Latest Updates
-
காரசாரமான.. ஆட்டுக்கறி தொக்கு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 03 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமும், புகழும் தேடிவருமாம் -
வார ராசிபலன் (03 May 2026-09 May 2026)- இந்த வாரம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
பிஜ்னோர் சம்பவம்: லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கவனத்திற்கு! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? -
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்!
இந்தியாவுக்கு முன்னாடியே பணமதிப்பிழப்பு செய்த நாடுகளும் அதனால் அங்கு நடந்த பேரழிவுகளும் தெரியுமா?
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை இந்தியாதான் முதலில் செய்ததா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். இதற்கு முன்னரே பல நாடுகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகயை மேற்கொண்டுள்ளன.
இந்தியா கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. சிறுதொழில் தொடங்கி மிகப்பெரிய நிறுவனங்கள் வரை கடுமையான பொருளாதார சிக்கலில் உள்ளது. இது அனைத்திற்கும் ஆரம்ப புள்ளியாக அமைந்தது பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான். சரியான திட்டமிடலும், முன்னேற்பாடும் இல்லாமல் செயல்படுத்தப்பட்டதால் நோக்கம் சரியாக இருந்தும் இந்த திட்டம் மாபெரும் தோல்வியை தழுவியது.

இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை இந்தியாதான் முதலில் செய்ததா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். இதற்கு முன்னரே பல நாடுகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகயை மேற்கொண்டுள்ளன. இந்தியாவே பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை சிறிய அளவில் செய்தது. இந்த பதிவில் எந்தெந்த நாடுகள் இந்தியாவிற்கு முன்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை செய்தது என்று பார்க்கலாம்.

நைஜீரியா
1984 இல் முஹம்மடு புஹாரி அரசாங்கத்தின் போது, நைஜீரியா புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தியது மற்றும் பழைய நோட்டுகளை தடை செய்தது. இருப்பினும், கடனில் மூழ்கிய மற்றும் பணவீக்க பாதிப்புக்குள்ளான நாடு இந்த மாற்றத்தை சரியாக எடுத்துக் கொள்ளவில்லை, பொருளாதாரம் மேலும் சரிந்தது. நைஜீரியாவின் இன்றைய நிலைக்கு இந்த நடவடிக்கையும் ஒரு காரணமாகும்.

கானா
1982 ஆம் ஆண்டில், இந்த நாடு அவர்களின் 50 செடிஸ் பணத்தை கைவிட்டது. வரி ஏய்ப்பை சமாளிக்கவும், அதிகப்படியான பணப்புழக்கத்தை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த திடீர் நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவளிக்கவில்லை, எனவே மக்கள் பணத்தை சொத்துக்களில் முதலீடு செய்யத்தொடங்கினர். இது வெளிப்படையாக பொருளாதாரத்தை பலவீனப்படுத்தியது.

பாகிஸ்தான்
பாகிஸ்தான் பழைய நோட்டுகளை தடைசெய்து, புதிய வடிவமைப்புகளை பணத்தில் கொண்டு வருவதாக 2016 ஆம் ஆண்டு அறிவித்தது. அரசாங்கம் இந்த நடவடிக்கையை ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் எடுத்தது, குடிமக்கள் தங்கள் பணத்தை பரிமாறிக் கொள்ள நேரம் கிடைத்தது. இதனால் அவர்களின் பொருளாதாரம் நிலைகுலையாமல் இருந்தது.

ஜிம்பாவே
ஜிம்பாப்வே 100,000,000,000,000,000 டாலர் நோட்டை வைத்திருந்தது உங்களுக்குத் தெரியுமா? அதாவது கிட்டதட்ட பத்தாயிரம் கோடியை ஒரே நோட்டாக வைத்திருந்தது. பணமதிப்பிழப்பிற்கு பிறகு இதன் மதிப்பு 0.5 டாலராக மாறியது. பணமதிப்பிழப்பு இந்த நாட்டின் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்றியது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு சாலைகளில் பணத்தை குவித்து வைத்து மக்கள் எடைக்கு போடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

வடகொரியா
2010 இல் வட கொரியாவில் நடந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் இல்லாமல் தவிக்கும் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது. கருப்பு பணத்தை விரட்டும் பொருட்டு பழைய நாணயத்தின் மதிப்பிலிருந்து இரண்டு பூஜ்ஜியங்களை இது விரட்டியது, கிம்-ஜாங் இந்த சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார்.

சோவியத் யூனியன்
கறுப்புச் சந்தையை கையகப்படுத்துவதற்காக புழக்கத்தில் இருந்து பெரிய ரூபிள் பில்களை வாபஸ் பெற மைக்கேல் கோர்பச்சேவ் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கைக்கு குடிமக்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை, இதன் விளைவாக ஆட்சி கவிழ்ப்பு முயற்சி ஏற்பட்டது, இது அவரது அதிகாரத்தை வீழ்த்தியது மற்றும் சோவியத் யூனியன் முறிவுக்கு வழிவகுத்தது.

ஆஸ்திரேலியா
கள்ளநோட்டு புழக்கத்தைத் தடுக்க முதன் முதலில் பாலிமர்(பிளாஸ்டிக்) நோட்டுகளை வெளியிட்ட முதல் நாடு ஆஸ்திரேலியாதான். காகிதத்தை பிளாஸ்டிக்கால் மாற்றுவதும், பணம் செய்யும் பொருள் மட்டுமே மாற்றப்படுவதும் இதன் நோக்கம் என்பதால், இது பொருளாதாரத்தில் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை.

மியான்மர்
1987 ஆம் ஆண்டில் மியான்மரின் இராணுவம் 80% பணத்தை செல்லாது என்று அறிவித்தது. கறுப்பு பணத்தைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, இந்த முடிவு பொருளாதார சீர்குலைவுக்கு வழிவகுத்தது, மேலும் இதனை எதிர்த்து வெகுஜன மக்களால் நடத்தப்பட்ட போராட்டங்களில் பல மக்கள் கொல்லப்பட்டனர்.



Click it and Unblock the Notifications