Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
தினமும் இந்த விஷயங்களை செய்தால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. பணப்பிரச்சனையும் இருக்காது..
ஜோதிடத்தில் ஒருவரின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க சில பரிகாரங்கள் உள்ளன. அவற்றை தினமும் தவறாது பின்பற்றி வந்தால், அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற்று பணப்பிரச்சனை இல்லாத வாழ்க்கையை வாழலாம்.
நாம் அனைவருமே சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வதற்காகவே அயராது உழைத்து பணத்தை சம்பாதிக்கிறோம். நாம் என்ன தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருந்தால் தான் வெற்றி கிடைக்கும். எனவே அதிர்ஷ்டம் மிகவும் முக்கியம். ஏனெனில் சிலர் வாழ்வில் முன்னேற வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நிறைய கஷ்டப்படுவார்கள். ஆனால் வெற்றி கிடைக்காது. ஆனால் சிலர் லேசான முயற்சியைத் தான் எடுத்திருப்பார்கள். அவர்களுக்கு வெற்றி எளிதில் கிடைக்கும். இதற்கு முக்கிய காரணம் அதிர்ஷ்டம் தான்.

ஜோதிடத்தில் ஒருவரின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க சில பரிகாரங்கள் உள்ளன. அவற்றை தினமும் தவறாது பின்பற்றி வந்தால், அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற்று பணப்பிரச்சனை இல்லாத வாழ்க்கையை வாழலாம்.

#1
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவர் உண்ணும் போது கிழக்கு திசையை நோக்கி உண்ண வேண்டும். கிழக்கு திசையை நோக்கி சாப்பிடுவதால் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். அதேப் போல் உணவு உண்ணும் போது செருப்புக்களை அணியக்கூடாது.

#2
ஜோதிடத்தின் படி, வீட்டில் வழிபாடு செய்த பின்னரே தீபம் ஏற்ற வேண்டும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் சீமைக்கருவேல மரத்தின் வேரை கொண்டு வந்து முறைப்படி வழிபட்டு, பணம் வைத்திருக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.

#3
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கோவிலில் கொடுக்கப்படும் மலர்களை அப்படியே தூக்கிப் போடாமல், ஆற்றிலோ அல்லது ஓடும் நீரிலோ போட வேண்டும். இல்லாவிட்டால் குழியில் புதைக்க வேண்டும்.

#4
காலையில் எழுந்ததும் தவறாமல் பற்களைத் துலக்க வேண்டும். அதன் பின்னர் தான் ஏதாவது சாப்பிட வேண்டும். மேலும் குளிக்காமல் கடவுள் சிலையை தொடக்கூடாது. அது அசுபமாக கருதப்படுகிறது. இவ்வாறு செய்யும் வீடுகளில் லட்சுமி வாசம் செய்வதில்லை என்பது ஐதீகம்.

#5
ஜோதிட சாஸ்திரப்படி, வீட்டின் வடகிழக்கு மூலையில் கங்கை நீரைத் தெளிப்பதன் மூலம், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் குறைந்து நேர்மறை ஆற்றல் பரவும். ஒருவேளை கங்கை நீர் கிடைக்காவிட்டால், நீரில் மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து அந்நீரை வீடு முழுவதும் தெளிக்கலாம்.



Click it and Unblock the Notifications
