For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைக்கு இந்த ராசிக்காரங்க ரொம்ப கவனமாக இருங்க...

இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரங்களும் இன்றைக்கு ரொம்ப எதிர்பார்ப்போட இருப்பீங்க. நமக்கு பணம் வருமா? குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை வருமா? உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று யோசிக

|

இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரங்களும் இன்றைக்கு ரொம்ப எதிர்பார்ப்போட இருப்பீங்க. நமக்கு பணம் வருமா? குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை வருமா? உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று யோசிக்கிறீங்களா? உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் இன்றைய ராசி பலன் பதில் தருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்களுக்கு பணவரத்து அதிகமா இருக்கும். ஒரு நல்ல வேலைக்காக தவம் கிடந்தவங்களுக்கு வீட்டுல இருந்தே வேலை பாக்குறது மாதிரியான ஒரு நல்ல வேலை அமையலாம். கன்னிப் பெண்களுக்கு ஒரு நல்ல வரன் அமையக்கூடும். ஃபேமிலியில பெரியவங்களோட குட்புக்குல இடம்பிடிப்பீங்க. பிசினஸ் ரீதியா உங்களோட செல்வாக்கும் அந்தஸ்தும் கூடிடும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 5

சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 9:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

இன்னிக்கு நீங்க எதிர்பாத்திட்டு இருந்த பண வரத்து வந்துடும். அதனால வீட்டுக்கு தேவையான ஆடம்பரமான பொருள்களை வாங்குறதுல ரொம்பவே ஆர்வமா இருப்பீங்க. ஆனா, இப்ப இருக்குற சூழ்நிலையில அநாவசிய செலவுங்களை அவாய்ட் பண்றது நல்லது. பிசினஸ்ல இருந்த போட்டி பொறாமை குறையலாம். இருக்குற ஸ்டாக் வித்து தீந்துடும். வேலை பாக்குறவங்களா இருந்தா, உங்க கோரிக்கையை சீனியர் அதிகாரிங்க அனுசரனையா கேட்டு அதை முடிச்சி கொடுப்பாங்க. உங்களோட நடவடிக்கையை பாத்து எதிரிங்களே பயந்து ஓடிடுவாங்க.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 35

சாதகமான நேரம் : விடிகாலை 5:05 முதல் பிற்பகல் 3:40 மணிவரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரங்களே, வேலை பாக்குறவங்க ரொம்ப துணிச்சலான முடிவெடுக்க நினைப்வீங்க. இருந்தாலும் சீனியர் அதிகாரி சொல்றதை கேட்டு நடந்த எதிர்காலத்துக்கு நல்லது. இன்னிக்கு தேவையில்லா வீண் பிரச்சனைகள் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. குடும்பத்துல நடக்குற சின்ன சின்ன விஷயங்களை பாத்து உங்களுக்கு கோபம் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கிறது நல்லதுங்க. இன்னிக்கு பண வரத்து திருப்தியா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 18

சாதகமான நேரம் : காலை 7:30 முதல் நண்பகல் 2:00 மணிவரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க சொந்த பிரச்சனைங்க உங்களோட ஃப்ரண்ட்ஸுங்க ஹெல்ப்போட சால்வ் ஆகிடும். அதனால எந்த வேலையையும் ரொம்ப சுறுசுறுப்பா, தெம்போட செய்வீங்க. இருந்தாலும், ஒரு வேலையை செய்யுறதுக்கு முன்னாடி, அதை எப்படி செய்யுறதுன்னு மனசு அல்லாடும். கவனமா பாத்துக்குறது நல்லது. சொந்தக்காரங்க மத்தியில இருந்து வந்த பழைய பகை காணாம போயிடும்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்

அதிர்ஷ்ட எண் : 3

சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 11:05 மணிவரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரங்களே, நீங்க இன்னிக்கு எதிர்காலத்தை பத்தி யோசிச்சி ப்ளாண் பண்ணுவீங்க. சொத்து பத்து சம்பந்தமா முக்கியமான முடிவெடுக்கலாம். இருந்தாலும் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேணாம். பிசினஸ்ல இருந்த எதிர்ப்பு காணாம போயிடும்கிறதுனால, எதிர்பாத்த லாபம் கொட்டும். அதனால எல்லா பிரச்சனையும் காணாம போயிடும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 20

சாதகமான நேரம் : முற்பகல் 11:30 முதல் இரவு 9:00 மணிவரை

கன்னி

கன்னி

இன்னிக்கு உங்க குடும்பத்துல இருந்து வந்த பிரச்சனைங்க காணாம போயி சந்தோஷம் புகுந்துடும். சொந்தக்காரங்களோட ஒத்தாசையும் அன்பும் கிடைச்சிடும். சமூகத்துல முக்கியமான பெரிய மனுசங்களோட அறிமுகம் கிடைச்சிடும். அவங்களோட ஹெல்ஃப்பும் கிடைக்கும். இன்னிக்கு முக்கியமான ஒரு குறிக்கோளை மனசுல வைச்சிக்கிட்டு துணிச்சலா வேலையை பாப்பீங்க. அதுல சாதிச்சும் காட்டுவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 26

சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 8:00 மணிவரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்களுக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, வாயை கொடுத்து மாட்டிக்காம அமைதிய இருங்க. தேவையில்லாம வார்த்தையை விட்டுடாதீங்க. பிசினஸை டெவலப் பண்ற முயற்சிக்கு உரிய பலன் கிடைச்சிடும். அதோட கடன் பிரச்சனையும் குறையும். போட்டி பொறாமை விலகிடும். இன்னிக்கு நீங்க செய்யுற காரியங்களுக்கு யாராவது எதிர்பாக்காம வந்து ஹெல்ப் பண்ணுவாங்க.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண் : 15

சாதகமான நேரம் : காலை 10:10 முதல் நண்பகல் 3:15 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திரனும் சுக்கிரனும் சாதகமா பாக்குறதுனால, உங்களோட பொருளாதார நிலைமை கொஞ்சம் கூடிடும். குடும்பத்துல இருந்து வந்த பிரச்சனைங்க, காணாம போயிடும். பெண்டாட்டியோட அன்பு, அந்நியோன்யம் கூடிடும். பிள்ளைங்களால உங்களுக்கு நல்ல பெயர் கிடைச்சிடும். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு உழைப்புக்கு ஏத்த மாதிரி பலன் கிடைச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 8

சாதகமான நேரம் : விடிகாலை 4:50 முதல் நண்பகல் 12:05 மணிவரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரங்களே, இன்னிக்கு நீங்க உங்களோட சாமர்த்தியமான பேச்சால காரியத்தை சாதிச்சுக்குவீங்க. உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு ப்ரமோஷன் கிடைக்குறதுக்கு வாய்ப்பிருக்கு. கடன் பிரச்சனை கண்ட்ரோலா இருக்கும். கல்யாண பேச்சுவார்த்தையில நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். பிசினஸ் சம்பந்தமா வெட்டி அலைச்சல் ஏற்படலாம். இருந்தாலும் புது பிசினஸ் சம்பந்தமா அக்ரிமெண்ட்ல கையெழுத்து போட சந்தர்ப்பம் கிடைக்கும். அதோட சமூகத்துல இருக்குற பெரிய மனுஷங்களோட சப்போர்ட் கிடைக்கும். திடீர் பண வரத்து வர்றதுக்கு வாய்ப்பிருக்குது.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : மாலை 5:20 முதல் இரவு 9:30 மணிவரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு 5ஆவது வீட்டுல சந்திரன் இருக்குறதுனால, பண வரத்து சுமாராதான் இருக்கும். ஆனாலும் பிள்ளைங்க வழியில தண்டச் செலவுங்க வந்து கையை கிடைக்கும். மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்றதுனால சந்தோஷப்படுவீங்க. ரொம்ப நாளைக்கு முன்னாடி பிரிஞ்சி போனவங்களை இன்னிக்கு திடீர்னு மீட் பண்றதுக்கு வாய்ப்பிருக்கு. வீட்டுல கோபத்தை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிட்டு தன்மையா பேசுனா உங்களுக்கு வெற்றி தான்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 27

சாதகமான நேரம் : காலை 7:45 முதல் மாலை 4:30 மணிவரை

கும்பம்

கும்பம்

இன்னிக்கு உங்க வீட்டுல இருந்து வந்த சொத்துப் பிரச்சனை காணாம போயி வீட்டுல குழப்பம் தீர்ந்து நிம்மதி கிடைச்சிடும். அதனால சந்தோஷம் அதிகமாகும். அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் அக்கறை காட்டுறது நல்லதுங்க. சொந்தக்காரங்க ஒத்தாசையோட நீங்க எடுத்த காரியத்தை வெற்றிகரமா முடிப்பீங்க. பசங்களோட முயற்சிங்களுக்கு உரிய பலன் கிடைச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 10:00 மணிவரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க வாழ்க்கைக்கு தேவையான புது வசதிங்க கிடைச்சிடும். சொந்தக்காரங்க மூலமா ஒத்தாசை கிடைச்சிடும். புதுசா வீடு, மனை வாங்குறதுக்கும் ப்ளான் பண்ணுவீங்க. இருந்தாலும் இன்னிக்கு இருக்குற இக்கட்டான சூழ்நிலையில ரிஸ்க் எடுக்க வேணாம். இன்னிக்கு நீங்க எடுக்குற முயற்சி வெற்றிகரமா முடிஞ்சிடும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 1

சாதகமான நேரம் : காலை 9:20 முதல் மாலை 6:00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 30th March 2020 Monday In Tamil

Check out the daily horoscope for 30th march 2020 monday in tamil. Read on...
Story first published: Sunday, March 29, 2020, 22:26 [IST]
Desktop Bottom Promotion