Latest Updates
-
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன?
இந்த ராசிக்காரங்களுக்கு பிரச்சினை சுத்தி அடிக்கப்போகுது ஜாக்கிரதை...!
இன்று மார்ச் 6 ஆம் நாள் வெள்ளிக்கிழமை இன்றைக்கு யாருக்கு பணவரவு வரும் யாருக்கு செலவு அதிகமாகும் யாருக்கு கோபம் வரும் யாருடைய கனவு நனவாகும் என்று பல கேள்விகள் எழலாம்.
இன்று மார்ச் 6 ஆம் நாள் வெள்ளிக்கிழமை இன்றைக்கு யாருக்கு பணவரவு வரும் யாருக்கு செலவு அதிகமாகும் யாருக்கு கோபம் வரும் யாருடைய கனவு நனவாகும் என்று பல கேள்விகள் எழலாம். அனைத்து கேள்விகளுக்கு இன்றைய ராசி பலன்கள் மூலம் பதில் கிடைக்கும்.

மேஷம்
சந்திரன் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு பயணங்களால் அலைச்சலும் சோர்வும் ஏற்படும் ரொம்ப டல்லா இருப்பீங்க அது உங்க வேலையில எதிரொலிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் வியாபாராத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். இன்றைய தினம் கடன்கள் குறையும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சொந்தக்காரர்கள் உறவினர்கள் வழியில் நல்ல செய்திகள் தேடி வரும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 12 மணி - இரவு 7 மணி

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றனர். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு காரணமாக உடல் அசதி சோர்வு உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வேலை விசயமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். வராத கடன்கள் வசூலாகும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
அதிர்ஷ்ட எண் : 24
அதிர்ஷ்ட நேரம் : காலை 9 மணி - இரவு 8.20 மணி

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசியில் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு பணவரவு அதிகமாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களினால் நன்மைகள் நடைபெறும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்காதீர்கள். சொந்தக்காரர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சுபகாரியங்கள் கைகூடி வரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு வெளியூர் வெளிநாட்டு தொடர்பு ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம் : இரவு 1.30 மணி - இரவு 8 மணி

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். இன்றைய தினம் உங்களுக்கு லேசான மனக்குழப்பம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். பணப்பிரச்சினைகள் குறையும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். வருமானம் பெருகும். உங்க நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும், எடுக்கும் புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 16
அதிர்ஷ்ட நேரம் : இரவு 1.30 மணி மாலை 3.30 மணி

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு விரைய ஸ்தானமான 12ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உறவினர்களுடன் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். தொழிலாளர்களை அனுசரித்து செல்லுங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நற்பலன் கிடைக்கும். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 12
அதிர்ஷ்ட நேரம் : இரவு 12.45 மணி - இரவு 6 மணி

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று உங்களின் குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும் லாபம் கிடைக்கும். பண வருமானம் வரும். வேலை உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : புளு
அதிர்ஷ்ட எண் : 15
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி - இரவு 9.20 மணி

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கூட்டாளிகளின் ஆலோசனை தொழில் வளர்ச்சிக்கு உதவும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் நன் மதிப்பை பெறுவீர்கள். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். பொன் பொருள் சேரும். சேமிப்பு உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 30
அதிர்ஷ்ட நேரம் : காலை 11.30 - 6.30 மணி

விருச்சிகம்
சந்திரன் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடி ஏற்படும். கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். வேலையில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவு கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். தெய்வ வழிபாடு நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தொழில் ரீதியான மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 32
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3.30 மணி இரவு 8.மணி

தனுசு
சந்திரன் இன்றைய தினம் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு. உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் ஏற்படும். இன்று எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செல்வது நல்லது. யாருடனும் வீணான வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நேரம் : காலை 8 மணி - இரவு 2.15 மணி

மகரம்
சந்திரன் இன்றைய தினம் ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு திடீர் பணவரவு கிடைக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் அனுகூலம் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆலய வழிபாடு மன அமைதியை தரும் அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : க்ரே
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நேரம் : மாலை 2 மணி - இரவு 7 மணி

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். ஆலய தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்வீர்கள். இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். பழைய கடன்கள் தீரும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறையுங்கள் கடன் ஏற்படாமல் தப்பிக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட நம்பர் : 20
அதிர்ஷ்ட நேரம் : காலை 6.30 மணி - மாலை 4 மணி

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்றைய தினம் உங்களுக்கு பிள்ளைகளால் நன்மைகள் நடைபெறும். இன்று உங்களின் சின்னச் சின்ன பிரச்சினைகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய நபர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடல்நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். மருத்துவ ஆலோசனை மனதில் மகிழ்ச்சியை தரும்.
அதிர்ஷ்ட நிறம் : காவி
அதிர்ஷ்ட எண் : 38
அதிர்ஷ்ட நேரம் : மாலை 2.15 மணி இரவு 7.20 மணி



Click it and Unblock the Notifications











