Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
புதன்கிழமைகளில் மறந்தும் இந்த விஷயங்களை செஞ்சுடாதீங்க... இல்லன்னா பண கஷ்டத்தை சந்திப்பீங்க...
புதன்கிழமைகளில் ஒருசில விஷயங்களை தெரியாமல் கூட செய்யக்கூடாது. இல்லாவிட்டால், அது வீட்டில் பண பிரச்சனை மற்றும் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும். அதோடு வாழ்க்கையில் பெரும் சிரமங்களை சந்திக்க நேரிடும்.
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு உரியது. அந்தந்த கிழமைக்குரிய கடவுளை வழிபடுவதன் மூலம் ஆசியைப் பெறலாம். அந்த வகையில் புதன்கிழமை முதன்மை கடவுளான விநாயகருக்கு உரியது. இந்நாளில் விநாயகரை வழிபடுவதன் மூலம் அவரின் பரிபூரண அருள் கிடைப்பதோடு, கிரகங்களில் புதனால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

மேலும் புதன் கிழமைகளில் மனதார விநாயகரை வழிபட்டு வந்தால், வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளும் நீங்கும் என்பது ஐதீகம். அதே வேளையில் புதன்கிழமைகளில் ஒருசில விஷயங்களை தெரியாமல் கூட செய்யக்கூடாது. இல்லாவிட்டால், அது வீட்டில் பண பிரச்சனை மற்றும் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும். அதோடு வாழ்க்கையில் பெரும் சிரமங்களை சந்திக்க நேரிடும். இப்போது புதன்கிழமைகளில் ஒருவர் மறந்தும் செய்யக்கூடாத சில விஷயங்கள் எவையென்பதைக் காண்போம்.

கருப்பு நிற ஆடைகளை அணியக்கூடாது
கருப்பு நிற ஆடைகளை புதன்கிழமைகளில் அணியக்கூடாது என்று மத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதே வேளையில் திருமணமான பெண்கள் புதன்கிழமைகளில் கருப்பு நிற ஆடைகளுடன், கருப்பு நிற ஆபரணங்களை அணியக்கூடாது. இவ்வாறு செய்வதன் மூலம் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பரிவர்த்தனைகளை தவிர்க்கவும்
புதன்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கக்கூடாது. அதே வேளையில், புதன்கிழமைகளில் யாரிடமும் கடன் வாங்கக்கூடாது. புதன்கிழமைகளில் இம்மாதிரியான பண பரிவர்த்தனைகள் செய்வது நிதி சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அதோடு பண இழப்பும் ஏற்படலாம்.

எந்த பெண்ணையும் அவமதிக்காதீர்
பெண்களை எப்போதும் மரியாதையுடன் நடத்த வேண்டும். அதுவும் புதன்கிழமைகளில் எந்த பெண்ணையும் தவறுதலாக கூட அவமதிக்கக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். ஒரு பெண் புதன்கிழமையன்று அவமானப்படுத்தப்பட்டால், அந்நபருக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்காது. மேலும் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

மேற்கு திசையில் பயணிக்காதீர்
புதன்கிழமைகளில் மேற்கு திசைகளில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் புதன்கிழமைகளில் இந்த திசைகளில் பயணித்தால், எதிலும் தோல்வி கிடைப்பதோடு, பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என்ற நம்பிக்கை ஒன்று உள்ளது.

பிறர் மனம் புண்படும்படி பேசாதீர்
கிரகங்களில் புதன் புத்தி, விவேகம், பேச்சு மற்றும் தொடர்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. ஆகவே புதன்கிழமையன்று யாருடைய மனமும் புண்படும்படி பேசாதீர்கள். ஒருவேளை இவ்வாறு செய்தால், அந்நபரின் வீட்டில் மகிழ்ச்சியும் வளமும் இருக்காது. அதோடு பண பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.



Click it and Unblock the Notifications