Latest Updates
-
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு மனைவியால் பிரச்சினை வருமாம்... பார்த்து பக்குவமா நடந்துக்கோங்க...!
ஒவ்வொரு நாளும் நமக்கு வெற்றிகரமான நாளாக இருக்க வேண்டுமென்றுதான் நாம் அனைவருமே விரும்புவோம். ஆனால் அப்படி அமைகிறதா என்றால் நிச்சயம் இல்லை என்று நாம் அறிவோம்.
ஒவ்வொரு நாளும் நமக்கு வெற்றிகரமான நாளாக இருக்க வேண்டுமென்றுதான் நாம் அனைவருமே விரும்புவோம். ஆனால் அப்படி அமைகிறதா என்றால் நிச்சயம் இல்லை என்று நாம் அறிவோம். ஏனெனில் நம்முடைய பிறந்த ராசியின் கிரக நிலைகளை பொறுத்தே நமது வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த பதிவில் உங்களின் ராசிக்கு இன்றைய கிரக நிலைகள் உங்களுக்கு என்ன பலன்களை வைத்துள்ளது என்று பார்க்கலாம்.


மேஷம்
உங்கள் திருமண வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுபட விரும்பினால் உங்கள் மனைவி சொல்வதை கவனமாக கேட்க வேண்டும். அவர்கள் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று உங்களின் கடின உழைப்பிற்கு பலன்கள் கிடைக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அலுவலக வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். உங்கள் நிதி நிலைமை சாதாரணமாக இருக்கும், சிறிய செலவுகள் தேடிவர வாய்ப்புள்ளது. உடல்நலம் பற்றி பேசினால், இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 3:15 மணி வரை

ரிஷபம்
வேலையை பொறுத்தவரையில் இன்று ஏற்றத்தாழ்வுகள். நிறைந்திருக்கும். வேலையில் இருப்பவர்கள் இன்று சில சவால்களை சந்திப்பார்கள். உணவு தொடர்பான வியாபாரத்தில் இருப்பவர்கள் இன்று நல்ல இலாபத்தை பெறுவார்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகரித்து வருவதாக தெரிகிறது. நீங்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய சில குடும்ப பிரச்சினைகள் உள்ளன. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று ஒரு நல்ல நாளாக இருக்காது. மனரீதியாக, நீங்கள் அதிக அழுத்தத்தை உணருவீர்கள், இது உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:20 முதல் மாலை 4:30 மணி வரை

மிதுனம்
பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு நல்லதாக இருக்கும். உங்களின் முதலீடு, இன்று நல்ல லாபத்தைப் பெற்றுத்தரும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று உங்களுக்கு இனிமையான முடிவுகள் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பு பலனளிக்கும், மேலும் நீங்கள் உங்கள் இலக்கை நோக்கி வேகமாகச் செல்வீர்கள். இன்று உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சிறிது பதற்றம் இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களிடம் ஈகோ பார்ப்பதை தவிர்க்கவும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் எந்தவொரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள உங்கள் துணைக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 34
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:50 முதல் மதியம் 2:25 மணி வரை

கடகம்
இன்று நீங்கள் உங்கள் தொழில் தொடர்பான ஒரு முக்கியமான முடிவை எடுக்க முடியும். உங்கள் வெற்றியும் தோல்வியும் இந்த முடிவைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் மிகவும் கவனமாக இருங்கள். வேலையில் இருப்பவர்களுக்கு இன்று பணிச்சுமை அதிகமிருக்கும். வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். இன்று குடும்பத்துடன் ஒரு ஆனந்தமான நாளாக இருக்கும். உங்கள் காதலியுடனான உங்கள் நெருக்கம் அதிகரிக்கும். பணத்தைப் பற்றி பேசினால், இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 முதல் 6:40 மணி வரை

சிம்மம்
இன்று ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். உங்கள் மனநிலை மிகவும் நன்றாக இருக்கும், மேலும் நீங்கள் நேர்மறையாக உணர்வீர்கள். இன்று தொழில் ரீதியாக மருத்துவ பயிற்சியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வருமானத்தில் பெரிய உயர்வு இருக்கலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். இன்று நீங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்களுடனான தற்போதைய பதற்றம் முடிவடையும். உங்கள் உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 முதல் 10:00 வரை

கன்னி
இன்று உங்கள் அலுவலகப்பணிகள் விரைவில் முடிக்க முடியாமல் போகும். உங்கள் நாக்கை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது, இல்லையெனில் உங்கள் வார்த்தைகள் பெரிய சிக்கலில் மாட்ட வைக்கும். வணிகர்கள் இன்று எதிர்பார்த்தபடி முடிவுகளைப் பெற மாட்டார்கள். எந்தவொரு புதிய வேலையையும் தொடங்க இன்று உங்களுக்கு நல்ல நாள் அல்ல. உங்கள் வீட்டின் நீண்ட கால பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். பணத்தைப் பற்றி பேசினால், இன்று செலவுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் மாலை 3:00 மணி வரை

துலாம்
அரசுத்துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு இன்று சில நல்ல செய்திகள் தேடிவரும். வியாபாரத்தில் இருப்பவர்களின் மனஅழுத்தம் இன்று அதிகமாக இருக்கும். குறிப்பாக நீங்கள் கூட்டாக வியாபாரம் செய்தால் சில மோசமான சூழ்நிலைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். உங்கள் மனைவியுடனான உறவை மேம்படுத்த முயற்சிப்பது இன்று சில நல்ல முடிவுகளைத் தரும். உணவு விஷயங்களில் இன்று கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பிங்க்
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 4:30 மணி வரை

விருச்சிகம்
வேலையைப் பற்றி பேசுகையில், இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் பிஸியாக இருக்கும். பணிச்சுமை உங்களை பாடாய்படுத்தும், அதற்காக எந்த வேலையையும் பாதியில் விட்டுவிடாதீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியான முடிவுகளைப் பெறலாம். குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் வரலாம். உங்கள் மனைவியுடனான உறவில் இன்று இனிமை இருக்கும். உடல்நலம் பற்றிப் பேசும்போது, உங்களை நீங்களே அதிகம் கவனித்துக் கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:20 மணி முதல் 12:20 மணி வரை

தனுசு
இன்று மிகவும் சோதனைகள் நிறைந்த நாளாக இருக்கும், தேவையில்லாமல் கோபப்படுவதை தவிர்க்கவும் இல்லையெனில் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். தேவையற்ற பேச்சிலிருந்து விலகி இருங்கள். பொருளாதார முன்னணியில் இன்று உங்களுக்கு நல்லதாக இருக்காது. வீட்டு உறுப்பினர் ஒருவரின் ஆரோக்கியம் குறைந்து வருவதால் நீங்கள் மிகவும் கவலைப்படுவீர்கள், அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது, உடனடியாக மருத்துவரை அணுகவும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:00 முதல் 5:20 மணி வரை

மகரம்
இன்று வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும், மாற்று வேலை தேடுபவர்களுக்கு இன்று நல்ல நிறுவனத்திடம் இருந்து அழைப்புகள் வரலாம். வணிகர்களுக்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவிகள் கிடைக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். இன்று உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உடல்நலம் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் வலுவாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் மாலை 3:00 மணி வரை

கும்பம்
உங்கள் மன அமைதியை நீங்கள் பராமரிக்க விரும்பினால், தேவையற்ற பேச்சிலிருந்து விலகி இருங்கள். இந்த நேரத்தில் உங்கள் வேலையில் உங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். வணிகர்களுக்கு நாட்கள் கலக்கம் நிறைந்ததாக இருக்கும். உங்கள் மனைவியின் பேச்சால் வீட்டின் சூழல் மோசமடையக்கூடும். உடல்நலம் பற்றி பேசுகையில், இன்று வயிற்று எரிச்சல் அல்லது மலச்சிக்கல் பற்றிய புகார் இருக்கலாம். வறுத்த அல்லது காரமான உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:30 முதல் 10:00 வரை

மீனம்
உங்கள் திருமண வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். இன்று உங்கள் மனைவியுடன் அதிக நேரம் செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், மேலும் உங்கள் இனிமையான நினைவுகளை மீண்டும் புதுப்பிப்பீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துங்கள். மூத்தவர்களின் பேச்சை பின்பற்றுவது நன்மை பயக்கும். மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:00 மணி முதல் 12:25 மணி வரை



Click it and Unblock the Notifications