Latest Updates
-
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
உங்க பணப் பிரச்சனை நீங்கணுமா? அப்ப குரு பகவானை நினைச்சு 11 வியாழக்கிழமை இத செய்யுங்க...
கடன் பிரச்சனை மற்றும் பணப் பிரச்சனையால் கஷ்டப்பட்டு வருகிறீர்கள் என்றால் குரு பகவானுக்கு உரிய நாளான வியாழக்கிழமையில் ஒரு பரிகாரத்தை செய்து வாருங்கள்.
இன்று பலரும் பணக் கஷ்டத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்ன தான் சம்பாதித்தாலும், நாம் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்துவது என்பது கடினமாக உள்ளது. வாழ்க்கையை சிறப்பாக நடத்துவதற்காக வாங்கும் சம்பளம் போதாமல் பலர் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த ஆரம்பித்து, அதற்கு மாதந்தோறும் வட்டியும் கட்டி வருகிறார்கள். இப்படியே கடன் வாங்கி ஒரு கட்டத்தில் கடனைக் கட்ட முடியாமல் திண்டாடக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்களும் இப்படி கடன் பிரச்சனை மற்றும் பணப் பிரச்சனையால் கஷ்டப்பட்டு வருகிறீர்கள் என்றால் குரு பகவானுக்கு உரிய நாளான வியாழக்கிழமையில் ஒரு பரிகாரத்தை செய்து வாருங்கள். அதுவும் இந்த பரிகாரத்தை தொடர்ந்து 11 வியாழக்கிழமை செய்து வந்தால், குரு பகவான் பணப் பிரச்சனையைப் போக்க ஏதாவது ஒரு வழியைக் காட்டுவார். குறிப்பாக இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்ய வேண்டும்.

என்ன பரிகாரம்?
குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமை அன்று அதிகாலை 6 முதல் 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அதற்கு காலையில் எழுந்து குளித்ததும், மஞ்சள் நிற ஆடையை அணிய வேண்டும். பெண்கள் செய்வதாக இருந்தால், தலையில் மஞ்சள் நிற பூவை வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டின் பூஜை அறையை சுத்தம் செய்து அலங்கரித்து, குரு பகவான் இருந்தால் அவருக்கு மஞ்சள் நிற பூவை வைக்க வேண்டும். இந்த பரிகாரத்தை பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் செய்யலாம்.

மஞ்சள் பரிகாரம்
பூஜை அறையை சுத்தம் செய்து அலங்கரித்த பின்னர், விளக்கேற்ற வேண்டும். அதன் பின் ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மஞ்சள் தூளில் சிறிது பச்சை கற்பூரத்தை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். பச்சை கற்பூரம் நல்ல வாசனை கொண்டது என்பதால், இதற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு.

குரு மந்திரம்
தயாரித்து வைத்துள்ள மஞ்சள் கிண்ணத்தை இடது உள்ளங்கையில் வைத்துக் கொண்டு, அதன் மேல் வலது உள்ளங்கையை வைத்து மூடி, பூஜை அறையில் வடக்கு திசையை நோக்கி அமர்ந்து, 'ஓம் ஸ்ரீகுருவே நமஹ' என்ற குரு மந்திரத்தை 27 முறை உச்சரித்து, குரு பகவானை மனதார நினைத்து, உங்களுக்கு இருக்கும் பண பிரச்சனை நீங்க வேண்டும், கடன் தீர வேண்டும் என்று பிராத்தனை செய்ய வேண்டும்.

தினமும் நெற்றியில் மஞ்சள் இடவும்
பூஜை செய்த மஞ்சளை பூஜை அறையிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மஞ்சளை தினமும் காலையில் குளித்துவிட்டு நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த வியாழக்கிழமை வரைக்கு வேண்டிய மஞ்சள் தூளை பூஜைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த வியாழக்கிழமை அன்று புதிதாக மஞ்சளை பூஜை செய்து பயன்படுத்த வேண்டும்.

11 வியாழக்கிழமை செய்யவும்
இப்படி இந்த மஞ்சள் பூஜையை தொடர்ந்து 11 வியாழக்கிழமை செய்து, அந்த மஞ்சளை நாள்தோறும் நெற்றியில் வைத்து வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பணக்கஷ்டம் விரைவில் நீங்கும். குருபகவானை நம்பி இந்த பரிகாரத்தை செய்து வந்தால், கூடிய சீக்கிரம் பண பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கை.



Click it and Unblock the Notifications
