Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
அத்திவரதர் குளத்துக்குள் போகும் இன்று எந்த ராசிக்கு என்ன பலன் உண்டாகும்?...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு நாளையும் புதிதாகத் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருப்பவர்கள் தங்களுடைய ராசி மற்றும் கிரகங்கள் எப்படி நமக்குச் சாதகமாக இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்வதிலும் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். முக்கிய உத்தியுாகத்தில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். முக்கிய முடிவுகளை வீட்டில் உள்ளவர்களிடம் கலந்து ஆலோசித்து மேற்கொள்வது நல்லது. கல்வியில் கொஞ்சம் முன்னேற்றமான சூழல்கள் உருவாகும். வெளியூர் பயணங்களில் இருந்து வந்த தடைகள் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

ரிஷபம்
வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வீட்டில் சுப செய்திகள் வந்து சேரும். அதனால் குதூகலம் அதிகரிக்கும். குழந்தைகள் பற்றிய வீண் கவலைகள் தீரும். தொழிலில் பங்குதாரர்களின் உதவியினால் தொழிலில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். அதனால் தொழில் அபிவிருத்தியும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மிதுனம்
வேலையிடத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்க ஆரம்பிக்கும். உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேவையில்லாத வீண் கவலைகள் தோன்றும். அடுத்தவர்களுக்கு உதவி சய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் இருந்து வந்த கால தாமதங்கள் நீங்க ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கடகம்
வீட்டில் மனைவியின் ஆதரவினால் சில முக்கிய செயல்களைச் செய்து முடிப்பீர்கள். வீட்டுக்கு உறவினர்களின் வருகையினால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். தேவையில்லாத அலைச்சலும் வீண் செலவுகளும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

சிம்மம்
முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். போட்டி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதிர்பாலினத்தவர்களால் உங்களுக்கு ஆதரவான சூழல்க்ள உருவாகும். பயணங்களில் கொஞ்சம் நிதானமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி
உங்களுடைய வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவினால் உங்களுடைய லாபங்கள் அதிகரிக்கும். வீட்டில் உள்ள பிள்ளைகள் வீட்டின் சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர்கள். நண்பர்களுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பந்தமான முயற்சிகள் வெற்றியடையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

துலாம்
இன்று மனம் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கால்நடைகளின் மூலம் உங்களுடைய லாபம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களுக்குச் சாதகமாகச் செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான விவகாரங்களில் கொஞ்சம் நிதானம் வேண்டும். பணியில் நீங்கள் எதிர்பார்த்த சில மாற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
வியாபாரம் சம்பந்தப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். அதன்மூலம் அனுகூலங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் பணி நிமித்தமாக முக்கிய பொறுப்பாளர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். பொது சேவை செய்கின்றவர்களுக்கு இன்று சாதகமான நாளாக அமையும். நண்பர்களின் மூலமாக கொஞ்சம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

தனுசு
மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் தீர்ந்து போகும். மற்றவர்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வாதத் திறமையினால் அனைவரையும் கவரும் திறன் உண்டு. உயர் அதிகாரிகளுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கொஞ்சம் அமைதியுடன் நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

மகரம்
உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் தீரும். தொழிலை உங்களுடைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்வீர்கள். உங்களுடைய கோபத்தை விடுத்து கொஞ்சம் அமைதியுடன் செயல்படுவது நல்லது. நண்பர்களுடைய ஆதரவினால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். புதிய சிந்தனைகள் மனதுக்குள் தோன்றி மறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கும்பம்
புதிய தொழில் தொடங்குவது சம்பந்தமான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். தலைமைப் பதவியில் இருக்கின்றவர்கள் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. வாகனப் பயிற்சியை மேற்கொள்கின்ற பொழுது, கொஞ்சம் கூடுதல் நிதானம் தேவை. உங்களுடைய உடைமைகளில் கொஞ்சம் கவனம் வேண்டும். புத்திக் கூர்மையில் கொஞ்சம் மந்தத் தன்மை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மீனம்
மற்றவர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எந்த செயல் செய்தாலும் அதில் கொஞசம் கூடுதல் கவனமாக இருத்தல் நலம். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேற கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். வாகனப் பராமரிப்பு செலவு செய்ய வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











