For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த சாதாரண செயல்களால்தான் நம்முடைய ஆயுள் குறைவதாக சாணக்கியர் கூறுகிறார்...!

புராணங்களின் படி பொதுவாக பூமியில் பிறக்கும் அனைவருக்குமே பிறக்கும்பொழுது ஒரே அளவு ஆயுள்தான் இருக்கும், ஆனால் காலப்போக்கில் அவர்கள் செய்யும் தவறுகளை பொறுத்தும், அவர்களின் கர்ம பலன்களை பொறுத்தும் ஆயுள்

|

மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பவர்களே உண்மையில் பூமியில் பணக்காரர்களாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். புராணங்களின் படி பொதுவாக பூமியில் பிறக்கும் அனைவருக்குமே பிறக்கும்பொழுது ஒரே அளவு ஆயுள்தான் இருக்கும், ஆனால் காலப்போக்கில் அவர்கள் செய்யும் தவறுகளை பொறுத்தும், அவர்களின் கர்ம பலன்களை பொறுத்தும் ஆயுள் குறைகிறது.

committing these mistakes will reduce your lifespan

புராணங்களில் நாம் செய்யும் சில சாதாரண செயல்கள் கூட பாவச்செயலாக கருதப்படுகிறது. சாணக்கிய நீதியின் படி ஒவ்வொரு செயலுக்கும் நம்முடைய ஆயுள் குறிப்பிட்ட அளவில் குறையும். இந்த பதிவில் உங்களின் எந்தெந்த செயல்கள் உங்கள் ஆயுள் குறைய காரணமாக இருக்கிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அசைவ உணவு

அசைவ உணவு

சாணக்கியரின் கூற்றுப்படி அசைவ உணவை உட்கொள்வது உங்களின் ஆயுளை குறைக்கும் அடிப்படை செயலாக இருக்கிறது. ஏனென்றால் இறைச்சிக்காக ஒரு விலங்கைக் கொல்வது மிகக்கொடிய பாவமாக கருதப்படுகிறது.

தயிர்

தயிர்

பொதுவாக தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவது உங்களின் ஆயுளை குறைக்கும் செயல் என வேதங்கள் கூறுகிறது. இது உங்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

சூரிய உதயத்திற்குப் பிறகு தூங்குவது

சூரிய உதயத்திற்குப் பிறகு தூங்குவது

சூரிய உதயத்தை கடந்த தூக்கத்தில் இருப்பவர்களுக்கு நிறைய உடல் நோய்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது, இதனால் அவர்களின் ஆயுள் குறைய வாய்ப்புள்ளது.

MOST READ: இந்த விரல் சின்னதாக இருக்கும் பெண்கள் உண்மையிலேயே சிங்கப் பெண்களாக இருப்பாங்களாம் தெரியுமா?

பாலியல் ஆசை

பாலியல் ஆசை

சாணக்யாவின் கூற்றுப்படி, பாலியல்ரீதியாக சுறுசுறுப்பாக இல்லாத ஆண்களுக்கு ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கை மற்றும் உறவைக் கொண்டிருக்கும் ஆண்களைக் காட்டிலும் குறைவான ஆயுட்காலமே இருக்கும்.

மாலை நேரத்தில் தூங்குவது

மாலை நேரத்தில் தூங்குவது

மாலையில் தூங்குவதும் உங்கள் ஆயுட்காலத்தை கணிசமான அளவிற்குக் குறைக்கிறது. இது வாஸ்துவுக்கு நல்லது அல்ல என்று கருதப்படுகிறது. மேலும் இது உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை கொண்டுவரும் என்று கூறப்படுகிறது.

இறுதி ஊர்வலம்

இறுதி ஊர்வலம்

நீங்கள் ஒரு இறுதி ஊர்வலத்திற்குச் சென்றால், விரைவில் வீட்டிற்கு வர முயற்சிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. தகனத்தின் போது ஏற்படும் காற்று மாசுபாடு உங்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சுடுகாட்டிற்கு அருகில் ஒருபோதும் வீட்டைக் கட்டவோ, வாங்கவோ கூடாது.

MOST READ: இந்த சாதாரண செயல்கள் உங்களின் உடலுறவில் கூடுதல் சுவாரஸ்யத்தை சேர்க்குமாம் தெரியுமா?

தனிமையில் வசிப்பது

தனிமையில் வசிப்பது

காதலைக் கண்டுபிடிப்பதில் உங்களுக்கு கடினமான நேரம் இருந்திருந்தால், நீங்கள் மனச்சோர்வுக்குள்ளாகலாம் என்று அர்த்தம். மோசமான உறவில் இருப்பதை விட தனிமையில் இருப்பது நல்லதாக இருந்தாலும் சரியான காதல் துணையை தேர்ந்தேடுப்பது உங்கள் ஆயுளை அதிகரிப்பதற்கான வழி ஆகும்.

நீண்ட நேரம் அமர்வது

நீண்ட நேரம் அமர்வது

நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் உட்கார்ந்தால் உங்கள் வாழ்க்கையின் இரண்டு வருடங்கள் குறைக்கப்படலாம். இதை சரிசெய்ய, ஒவ்வொரு முப்பது நிமிடங்களுக்கும் ஒரு முறை உங்கள் வேலையில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு ஒரு நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

நண்பர்களை புறக்கணிப்பது

நண்பர்களை புறக்கணிப்பது

தங்கள் வேலை அல்லது பிற கடமைகளுக்காக தொடர்ந்து நண்பர்களை புறக்கணிப்பவர்கள் இறுதியில் மனச்சோர்வுக்குள்ளாகிவிடுவார்கள் என்று கூறப்படுகிறது. இது உங்கள் ஆயுளை குறைப்பதற்கு வழிவகுக்கும்.

MOST READ: தளபதி ரஜினி மாதிரி நட்புக்கு மரியாதை கொடுக்குற ராசிக்காரங்க யார் தெரியுமா?

வேலையின்மை

வேலையின்மை

ஆய்வின் படி, நீண்டநாள் வேலையின்றி இருப்பது ஒருவரின் ஆயுளை 63 சதவீதம் குறைக்கும் என்று கூறுகிறது. ஒரு நிலையான வேலை கிடைக்காதது உலகில் பலநபரின் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

பயணம் செய்வது

பயணம் செய்வது

இதனை நம்புவது மிகவும் கடினம்தான், ஆனால் தினமும் 2 மணி நேரத்திற்கும் மேலாக பயணம் செல்வது உங்கள் உற்பத்தித்திறனைக் குறைப்பது மட்டுமல்லாமல் உங்களுக்கு மனச்சோர்வையும் ஏற்படுத்தும். இதனால் உங்கள் ஆயுள் குறைய வாய்ப்புள்ளது.

போதுமான அளவு தூங்காதது

போதுமான அளவு தூங்காதது

ஒரு நாளைக்கு 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவது உங்கள் ஆயுட்காலத்தை குறைக்கும். ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் தூங்குவதும் இதற்கு பொருந்தும்.

MOST READ: பெண்கள் கணவரிடம் மறைக்கும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?

மரணத்திற்கு பயப்படுவது

மரணத்திற்கு பயப்படுவது

மரணம் தவிர்க்க முடியாதது, எவ்வளவு சீக்கிரம் இதனை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களோ அவ்வளவு உங்கள் வாழ்க்கைக்கு நல்லது. ஏனெனில் மரணத்திற்கு தொடர்ந்து பயப்படுவது, அதனை உங்களை விரைவில் நெருங்க வைக்கும், ஏனென்றால் நீங்கள் அதைப் பற்றி எப்போதும் சிந்திப்பது உங்களை மனரீதியாக பாதிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Committing These Mistakes Will Reduce Your Lifespan

According to Chanakya Niti committing these mistakes will reduce your lifespan
Story first published: Monday, November 18, 2019, 17:58 [IST]
Desktop Bottom Promotion