Latest Updates
-
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சந்திரனால் இந்த 4 ராசிக்காரர்களுக்கும் சந்தோஷம் வீட்டிற்குள் குடியேறப் போகிறது...
சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த திங்கட்கிழமை இன்றைய தினம் சந்திரனாலும் சந்திராஷ்டமத்தாலும் சிலருக்கு பிரச்சினைகள் வந்தாலும் சிலர் சந்தோஷத்தை அனுபவிக்கப் போகிறார்கள்.
சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த திங்கட்கிழமை இன்றைய தினம் சந்திரனாலும் சந்திராஷ்டமத்தாலும் சிலருக்கு பிரச்சினைகள் வந்தாலும் சிலர் சந்தோஷத்தை அனுபவிக்கப் போகிறார்கள். சிலருக்கு பணவரவு வரும் சிலருக்கு திடீர் செலவுகள் வரலாம். இன்றைக்கு யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது என்று யோசிக்கிறீர்களா? உங்களின் எல்லா கேள்விகளுக்கும் ராசி பலன் மூலம் விடை கிடைக்கும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசி நேயர்களே, இன்னிக்கு எதிர்பாத்த உதவிகள் கிடைக்குறதுல தாமதம் உண்டாகலாம். பிள்ளைங்களால தண்டச் செலவுங்க வர வாய்ப்பிருக்கு. கவனமா இருங்க. இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன்லயும் கொஞ்சம் பிரச்சனை வரலாம் கடவுளை மனசுல நெனைச்சி கும்பிடுங்க. எல்லாம் சரியாகி மனசு உற்சாகமாகிடும்.
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : பிற்பகல் 1:00 முதல் மாலை 5:00 மணிவரை

ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்கறதுனால, பிசினஸ் சம்பந்தமா புது முயற்சி எடுக்குற ஐடியாவை கொஞ்ச நாளைக்கு தள்ளிப்போடுறது நல்லது. எதுலயும் கொஞ்சம் நிதானமா இருக்குறது நல்லது. அதே மாதிரி பெரிய அளவுல இண்வெஸ்ட்மெண்ட்டும் பண்ணாதீங்க. உத்தியோகத்துல கொஞ்சம் எச்சரிக்கையோட வேலை செஞ்சா வீண் பிரச்சனை வராம அவாய்ட் பண்ணிடலாம்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : மாலை 4:15 முதல் இரவு 10:20 மணிவரை

மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, இன்னிக்கு பிள்ளைங்களோட படிப்புல நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தோட தேவைகளும் நிறைவேறும். பேங்க் பேலன்ஸும் கூடும். எதிர்பாக்காத அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரலாம். இன்னிக்கு நீங்க எடுக்குற புது முயற்சிகள் எல்லாமே வெற்றியை கொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 5
சாதகமான நேரம் : நண்பகல் 12:45 முதல் மாலை 5:20 மணிவரை

கடகம்
கடக ராசி நேயர்களே, இன்னிக்கு பண வரத்து இருக்கும். கடன் பிரச்சனையும் தீரும். கூடப்பொறந்தவங்க உங்களுக்கு பக்க பலமா இருப்பாங்க. முக்கியமான வி.ஐ.பி.க்களோட அறிமுகம் இன்னிக்கு கிடைக்கும். உத்தியோகத்துல சீனியர் அதிகாரியோட பாராட்டுக்கள் உங்களுக்கு கிடைக்கும். பிசினஸ் இம்ப்ரூவ்மெண்ட்டுக்கு நீங்க எடுக்குற முயற்சி வெற்றியை கொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : நண்பகல் 1:05 முதல் மாலை 5:00 மணிவரை

சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல சில பேருக்கு வேண்டாத இடமாற்றம் கிடைக்கலாம். வெளியூர் பிரயாணத்துனால அலைச்சல் அதிகம் இருந்தாலும், அதுனால நல்லதும் நடந்துடும். அதோடு வீட்டுத் தேவைகளும் இன்னிக்கு பூர்த்தியாகும். கடனும் குறையும். பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது. இன்னிக்கு பிள்ளைங்களால மனசுக்கு நிம்மதி இல்லாம போயிடும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 28
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை

கன்னி
கன்னி ராசி நேயர்களே, இன்னிக்கு குடும்பத்துல சுப காரிய செலவுகள் ஏற்படலாம். உத்தியோகம் தேடுறவங்களுக்கு புது உத்தியோக வாய்ப்பு தேடி வந்து சந்தோஷம் கொடுக்கும். நினைச்சது நிறைவேறி மனசுக்கு புது தெம்பு கிடைக்கும். ஃப்ரண்ட்ஸுங்க மூலமாவும் நல்ல தகவல் உங்களுக்கு கிடைக்கும். பிசினஸ்ல பலத்த போட்டி இருந்தாலும் இறுதி வெற்றி உங்களுக்கு தான்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 23
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

துலாம்
துலா ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல கூட்டாளியோட ஒத்துமையோட இருந்தா, கொழுத்த லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கு. கல்யாணம், சுபகாரிய முயற்சியில உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். சொந்தக்காரங்க மூலமா எதிர்பாத்த உதவி, ஒத்தாசை கிடைக்கும். வீட்டுலயும் மகிழ்ச்சியான சூழ்நிலை தவழும். இன்னிக்கு பண வரத்தும் சிறப்பா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : நண்பகல் 1:25 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல சின்னச் சின்னதா மாறுதல் செய்யுறதுனால, நல்ல லாபம் கிடைக்கும். முக்கிய வி.ஐ.பி.க்களோட சப்போர்ட் கிடைக்கும். உங்க புது முயற்சிங்களுக்கு ஃப்ரண்ட்ஸுங்களோட சப்போர்ட் கிடைக்கும். சொந்தக்காரங்க கிட்ட கொஞ்சம் விட்டுக்கொடுத்து அனுசரிச்சி போனா பிரச்சனை வராம அவாய்ட் தப்பிக்கலாம். இன்னிக்கு பண வரத்தும் அமோகமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
அதிர்ஷ்ட எண் : 18
சாதகமான நேரம் : மாலை 5:20 முதல் இரவு 8:20 மணிவரை

தனுசு
தனுசு ராசி நேயர்களே, இன்னிக்கு ஃப்ரண்ட்ஸுங்க மூலமா உங்க பணப் பிரச்சனை முடிவுக்கு வரலாம். உத்தியோகம் சம்பந்தமான வெளியூர் பிரயாணத்துனால தேவையில்லாத அலைச்சலும் டென்ஷனும் கூடிடும். கணவன் மனைவிக்குள்ளாற மனஸ்தாபம் உண்டாகலாம். குடும்பத்துலயும் மருந்து மாத்திரைன்கு செலவழிக்க நேரலாம். கவனமா இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை

மகரம்
மகர ராசி நேயர்களே, இன்னிக்கு வீட்டுல இருக்குறவங்களோட கொஞ்சம் அனுசரிச்சி விட்டுக்கொடுத்து போறது நல்லது. இல்லேன்னா தேவையில்லாம பிரச்சனை பெரிசா வெடிக்கும். கவனமா இருங்க. பிசினஸ்ல கொடுக்கல் வாங்கல் பரிமாற்றம் ஒரளவு திருப்திகரமா இருக்கும். இன்னிக்கு பண வரத்து சிறப்பா இருந்தாலும் அதுக்கேத்த மாதிரி செலவுகளும் வரிசையா வந்து தொல்லை கொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 17
சாதகமான நேரம் : காலை 7:15 முதல் பிற்பகல் 2:05 மணிவரை

கும்பம்
கும்ப ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல இருந்து மனஸ்தாபம் மறைஞ்சி, வியாபாரம் பெருகும். புது பொருட்களை வாங்குறதுல ஆர்வம் உண்டாகும். பிள்ளைங்களுக்காக வெளியூர் பிரயாணம் பண்றதா இருந்தாலும், இந்த சமயத்துல தேவையான முன்னெச்சரிக்கையோட நடந்துக்குறது அவசியம். இன்னிக்க மனசுக்கு சந்தோஷம் கொடுக்குற சம்பவங்கள் நடந்துடும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 26
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை

மீனம்
மீன ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல இருந்து வந்த போட்டி பொறாமைகள் ஓடி ஒளியும். பூர்வீக சொத்து பத்துனால உங்களுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்துல சிலருக்கு எதிர்பாக்காம ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கலாம். வேலை செய்யுற இடத்துல கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையோட நடந்துக்கோங்க. கூடப்பொறந்தவங்க உங்களுக்கு பக்க பலமா இருப்பாங்க.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் பிற்பகல் 3:45 மணிவரை



Click it and Unblock the Notifications