Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
இன்றைய யோகக்கார ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?...இத படிங்க... தெரிஞ்சிக்கங்க...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
Recommended Video
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. அதிலும் சிலர் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பார்கள்.

மேஷம்
இளைய உடன்பிறப்புகளால் நன்மை உண்டாகும். வீட்டு விவாகரங்களில் இதுவரை இருந்த சிக்கல்கள் தீரும்.எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடைய ஆதரவு கிட்டும்.
அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண் - 6
அதிர்ஷ்ட நிறம் - பச்சை

ரிஷபம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு பெருகும். புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான சூழல் அமையும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். தந்தையின் உடல் நலத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட திசை - வடக்கு
அதிர்ஷ்ட எண் - 9
அதிர்ஷ்ட நிறம் - பிங்க்

மிதுனம்
பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பொறுமையை கடைபிடிப்பது வீண் சண்டைகளைத் தவிர்க்கும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது கவனம் தேவை. பக்கத்து வீட்டாரிடம் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை - தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் - 3
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு நிறம்

கடகம்
பெரியவர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். சொத்துக்கள் சம்பந்தமான விஷயங்களில் கவனம் தேவை. வழக்குகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்க காலதாமதமாகும். பயணங்களின் போது கொண்டு செல்லும் பொருள்கள் மீது கவனமாக இருங்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.
அதிர்ஷ்ட திசை - மேற்கு
அதிர்ஷ்ட எண் - 8
அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை

சிம்மம்
பொருளாதாரம் மேன்மையடையும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். தொழிலில் ஆதரவுகள் பெருகும். திறமைகள் வெளிப்படும்.
அதிர்ஷ்ட திசை - தெற்கு
அதிர்ஷ்ட எண் - 7
அதிர்ஷ்ட நிறம் - கருநீல நிறம்

கன்னி
புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.சக ஊழியர்களின் ஆதரவால் பணியை விரைவில் முடிப்பீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பங்குச்சந்தை வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். காது சம்பந்தப்பட்ட பிரச்னை குறையும்.
அதிர்ஷ்ட திசை - வடக்கு
அதிர்ஷ்ட எண் - 5
அதிர்ஷ்ட நிறம் - காவி நிறம்

துலாம்
திருமணப் பேச்சுவார்த்தைகளில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் சற்று கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். மனைவி வழி உறவினர்களால் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண் - 3
அதிர்ஷ்ட நிறம் - மயில் நீலம்

விருச்சிகம்
உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் தோன்றும் குழப்பமான எண்ணங்களால் தெளிவான முடிவெடுக்க காலதாமதமாகும். கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு பிரச்னைகள் தோன்றி மறையும். நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை - வடக்கு
அதிர்ஷ்ட எண் - 9
அதிர்ஷ்ட நிறம் - பச்சை

தனுசு
செயல்களில் இருநு்த தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். எதிர்பாராத பழைய பாக்கிகள் வசூலாகும். தொழிலுக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கும். போட்டியில் வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - மேற்கு
அதிர்ஷ்ட எண் - 8
அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை

மகரம்
எண்ணிய பணியில் இழுபறியான சூழ்நிலை அமையும். மூத்த உடன்பிறப்புகளால் சுப செய்திகள் உண்டாகும். பணியில் எதிர்பாலின மக்களிடம் சற்று கவனம் தேவை. மற்றவர்களின் பணிகளைக் கூடுதலாக செய்ய நேரிடும். கடன் தொல்லைகள் குறைந்து மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - மேற்கு
அதிர்ஷ்ட எண் - 1
அதிர்ஷ்ட நிறம் - சாம்பல் நிறம்

கும்பம்
மனதில் இருந்த கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி பெறுவீர்கள். குடும்பத்தில் புதுிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த காரியம் நடக்கும்.
அதிர்ஷ்ட திசை - தெற்கு
அதிர்ஷ்ட எண் - 4
அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை

மீனம்
தந்தையின் ஆதரவால் தொழிலில் மேன்மை உண்டாகும். பணியில் நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். தூரத்து உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தேவையான வசதி, வாய்ப்புகள் பெருகும்.
அதிர்ஷ்ட திசை - மேற்கு
அதிர்ஷ்ட எண் - 2
அதிர்ஷ்ட நிறம் - இளம் மஞ்சள்



Click it and Unblock the Notifications
