Latest Updates
-
கொளுத்தும் கோடையில் கற்றாழை வெச்சு.. இப்படி ஒருவாட்டி குழம்பு செய்யுங்க.. மீன் குழம்பு மாதிரி இருக்கும்.. -
மே 8 கிரகப்பிரவேசம்: உங்கள் புதிய வீட்டில் செல்வம் கொழிக்க இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க! -
World Asthma Day 2026: ஆஸ்துமா குணமாக இந்த கசாயத்தை 30 நாட்கள் குடிங்க..- கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
அமேசான் சம்மர் சேல்: உங்கள் வீட்டில் செல்வத்தை அள்ளித்தரும் வாஸ்து ரகசியங்கள் இதோ! -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மே 17 முதல் அடுத்த 5 மாதம் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி, எடை மடமடன்னு குறையும்.. -
இன்றைய ராசிபலன் 05 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு சொத்தும், வெற்றியும் குவியப்போகுது! -
புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் புயலடிக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்டைல் பாலக் கீரை தொக்கு ரெசிபி - செஞ்சு பாருங்க, டிபன், சாதத்துக்கு செமையா இருக்கும்
இன்று எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா? உங்கள் ராசிக்கு என்ன நடக்கப் போகுது
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
புதிய நாள் பிறந்தாலே அன்று நம் ராசிக்கு என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வம் தானாக வந்து நம்மிடையே ஒட்டிக்கொள்ளும். ஏனெனில் இன்று என்ன நடக்கப்போகிறது தெரிந்தால் நாம் அதற்கேற்றாற்போல நாம் நம்மை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு நமக்கு உதவியாக இருப்பதுதான் ராசிபலன்கள் ஆகும்.

நமது ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு கடவுளால் ஆளப்படுகிறது. எனவே அன்றைய நாள் அதிர்ஷ்டமான நாளாக அமைய நமது ராசிப்படி நாம் செய்ய வேண்டியதை கிரகங்களின் நிலையை பொறுத்து ஜோதிடத்தின் மூலம் கண்டறிந்து விடலாம். இந்த பதிவில் இன்று உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.

மேஷம்
உங்களின் மகத்தான முயற்சியும், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் உங்களுக்கு நீங்கள் விரும்பும் முடிவுகளைத் தரும். முதலீடுகளில் இன்று கவனமாக இருக்க வேண்டும், உங்களின் முயற்சிகளை கைவிட்டு விடாதீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் மனநிலையை புரிந்துகொண்டு நடந்து கொள்ளுங்கள். முக்கியமான விஷயங்களின் மீது கவனம் செலுத்துங்கள். இன்று உங்களின் அதிர்ஷ்டமான எண் 4 ஆகும்.

ரிஷபம்
உங்கள் வாழக்கைத் துணையின் தைரியம் இன்று உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்கக்கூடும். அனுபவம் வாய்ந்தவர்களின் அறிவுரைகளை ஏற்று அதற்கேற்றாற் போல முதலீடுகள் செய்வது நல்லது. உங்களின் தோற்றத்தை கவனிப்பதன் மீது அக்கறை செலுத்துங்கள். உங்களின் நேரத்தை மற்றவர்களுக்காக செலவழிக்க இது சிறந்த நாளாகும். இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான எண் 3 ஆகும்.

மிதுனம்
நீண்ட நாட்கள் உங்களை வாட்டிய நோயிலிருந்து இன்று உங்களுக்கு விடுதலை கிடைக்கும். கோபக்காரர்களிடம் இருந்தும், சுயநல எண்ணம் உள்ளவர்களிடம் இருந்து இன்று விலகி இருங்கள். மற்றவர்களை ஈர்ப்பதற்காக அதிக முயற்சி மேற்கொள்ளாதீர்கள். உடன் பிறந்தவர்களுடன் இன்று சுமூகமான உறவை கடைபிடியுங்கள். காதலுக்கு இது சிறந்த நாளாகும். உங்கள் வாழ்க்கைத் துணையால் அதிக செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்களின் அதிர்ஷ்டமான எண் 1 ஆகும்.

கடகம்
இன்று உங்களின் வசீகரம் அனைவரையும் உங்களை நோக்கி ஈர்க்கும். உங்கள் செலவினங்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டிய நாளாகும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் தேவைகள் மீது அக்கறை செலுத்த வேண்டிய நாள். உங்களின் கண்ணீர் காணாமல் போகும் நாளாக இது இருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான எண் 5 ஆகும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு வெற்றிகள் வந்து சேரும் நாளாக இருக்கும். பயணங்கள் மற்றும் பணத்தை செலவழிக்கும் மனநிலையில் இன்று இருப்பீர்கள். உங்களின் குடும்ப சூழ்நிலைகள் உங்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். எனவே கோபப்படுவதை குறைத்துக் கொள்ளுங்கள். இன்று உங்களின் அதிர்ஷ்டமான எண் 3 ஆகும்.

கன்னி
உங்களின் கண்ணியமான நடத்தை இன்று அனைவராலும் பாராட்டப்படும். எதிர்பாராத சொந்தங்களிடம் இருந்து அழைப்பு வரும். பல நாட்கள் உங்கள் வேலையில் இருந்த தடங்கல்கள் இன்று முதல் விலகும். இன்று உங்களுக்கும், உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையேயான உறவு ஆழமானதாக இருக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான எண் 2 ஆகும்.

துலாம்
உங்களின் ஆரோக்கிய விஷயத்தில் இன்று மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணரீதியான புதிய தொடர்புகளின் மூலம் பணம் உங்கள் கைகளில் அதிகம் புரளும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகள் இன்று உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும். பயணங்கள் இன்று உங்களுக்கு புத்துணர்ச்சியை வழங்குவதாக இருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான எண் 4 ஆகும்.

விருச்சிகம்
உங்களின் உடலான பிரச்சினைகள் உங்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக இருக்கும். அதிக பணத்தின் மீது இன்று உங்களுக்கு ஆசைவரும். பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ஏற்படும் சண்டைகள் இன்று உங்களின் நிம்மதியை கெடுக்கும். இன்று நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் இது. இன்று உங்களின் அதிர்ஷ்டமான எண் 6 ஆகும்.

தனுசு
பரபரப்பான சூழ்நிலைகள் இருந்தாலும் இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பானதாகவே இருக்கும். பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது உங்களுக்கு நீண்ட கால இலாபத்தை ஏற்படுத்தும். விருந்தினர்கள் இன்று உங்களின் நேரத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்வார்கள். முக்கியமானவர்களுடம் உரையாடும் போது வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இன்று உங்களின் அதிர்ஷ்டமான எண் 3 ஆகும்.

மகரம்
இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் மற்றும் இலாபங்கள் நிறைந்த நாளாக இருக்கும். பெரிய திட்டங்கள் மற்றும் சிந்தனைகள் உள்ளவர்கள் இன்று உங்களின் கவனத்தை ஈர்ப்பார்கள். உங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவழிக்க முயற்சி செய்யுங்கள். உங்களின் மகிழ்ச்சிக்கு இதுதான் இன்று மூலகாரணமாக இருக்கும். உங்கள் வாழக்கைத் துணை இன்று உங்களின் போதுமான ஆதரவு கொடுக்க மாட்டார்கள். இன்று உங்களின் அதிர்ஷ்டமான எண் 1 ஆகும்.

கும்பம்
இன்று புகைபிடிக்காமல் இருப்பது உங்களுக்கு நல்லது. எந்தவொரு செலவையும் செய்யும் முன் உங்கள் பெற்றோரிடம் ஆலோசனை செய்வது நல்லது. உங்களின் கடின உழைப்பு இன்று உங்களுக்கு சிறந்த பலன்களை வழங்கும். உங்கள் வாழ்க்கைத் துணையால் இன்று உங்களின் வேலையில் சில சிரமங்கள் ஏற்படலாம். இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான எண் 9 ஆகும்.

மீனம்
உடல் நோய்களில் இருந்து இன்று உங்களை மீட்பதற்கு இது சிறந்த நாளாகும். யாரிடமும் கோபப்படாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். பகல் நேர கனவுகளை தவிருங்கள். ஆபத்து நேரத்தில் மற்றவர்களுக்கு உதவுவது உங்களுக்கு மரியாதையை ஏற்படுத்தி தரும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான எண் 7 ஆகும்.



Click it and Unblock the Notifications