For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் காத்திருந்து பழிவாங்குகிறதா? - அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்!

கொரோனா வைரஸ் கிருமி புதிதாக உருவானது அல்ல என்றும், சார்ஸ் வைரஸ் கிருமி தான் மரபணு மாற்றமாகி கொரோனா என்னும் புத்தம் புதிய ரிலீசாக வந்துள்ளது என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கழைக்கழகத்தின்

|

உலகம் முழுவதும் ஆறு லட்சம் பேரை தொற்றி 30 ஆயிரம் பேரின் உயிரை குடித்துள்ள கொரோனா வைரஸ் கிருமி தற்போது புதிதாக உருவானது அல்ல என்றும் சார்ஸ் வைரஸ் கிருமி தான் மரபணு மாற்றமாகி கொரோனா என்னும் புத்தம் புதிய ரிலீசாக வந்துள்ளது என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கழைக்கழகத்தின் (Johns Hopkins University) வைரஸ் ஆராய்ச்சி துறையின் சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளது.

Coronavirus Was First Developed In 2003 In China - Report

கொரோனா என்றால் லத்தீன் மொழியில் கிரீடம் என பொருள். கோவிட் -19 கிருமியின் படத்தை புனேவில் உள்ள விஞ்ஞானிகளால், டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரான் நுண்ணோக்கி இமேஜிங்கைப் பயன்படுத்தி எடுத்துள்ளனர். அதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிட்டுள்ளனர்.

MOST READ: கொரோனா வைரஸிற்கு முடிவு கட்ட ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் கூறுவது என்ன தெரியுமா?

கொரோனா வைரஸ் கிருமி முதன் முதலில் சீனாவில் கடந்த 2003ஆம் ஆண்டு வாக்கிலேயே உருவானது என்றும், அதுவும் சீன மக்களின் உணவுப் பழக்கத்தினால் தான் இந்த வைரஸ் கிருமி உருவானது என்றும், இது பற்றிய எச்சரிக்கையை கடந்த 2007ஆம் ஆண்டிலேயே எச்சரித்துள்ளனர் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளன. அதுவும் சுமார் 17 ஆண்டுகள் வரை மெல்ல மெல்ல மரபணு மாற்றமடைந்து வந்து தக்க சமயத்தில் தன்னுடைய வேலையை காட்டத் தொடங்கிவிட்டது என்றும் விஞ்ஞானிகள் அபாய எச்சரிக்கை எழுப்பியுள்ளனர்.

MOST READ: இந்த பழக்கத்தை உடனே கைவிடுங்க.. இல்ல கொரோனா உங்களே தேடி சீக்கிரம் வரும்...

இன்றைய தேதியில் அனைத்து மக்களிடமும், செய்தி ஊடகங்களிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது கொரோனா வைரஸ் தொற்று தான். தன்னுடைய ஆக்டோபஸ் கரங்களைக்கொண்டு உலகின் 90 சதவிகித நாடுகளை பிடித்து அனைத்து மக்களையும் பீதியிலும் பயத்திலும் உறைய வைத்துள்ளது இந்த வைரஸ் கிருமி. இதுவரையிலும் சுமார் இருபத்தி நான்காயிரம் பேர்களை பலி வாங்கியதோடு, சுமார் ஐந்தரை லட்சம் பேர்கள் வரை இந்நோய் தொற்றுக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர்.

MOST READ: மக்களே உஷார்! கொரோனாவின் அறிகுறி வெறும் காய்ச்சல், சளி மட்டுமல்ல... இதுவும் கொரோனாவோட அறிகுறி தானாம்...

இந்தியாவில் இதுவரையில், 20க்கும் மேற்பட்டோரை பலி வாங்கியதோடு, ஆயிரக்கணக்கானோர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பற்றி பல வதந்திகள் உலா வந்தன. முதலில் இது அமெரிக்க சதி, சீனாவை முடக்க செய்யப்பட்ட பயோவார் என்று குற்றம் சாட்டியது சீனா. அதே நேரம் கண்டதையும் தின்றதால்தான் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது என்று சீனாவை குற்றம் சாட்டியது அமெரிக்கா. இது ஏலீயன்கள் நம்மீது ஏவி விட்ட தாக்குதல் என்றும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus Was First Developed In 2003 In China - Report

It has now been reported that the Coronavirus first emerged in China and was first developed in 2003, and warned in 2007 that the virus was caused by the eating habits of the Chinese people.
Desktop Bottom Promotion