For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைக்கு எந்த ராசிக்காரங்க சண்டை போடுவாங்க தெரியுமா?

|

இன்றைக்கு ஏதாவது திடீர் திருப்பங்கள் வருமா? இன்றைக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறதோ என்று நினைக்கிறீர்களா? இன்றைய தினம் கிரகங்களின் சஞ்சாரத்தினால் 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்று புதிய வேலையை தொடங்க அருமையான நாள். சிறு தொழில் தொடங்குவதற் ஏற்ற நாள். உங்கள் புதிய முயற்சிகள் எவ்வித தடங்களும் இல்லாமல் வெற்றிகரமாக முடியும். இல்லற வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் நாள். மனைவியின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு பேச்சில் நிதான போக்கை கடைபிடித்தால் பெரிய அளவில் சண்டை வராமல் தவிர்க்கலாம். இன்றைக்கு பண விரயத்தை தவிர்க்க செலவுகளை கட்டுக்குள் வைப்பது நல்லது. பயணம் இனிதாகவும் பொழுது போக்காகவும் அமையும். வாகனத்தில் மித வேகத்தை கடைபிடிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் : கரும் பச்சை

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 5:30 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

பணியிடத்தில் நிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கும். சலுகைகள் மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகரித்துக் காணப்படும். வியாபாரிகளுக்கு இன்று ஓரளவு லாபகரமான நாளாக அமையும். குடும்ப வாழ்க்கை வழக்கம்போலவே இனிதாக அமையும் நாள். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள். இது உங்களுக்கு மன நிம்மதியைக் கொடுக்கும். பெற்றோர் ஆலோசனையை கேட்டு நடந்தால் அதிக பயன் கிடைக்கும். இல்லற வாழ்க்கை இனிமையாக கழியும். வாழ்க்கை துணைவி உங்களை புரிந்து நடந்து கொள்வார். மனைவியின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து நடப்பது நல்லது. போதை வஸ்துக்களை தவிர்ப்பது நன்மை விளைவிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : காலை 8:20 முதல் நண்பகல் 12:30 மணிவரை

மிதுனம்

மிதுனம்

இன்றைய நாள் உங்களுக்கு மிகச் சிறப்பான நாளாக அமையக்கூடும். அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். பணவரவு சீராக இருக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு கனிந்துள்ளது. உங்கள் மனைவியின் உடல் நலனில் அக்கறை தேவை. அவருடன் அதிக நேரத்தை செலவிடுவது அவருக்கு கூடுதல் தெம்பை அளிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடிய நாளாக இருக்கும். ஆனாலும், அவசரப்படாமல் உங்கள் முடிவுகளை கவனமாக எடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 8

சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 10:00 மணிவரை

கடகம்

கடகம்

இன்றைக்கு உங்கள் உடல் நலனில் அதிக அக்கறை செலுத்துவேண்டியது அவசியம். முறையான உணவுப் பழக்கத்தோடு சிறிது ஓய்வு மற்றும் உடற்பயிற்சியை மேற்கொண்டால் உடலும் மனதும் அமைதியுறும். இல்லத்தரசியுடன் உறவு சுமூகமாக இருக்கும். வேலை விசயமாக திடீர் வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை சுமாராகவே இருக்கக்கூடும். யாரையும் கண்மூடித்தனமாக நம்பவேண்டாம். இதனால் இழப்புகள் ஏற்படலாம். கவனமாக இருந்தால் பண இழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். குடும்பத்தில் அமைதி நிலவ வாக்குவாதத்தை தவிர்க்கவும். உங்கள் நடத்தையில் சந்தேகம் கொண்டு, உங்கள் வாழ்க்கைத் துணை சண்டையிடக்கூடும். எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 16

சாதகமான நேரம் : விடிகாலை 4:05 முதல் காலை 10:30 மணிவரை

சிம்மம்

சிம்மம்

இன்றைக்கு உங்களின் கட்டுக்கடங்காத கோபத்தால், மற்றவர்கள் மத்தியில் உங்களின் மதிப்பை இழக்க நேரிடலாம். பேசும் வார்த்தையில் நிதானப் போக்கை கடைபிடிக்காவிட்டால், உங்கள் நற்பெயரை இழக்க நேரிடும். எச்சரிக்கையாக இருக்கவும். தேவையற்ற விஷயங்களுக்கு நேரத்தை செலவிடுவதை தவிர்க்க பாருங்கள். அதற்கு பதிலாக புதிய உறவுகளை தேடிப்பிடித்து உறவாடுங்கள். இது உங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அதிக அளவில் நன்மை விளைவிக்கும். பணப்பிரச்சனைகள் தீரும் நாள். உங்கள் நிதி நிலைமையில் முன்னேற்றம் காணப்படும். இதனால் நிலுவையில் உள்ள கடன்களில் சிலவற்றை திருப்பி செலுத்த முடியும். மாலைப் பொழுதில் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்தை போக்கும். இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 20

சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் மாலை 6:00 மணிவரை

கன்னி

கன்னி

சமீபகாலமாக உங்கள் நிதி நிலைமை மந்தகதியிலேயே இருந்து வருவது உங்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதை தவிர்த்துவிட்டு, உங்க்ளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவது நல்ல பலனைத் தரும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத நல்ல முடிவுகள் கிடைக்கும். உங்கள் வேலையில் இடையூறு ஏற்பட்டால், அதை திறமையாக சமாளித்து வெற்றி காண்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் நாள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். இது உங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுக்கும். பொருளாதார நிலையில் ஏற்றம் உண்டு. எதிர்பாராத பணவரவு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண் : 22

சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் மாலை 6:15 மணிவரை

துலாம்

துலாம்

இன்றைக்கு உங்கள் குடும்பத்தாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட நேரிடும். வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்படாமல் இருக்க, உங்கள் ஈகோவை விட்டுவிட்டு நிதானமாக பேசவும். இதனால் வீட்டில் அமைதியான சூழல் நிலவும். உங்கள் மனம் அமைதி பெற யோகா மற்றும் தியானம் செய்வது மன அமைதியைக் கொடுக்கும். வீட்டில் பெரியவர்களுடன் பேசும்போது, புத்திசாலித்தனத்தோடு பேசுங்கள். இதனால் உங்கள் மதிப்பு கூடும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் தந்தையிடம் இருந்து பண உதவியை எதிர்பார்க்கலாம். பணியிடத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதை தவிர்க்க, உடல் நலனில் அக்கறை செலுத்துவேண்டியது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 30

சாதகமான நேரம் : மாலை 6:20 முதல் இரவு 10:45 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்றைக்கு உங்களுக்கு ஏற்ற இறக்கமான நாளாக அமையும். பணியிடத்தில் நிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கும். பொருளாதார வசதி வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். பணத்தை முதலீடு செய்வதாக இருந்தால், நன்கு யோசித்து நல்ல முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம். குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை எழக்கூடும். உங்கள் குடும்பத்தால் உங்களுடைய கருத்துகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்பதால், நிதான போக்கை கடைபிடியுங்கள். அனைவர் மீதும் அன்பு செலுத்துங்கள். இல்லத்தரசியுடனான உறவில் நெருக்கம் அதிகரிக்கும். பரஸ்பர அன்பு மேலோங்கும் நாள். வியாபாரத்தில் உங்கள் கூட்டாளியின் நடவடிக்கை உங்களுக்கு சந்தேகத்தை கொடுக்கும். இது உங்கள் உடல் நலத்தை கெடுக்கும் என்பதால் கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 7

சாதகமான நேரம் : முற்பகல் 11:30 முதல் மாலை 5:20 மணிவரை

தனுசு

தனுசு

இன்றைக்கு சில நல்லல செய்திகள் உங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும். மாணவர்கள் கடின உழைப்பின் மூலம் நல்ல பலனை பெறலாம். முன்பு நீங்கள் செய்திருந்த நிதித் திட்டங்கள் உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கக்கூடும். இது உங்களுக்கு கூடுதல் தெம்பை அளிக்கும். அதே நேரத்தில் செலவுகளில் சிக்கனத்தை கடைபிடிப்பது அவசியம். பணியிடத்தில் ஊழியர்கள் கவுரவிக்கப்படுவார்கள். இது உங்களின் நேர்மையான மற்றும் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாகும். இல்லற வாழ்க்கையில் அன்பும் அமைதியும் அதிகரித்து காணப்படும் நாள். உங்கள் மனைவுயுடன் நிம்மதியாக பொழுதைக் கழிப்பீர்கள். காதலர்களுக்கு இனிமையான நாள். இருவருக்கும் இடையில் இருந்து வந்த அனைத்து சிக்கல்களும் தீர்ந்து, மகிழ்ச்சி பொங்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 24

சாதகமான நேரம் : காலை 8:20 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

மகரம்

மகரம்

இன்றைக்கு முக்கிய பிரச்சனைகளை குடும்பத்தாருடன் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய நாள். எனவே கவனமாக இருக்கவேண்டிய நாள். அதே சமயத்தில் இது உங்களின் எதிர்கால திட்டத்திற்கு இடையூறாக இருக்கும் என்பதால் அதிக நேரத்தை செலவிடுவதை தவிர்க்கவும். பணியிடத்தில் நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க வேண்டிய நாள் இது. வியாபாரிகளுக்கு வர்த்தகத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும். இல்லற வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக சில பிரச்சனைகள் எழக்கூடும். அவற்றை கவனமாக கையாண்டு பிரச்சனையில் இருந்து மீள்வது நல்லது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : லைட் பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : நண்பகல் 12:25 முதல் மாலை 4:00 மணிவரை

கும்பம்

கும்பம்

இன்றைக்கு இல்வாழ்க்கையில் சிக்கல் எழக்கூடும். சில சின்னஞ்சிறிய பிரச்சனைகள் கூட உங்களின் மனைவியை எரிச்சலடையச் செய்யலாம். இதனால் இருவரின் உறவில் விரிசலை ஏற்படுத்தக்கூடும். எனவே கவனமாக இருக்கவும். காதலர்களுக்கு இனிமையான நாளாக அமையும். காதலரிடம் இருந்து அருமையான விலையுயர்ந்த பரிசுப் பொருள் ஒன்றை பெற வாய்ப்புள்ளது. பணியிடத்தில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழக்கூடும். உங்களக்கு பதவி உயர்வு மற்றும் இடமாற்ற உத்தரவு போன்றவை கிடைக்கப் பெறலாம். வியாபாரிகள் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள். வர்த்தகத்தில் கூடுதல் லாபம் கிடைக்கப்பெறுவார்கள். பொருளாதார நிலைமை வழக்கம்போலவே இருந்து வரும். வீண் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். மாணவர்களுக்கு அருமையான நாள் இன்று. உங்களின் ஆசிரியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 2

சாதகமான நேரம் : மாலை 5:20 முதல் இரவு 9:00 மணிவரை

மீனம்

மீனம்

பணியாளர்கள் அலுவலக பணியில் கவனமாக இருக்க வேண்டிய நாள். சக ஊழியர்களின் போட்டி பொறாமை அரசியலில் சிக்கி அவஸ்தைப்பட நேரிடும். கவனமாக இருந்து நிலைமையை கையாளுங்கள். இன்றைக்கு நீங்கள் உங்கள் காதலியின் எண்ணங்களிலேயே மிதந்து கொண்டிருப்பீர்கள். குடும்பத்தில் மனைவியின் உதவியுடன் முக்கிய பணியை முடிப்பீர்கள். இதனால் உங்கள் மனம் அமைதியடைவதோடு குடும்பத்திலும் மகிழ்ச்சி பிறக்கும். குடும்பத்தாருடன் வெளியில் சென்று வரலாம். எதிர்பாராத பணவரவால் உங்கள் நிதி நிலைமை மேம்படும். நிலுவையில் உள்ள கடனை பைசல் செய்ய முடியும். குழந்தைகள் மூலம் எதிர்பாராத பிரச்சனைகள் எழலாம். எனவே குழந்தையின் நலனில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியமாகும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 36

சாதகமான நேரம் : முற்பகல் 11.00 முதல் இரவு 8:00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 9th November 2019 Saturday

Check out the daily horoscope for 9th november 2019 saturday. Read on...
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more