Latest Updates
-
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்! -
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் நவம்பர் மாதம் வரை டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அம்ரித்சரி பன்னீர் புர்ஜி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 5 ராசிக்காரங்க மற்றவர்களை விட வாழ்க்கையில் ஈஸியாக ஜெயிக்கும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்க ராசி என்ன? -
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்!
தீபாவளிக்கு முதல் நாள் இந்த பொருட்களை வாங்கினால், வீட்டில் செல்வமும் அதிர்ஷ்டமும் அதிகரிக்குமாம்...
தீபாவளிக்கு முன் வரும் தனத்திரயோதசி நாளில் பெரும்பாலும் மக்கள் தங்கம் மற்றும் வெள்ளியைத் தான் வாங்குவார்கள். ஆனால் இதைத் தவிர வேறு சில பொருட்களை வாங்கினாலும், வீட்டில் செல்வம் பெருகும்.
தீப ஒளித் திருவிழாவான தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தீபாவளி பண்டிகைக்கு முந்தைய தினம் தான் தந்தேரஸ் என்னும் தனத்திரயோதசி கொண்டாடப்படுகிறது. இந்த தனத்திரயோதசி ஐப்பசி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமியை அடுத்த 13 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் தனத்திரயோதசி நவம்பர் 2 ஆம் தேதி வருகிறது. திரயோதசி திதியானது நவம்பர் 2 ஆம் தேதி காலை 11:31 மணிக்கு தொடங்கி, நவம்பர் 3 ஆம் தேதி காலை 09:02 மணிக்கு முடிவடைகிறது.

பஞ்சாங்கத்தின் படி, தந்தேராஸ் சுபமுகூர்த்த நேரம் நவம்பர் 2 ஆம் தேதி மாலை 06:17 மணிக்கு தொடங்கி இரவு 08:11 மணிக்கு முடிவடையும். தன என்பது செல்வத்தைக் குறிக்கிறது. இந்நாளில் பக்தர்கள் இந்த சுபமுகூர்த்த வேளையில் செல்வத்தை வாங்கி அதை தெய்வத்தின் முன் வைத்து வணங்கினால், வீட்டில் நல்ல அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொடுக்கும். பெரும்பாலும் மக்கள் தங்கம் மற்றும் வெள்ளியைத் தான் வாங்குவார்கள். ஆனால் இதைத் தவிர வேறு சில பொருட்களை வாங்கினாலும், வீட்டில் செல்வம் பெருகும். இப்போது தனத்திரயோதசி நாளில் எந்த பொருட்களை வாங்கலாம் என்பதைக் காண்போம்.

பாத்திரங்கள்
தனத்திரயோதசி நாளில் பாத்திரங்களை வாங்கலாம். உங்களின் பட்ஜெட் குறைவு அல்லது என்ன வாங்குவது என்று தெரியாமல் இருந்தால், உங்கள் வீட்டிற்கு சில்வர் அல்லது பித்தளையில் ஏதாவது ஒரு பாத்திரத்தை வாங்குங்கள். இந்த பொருட்களை தீபாவளி அன்று செய்யப்படும் லட்சுமி பூஜையின் போது பயன்படுத்துவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

துடைப்பம்
துடைப்பம் லட்சுமி தேவி குடிகொண்டிருக்கும் ஒரு பொருள் என்பது ஒரு மத நம்பிக்கை. புராணங்களானது, துடைப்பம் வீட்டில் உள்ள எதிர்மறையை நீக்கி, நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதாக கூறுகின்றன. மேலும் துடைப்பத்தைக் கொண்டு வீட்டைப் பெருக்கும் போது, அது வீட்டில் உள்ள குப்பை நீக்குவதோடு மட்டுமின்றி, வறுமை மற்றும் எதிர்மறை ஆற்றலையும் வெளியேற்றுகிறது.

கேட்ஜெட்டுகள்
புதிய மொபைல் போன், ஃப்ரிட்ஜ், லேப்டாப், இயர்போன்கள் போன்ற கேட்ஜெட்டுகளை தனத்திரயோதசி நாளில் வாங்கலாம். மேலும் தீபாவளியை முன்னிட்டு, இந்த பொருட்கள் தள்ளுபடியில் இருப்பதால், இவற்றில் முதலீடு செய்ய இது ஒரு சிறந்த நேரம்.

தங்கம் மற்றும் வெள்ளி
தனத்திரயோதசி நாளில் தங்கம் வாங்குவது மிகவும் நல்லது. தங்கம் வாங்க அட்சய திருதியை மட்டுமின்றி, தனத்திரயோதசி நாளும் சிறந்ததாகும். உங்களால் பெரிய அளவில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்க முடியாவிட்டாலும், ஒரு கிராம் தங்கம் அல்லது வெள்ளி நாணயத்தை வாங்குங்கள். இதனால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

கோமதி சக்கரம்
கோமதி சக்கரம் தன வரவை அதிகரிக்கும் பொருள். இது லட்சுமி தேவியின் அருள் நிறைந்தது. மகிமை பொருந்திய இந்த கோமதி சக்கரத்தை தனத்திரயோதசி நாளில் வாங்குவது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. அதுவும் 11 கோமதி சக்கரங்களை ஒரு மஞ்சள் துணியில் போட்டு கட்டி, பணம் வைக்கும் இடத்தில் அல்லது லாக்கரில் வைப்பது மிகவும் நல்லது என்று நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications
