்திரத்தை 108 ருத்ராட்ச ஜெபமாலைகளைக் கொண்டு சொல்வது இன்னமும் நல்லது. ஏனெனில் ருத்ராட்ச மணிகள் புனிதமானது. இதனால் நற்பலன்களை அதிகம் பெறலாம்.



Click it and Unblock the Notifications