Latest Updates
-
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா?
இந்த ராசிக்காரங்களுக்கு இன்னைக்கு சிக்கல் வரப்போகுது ஜாக்கிரதை...
உங்களுக்கு இன்றைக்கு எப்படி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு வருமா? சேர்த்து வைத்த பணமெல்லாம் செலவாகி விடுமோ என்ற பயம் வருகிறதா? உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் இன்றைய ராசி பலன் விடை தருகிறது ம
உங்களுக்கு இன்றைக்கு எப்படி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு வருமா? சேர்த்து வைத்த பணமெல்லாம் செலவாகி விடுமோ என்ற பயம் வருகிறதா? உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் இன்றைய ராசி பலன் விடை தருகிறது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை பார்க்கலாம்.

மேஷம்
இன்னிக்கு நீங்க எதிர்பாத்த எடத்துல இருந்து உதவி கிடைக்காம போகலாம். வீட்ல உத்தியோகம் பாக்குறவங்க ஆபிஸ் சீனியர் அதிகாரியோட பேச்சை கேட்டு ஒழுங்கா வேலை செஞ்சா அநாவசிய பிரச்சனைங்களை தவிர்த்துடலாம். இல்லாட்டி சிக்கல் உண்டாகும். கூடப்பொறந்தவங்களால நல்லது நடக்க வாய்ப்பிருக்கு.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 1
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் மாலை 6:00 மணிவரை

ரிஷபம்
கொரோனா பீதி இருக்குற சூழ்நிலையில வெளியூர் பிரயாணத்தை அவாய்ட் பண்ணிட்டு வீட்டுலயே உக்காந்திருக்குறது நல்லது. வேலை செய்யறவங்க எதிர்பாத்துட்டு இருந்த ட்ரான்ஸ்பர் கிடைக்குறதுக்கு இன்னிக்கு சந்தர்ப்பம் இருக்கு. பிள்ளைங்க வழியில நல்ல செய்திங்க உங்களை தேடி வரும். குடும்பத்துலயும் இன்னிக்கு எல்லோரும் ஒத்துமையா இருப்பாங்க.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 10:00 மணிவரை

மிதுனம்
இன்னிக்கு பிசினஸ் விஷயமா நீங்க எடுக்குற முயற்சிங்க வெற்றியில முடியும். பெண்கள் அநாவசிய பொருட்களை வாங்குறதுல ரொம்பவே ஆர்வம் காட்டுவாங்க. ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறங்களுக்கு இருந்த போட்டி பொறாமை விலகிடும். சுபமங்கள காரிய முயற்சிங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். இன்னிக்கு உங்க நிதி நிலைமையும் அற்புதமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 27
சாதகமான நேரம் : காலை 7:45 முதல் மாலை 4:30 மணிவரை

கடகம்
இன்னிக்கு உங்க பிள்ளைங்க ரொம்பவே பாசமா இருப்பாங்க. நினைச்ச காரியம் இனிதே நடந்தேறிடும். உத்தியோகத்துல உழைப்புக்கு ஏத்தமாதிரி பலன் கிடைச்சிடும். வீட்டு பெரியவங்களோட இருந்துவந்த மனஸ்தாபங்கள் மறைஞ்சிடும். சொந்தக்காரங்க கிட்ட உறவு சுமூகமா இருக்கும். இன்னிக்கு சாயந்திரம் வரைக்கும் மனசு அலைபாய்ஞ்சி கிடந்தாலும் நெனச்ச காரியும் நல்ல படியா நடந்தேறும். வருமானமும் கூடுறதுக்கு சந்தர்ப்பம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : மாலை 5:20 முதல் இரவு 9:30 மணிவரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க குடும்பத்துல தேவையில்லாத விஷயத்துக்கு சண்டை சச்சரவுன்னு டென்ஷனா இருக்கும். கவனமா வார்த்தையை பயன்படுத்துங்க. ஃப்ரண்ட்ஸுங்களோட ஆறுதல் வார்த்தைங்க உங்களுக்கு புது தெம்பை கொடுக்கும். ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு அற்புதமா இருக்கும். இன்னிக்கு சந்திரன் விரய ஸ்தானத்துல இருக்குறதுனால, பணவரத்தும் சுமாரா தான் இருக்கும். இருந்தாலும் சுப செலவுகள் வந்து கையை கடிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 8
சாதகமான நேரம் : விடிகாலை 4:50 முதல் நண்பகல் 12:05 மணிவரை

கன்னி
இன்னிக்கு ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு கூட வேலை பாக்குறவங்க கிட்ட இருந்துவந்த மனஸ்தாபம் குறைஞ்சிடும். குடும்பத்துலயும் சுபச் செலவுங்க உண்டாகும். வழக்கு வாய்தான்னு இருந்தா, அதுல இன்னிக்கு உங்களுக்கு வெற்றி கிடைச்சிடும். பேங்க் பேலன்ஸும் கூடிடும். மொத்தத்துல இன்னிக்கு உங்க திறமையை மத்தவங்களுக்கு தெரியப்படுத்துற நாளா அமைஞ்சிடும்.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : காலை 10:10 முதல் நண்பகல் 3:15 மணிவரை

துலாம்
இன்னிக்கு பிசினஸ்ல எதிர்பார்த்ததை விட சரக்கு வித்து தீந்து, லாபம் அமோகமா இருக்கும். ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு சீனியர் அதிகாரிங்களோட சப்போர்ட் கிடைச்சிடும். குடும்பத்துலயும் பிள்ளைங்க மூலமா இனிப்பான செய்திங்க உங்க காதுக்கு வந்து சேரும். பெரிய மனுஷங்களோட அறிமுகமும் கிடைச்சிடும். புதுசா வீட்டுக்கு தேவையான பொருளை வாங்கிடுவீங்க. வேலை தேடிட்டு இருக்குறவங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையுறதுக்கு வாய்ப்பிருக்கு.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 26
சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 8:00 மணிவரை

விருச்சிகம்
இன்னிக்கு பிசினஸை டெவலப் பண்றதுக்கு ஃப்ரண்ட்ஸுங்க கொடுத்த ஐடியா ஒர்க் அவுட் ஆகும். கூடப்பொறந்தவங்களால நல்லது நடக்குறதுக்கு சந்தர்ப்பம் இருக்கு. சொந்தக்காரங்க கிட்ட தேவையில்லாத பேச்சுவார்த்தையை வச்சிக்க வேணாம். அப்புறம் ரெண்டு பேத்துக்குள்ள மனஸ்தாபம் தான் வந்து சேரும், கவனமா இருக்க பாருங்க. உத்தியோகம் பாக்குறவங்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்துல பிரச்சனை வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. எச்சரிக்கையா இருக்க பாருங்க.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 20
சாதகமான நேரம் : முற்பகல் 11:30 முதல் இரவு 9:00 மணிவரை

தனுசு
இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் நடக்குறதுனால, எந்த வேலையை தொட்டாலும், இடைஞ்சல் தடங்கல், சிக்கல்னு ஏதாச்சும் வந்துடும். அதனால ஏதாவது புதுசா இண்வெஸ்ட் பண்ற ஐடியா இருந்தா அதை கொஞ்ச நாளைக்கு ஒத்தி போடுறது நல்லது. வீட்டுலயும் வீண் வாக்குவாதத்தை அவாய்ட் பண்ணிட்டு மவுன விரதம் இருந்தா உங்களுக்கும் நல்லது, வீட்டுல இருக்குற மத்தவங்களுக்கு நல்லது. இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன் கொஞ்சம் மக்கர் பண்றதுக்கு வாய்ப்பிருக்கு. எச்சரிக்கையா இருக்க பாருங்க.

மகரம்
மகர ராசிக்காரங்களே, உத்தியோகம் பாக்குறவங்களுக்கு இன்னிக்கு வேலைப்பளு கொஞ்சம் குறைஞ்சிடும். சாயந்திரத்துக்கு மேல சந்திராஷ்டமம் வர்றதுனால கொஞ்சம் எச்சரிக்கையா இருக்க பாருங்க. வீட்டுலயும் சந்தோஷமான சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருக்கு. கல்யாண பேச்சுவார்த்தையில நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். பிசினஸ் பண்றவங்களுக்கு பார்ட்னரோட ஒத்துழைப்புனால பிசினஸ்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 3
சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 11:05 மணிவரை

கும்பம்
இன்னிக்கு கூடப்பொறந்தவங்களால நல்ல விஷயங்கள் நடக்க வாய்ப்பிருக்கு. இதுவரைக்கும் இருந்து மனக்குழப்பம் மறைஞ்சி மனசுல நிம்மதி ஏற்பட்டுடும். பிள்ளைங்களுக்கு படிக்குறதுல ஆர்வம் கூடிடும். பிசினஸ் பண்றவங்க பார்ட்னரோன சப்போர்ட்னால புதுசா ஆர்டர் கிடைச்சிடும். சுபகாரிய பேச்சுவார்த்தையில உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 18
சாதகமான நேரம் : காலை 7:30 முதல் நண்பகல் 2:00 மணிவரை

மீனம்
ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு இன்னிக்கு எதிர்பாக்காத நேரத்துல வீண் பிரச்சனைங்க வந்து வாய்க்கலாம். எதுக்கும் கொஞ்சம் எச்சரிக்கையோட வேலையை பாருங்க. திடீர்னு வர்ற சொந்தக்காரங்களால அநாவசிய செலவுங்க வந்து கையை கடிச்சிடும். பிசினஸ்ல அப்பப்போ சின்ன சின்னதா மாற்றம் செஞ்சா எதிர்பாத்த லாபம் கிடைச்சிடும். கடவுளை கும்பிட்டு வாங்க, மனசுக்கு தெம்பாவும், ஆறதலாவும் இருக்கும். ஃப்ரண்ட்ஸுங்க சப்போர்ட்டும் உங்களுக்கு உண்டு.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 35
சாதகமான நேரம் : விடிகாலை 5:05 முதல் பிற்பகல் 3:40 மணிவரை



Click it and Unblock the Notifications