Latest Updates
-
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க.. -
சௌ சௌ வாங்குனா இந்த செட்டிநாடு பொரிச்ச குழம்பு செய்யுங்க - சாதம், டிபன் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
ஜூன் 29-ல் நடக்கப்போகும் புதனின் வக்ர பெயர்ச்சியால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இந்த 4 குணம் உள்ள பெண் அவரது கணவரின் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுவாராம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கொள்ளு குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 16 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தேடிவருமாம் - ஜாக்கிரதை -
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் நடக்கப்போகும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ரொம்ப எச்சரிக்கையா இருங்க...
இன்று மார்ச் 25 ஆம் நாள். இன்றைக்கு யாருக்கு பணவரவு வரும் யாருக்கு செலவு அதிகமாகும் யாருக்கு கோபம் வரும் யாருடைய கனவு நனவாகும் என்று பல கேள்விகள் எழலாம்.
இன்று மார்ச் 25 ஆம் நாள். இன்றைக்கு யாருக்கு பணவரவு வரும் யாருக்கு செலவு அதிகமாகும் யாருக்கு கோபம் வரும் யாருடைய கனவு நனவாகும் என்று பல கேள்விகள் எழலாம். அதோடு இன்று சத்தான உணவுகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துங்கள் இது உங்களின் வெற்றிகரமான நாளாக அமையும். அனைத்து கேள்விகளுக்கு இன்றைய ராசி பலன்கள் மூலம் பதில் கிடைக்கும்.

மேஷம்
மேஷ ராசிக்காரங்களே, இன்னிக்கு சந்திரன் உங்க ராசிக்கு 12ஆம் வீட்டுல சூரியனோட சேர்ந்து இருக்கார். சொந்தக்காரங்க வீட்டுக்கு வர்றதுனால வீடே களை கட்டி இருக்கும், அதனால கை காசு விரையமும் ஆகும். கூடப் பொறந்தவங்க கிட்ட கொஞ்சம் கவனமா இருக்குறது நல்லது. பிசினஸ் பண்றவங்களுக்கு இப்போ சிரம திசை தான். எங்க பார்த்தாலும் கொரோனா வைரஸ் பீதி இருக்குறதுனால ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் கவனமா இருந்துக்குறது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரங்களே, இன்னிக்கு ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்க உங்க கூட ஒத்தாசையா இருந்து வேலை பார்ப்பாங்க. குடும்பத்துலயும் சந்தோஷமான சம்பவங்கள் நடக்குறதுக்கு வாய்ப்பிருக்குது. பசங்களும் ரொம்பவே கவனமா படிப்பாங்க. குடும்பத்துக்கு தேவையானதை வாங்குறுதுல ரொம்பவே ஆர்வமா இருப்பீங்க. நீங்க நெனைச்ச காரியம் நிறைவேறிடும்கிறது நிச்சயம்.

மிதுனம்
இதுவரைக்கும் நீங்க பாத்துக்கிட்டு இருந்த வேலையுல இருந்த சங்கடங்கள் காணாம போயி. வீட்டுல உக்காந்த இடத்துல இருந்தே வேலை பாக்க வேண்டிய சந்தர்ப்பம் வரும். இதுக்கு நீங்க கொரோனாவுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும். இருந்தாலும் இப்ப இருக்குற சூழ்நிலையில வீட்டை விட்டு வெளியில வந்துடாதீங்க. கெடைச்ச சந்தர்ப்பத்தை யூஸ் பண்ணிட்டு நல்லவிதமா ரெஸ்ட் எடுக்க பாருங்க. பிசினஸ்ல இருந்து வந்த கடன் சிக்கல் தீரும். வீட்டுல இருக்குறவங்களும் சொந்தக்காரங்களும் உங்களுக்கு ரொம்பவே பக்க பலமா இருப்பாங்க. அதுவே உங்களுக்கு ரொம்ப தெம்பா இருக்கும்.

கடகம்
எங்க பார்த்தாலும் கொரோனா பீதியினால பாத்துக்கிட்டு இருக்குற பிசினஸ் ரொம்பவே டல்லடிக்கும். அதனால தேவையில்லாம எதுலயும் இண்வெஸ்ட் பண்ணாதீங்க. அதனால பணவரத்தும் கொஞ்சம் கம்மியாவே இருக்கும். ஆனா, தண்டச்செலவும் கூடிடும். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்கள்ல பெரும்பாலும் வீட்டுல இருந்தே வேலை பாக்குறதுனால, ரொம்பவே உற்சாகமா ஃபீல் பண்ணுவீங்க. கொரோனா வைரஸ் உங்களை கொக்கி போட்டு இழுத்துடாம கவனமா இருந்துக்குறது நல்லது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரங்களுக்கு இன்னிக்கு சந்திராஷ்டமம்கிறதுனால, எந்த வேலையை தொட்டாலும் உருப்படாது. அதனால, ஆஃபீஸ் வேலை பாக்குறவங்க வேலையில மட்டும் கவனமா இருந்துக்குறது நல்லது. வீட்டுல இருந்து வேலை செஞ்சாலும் கூட வேலையில கண்ணும் கருத்துமா நடந்துக்குறது நல்லது. பிசினஸ்ல இருக்குறவங்க கொடுக்கல் வாங்கல்ல எச்சரிக்கையா நடந்துக்குறது நல்லது. வீட்டுல இருக்குறவங்க கூட கொஞ்சம் நாக்கை அடக்கி பேசுறது நல்லது.

கன்னி
கன்னி ராசிக்காரங்க இன்னிக்கு பிசினஸ் சம்பந்தமா லேட்டஸ்ட் மெஷின் வாங்குறதுக்கு ப்ளான் பண்ணுவீங்க. வீட்டுல மங்கள நிகழ்ச்சிங்க கைகூடுறதுக்கும் வாய்ப்பிருக்குது. வருமானமும் கூடிடும். சந்திரன் உங்க ராசிக்கு ஏழாவது வீட்டுல இருக்குறதுனால மனசுலு தெம்பா ஃபீல் பண்ணுவீங்க. இருந்தாலும் ஷேர்மார்க்கெட்டுல ஏதாச்சும் இன்வெஸ்ட் பண்றதா இருந்தா கொஞ்சம் சூதானமா இருக்குறது நல்லது. பெரிய மனுஷங்களோட சப்போர்ட் இருக்குறதுனால எதை தொட்டாலும் துலங்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரங்களே, இன்னிக்கு ஷேர்மார்க்கெட்ல இண்வெஸ்ட் பண்ணினதுல லாபம் கிடைக்கும். அதுனால உங்க பணவரத்தும் கூடிடும். சொந்தமா பிசினஸ் பண்றவங்களுக்கு கொஞ்சம் சிரம தசைதான். பசங்களால பெருமைப்படுவீங்க. புதுசா ஏதாச்சும் திங்க்ஸ் வாங்குறதுக்கும் வாய்ப்பிருக்கு. வேலை விஷயமா வெளியூர் போறதுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரங்க இன்னிக்கு எதுலயும் கொஞ்சம் பக்குவமா நிதானமா நடந்துக்குறது நல்லது. ஆஃபீஸ் வேலையை வீட்டுல இருந்து பாக்குறவங்க கடுப்படிக்காம கொஞ்சம் நிதானமா நடந்துக்கோங்க. பணவரத்து கம்மியா இருந்தாலும் செலவுங்க வந்து கையை கடிக்கும். கூடப்பொறந்தவங்க உங்ககிட்ட முறைச்சிக்கிட்டு போவாங்க, அதனால கொங்சம் பொறுமையா நடந்துக்கிறது நல்லது. எங்க பாத்தாலும் கொரோனா பீதி இருக்குறதுனால பசங்களை கொஞ்சம் கண்ணுக்குள்ளயே வச்சி பாத்துக்கிறது நல்லது.

தனுசு
இன்னிக்கு உங்க மனசுல தேவையில்லாத மனக்குழப்பமும் கவலையும் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. அதனால குடும்பத்துலயும் அநாவசிய குழப்பம் ஏற்படும்கிறதுனால கவனமா இருக்க பாருங்க. கொஞ்சம் சூதானமா நடந்துக்க பாருங்க. பிசினஸ் பண்றவங்க கொஞ்சம் எச்சரிக்கையோட இருந்தா நட்டம் ஏற்படாம அவாய்ட் பண்ணலாம். பூர்வீக சொத்துக்களால ஆதாயம் உண்டாகலாம். இன்னிக்கு வீட்டை விட்டு வெளியில வராம இருந்துக்கோங்க.

மகரம்
இன்னிக்கு உங்க குடும்பத்துல சந்தோஷம் பொங்கிடும். அதுனால எடுக்குற முயற்சிங்களும் ஜெயமா முடியும். எந்த வேலையையும் உற்சாகமா செய்வீங்க. சில பேருக்கு கவுரவ பதவி தேடி வர்றதுக்கும் வாய்ப்பிருக்குது. குடும்பத்துலயும் சந்தோஷம் பொங்கிடும். இது நாள் வரைக்கும் பகையாளியா இருந்தவங்க கூட இனிமே தோஸ்த்தா மாறிடுவாங்க. கொரோனா பீதி இருக்குறதுனால வீட்டை விட்டு வெளியில வராதீங்க.

கும்பம்
இன்னிக்கு நீங்க குடும்பத்தில் ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. ரொம்ப சந்தோஷமாக உற்சாகமாக இருப்பீங்க. திடீர் அதிர்ஷ்டமும் நல்ல செய்திகளும் தேடி வரும். தடைகளை தாண்டி வியாபாரத்தில் லாபம் வரும். இன்னைக்கு நீங்க ரெஸ்ட்ல இருப்பீங்க. ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் பாஸ் வீட்டை விட்டு வெளியேவே வராதீங்க.

மீனம்
இன்னைக்கு நீங்க ரொம்ப ஜாலியா இருப்பீங்க. உங்களுக்கு பணம் அதிகமாக வரும் நீங்க நினைச்ச இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வீட்டில் சொந்த பந்தங்களுடன் கூடி இருப்பீங்க. வியாபாரத்தில நல்ல முன்னேற்றம் ஏற்படும். நல்லா ரெஸ்ட் எடுங்க மக்களே, சத்தா சாப்பிடுங்க உங்க ஆரோக்கியம் சீராக இருக்கும். அமைதியாக வீட்டில ரெஸ்ட் எடுங்க.



Click it and Unblock the Notifications