Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
மகாளய அமாவாசை அன்று கன்னியில் 4 கிரக சேர்க்கையால் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது...
பஞ்சாங்கத்தின் படி, பித்ரு பட்சத்தின் இறுதி நாளில் வரும் அமாவாசை மகாளய அமாவாசையாகும். இந்த அமாவாசை நாளில் 4 கிரகங்களின் சேர்க்கை கன்னி ராசியில் நிகழ்கிறது.
பஞ்சாங்கத்தின் படி, பித்ரு பட்சத்தின் இறுதி நாளில் வரும் அமாவாசை மகாளய அமாவாசையாகும். இந்த அமாவாசை நாளில் 4 கிரகங்களின் சேர்க்கை கன்னி ராசியில் நிகழ்கிறது. எப்படியெனில் ஏற்கனவே கன்னி ராசியின் புதன், சூரியன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ஒன்றாக பயணித்து வருகின்றன. அதனுடன் இந்த அமாவாசை நாளில் சந்திரனும் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு செல்வதால், கன்னி ராசியில் 4 கிரக சேர்க்கை உருவாகிறது. இந்த கிரகங்களின் சேர்க்கையால் புதாதித்ய யோகம், லட்சுமி நாராயண யோகமும் உருவாகியுள்ளன. எனவே இந்த மகாளய அமாவாசை 5 ராசிக்காரர்களுக்கு அற்புதமானதாக இருக்கும்.

மகாளய அமாவாசை நாளில் தான் துர்கா தேவி பூமியில் தனது முதல் அடியை எடுத்து வைப்பதாக நம்பப்படுகிறது. எனவே இந்த நாள் இன்னமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இப்போது மகாளய அமாவாசை நாளில் கன்னியில் 4 கிரகங்களின் சேர்க்கையால் எந்த 5 ராசிக்காரர்கள் நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மகாளய அமாவாசை நாளில் பல நன்மைகளைப் பெறப் போகிறார்கள். இந்நாளில் 4 கிரகங்களின் சேர்க்கையால், உங்கள் எதிரிகளை வெல்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எப்படிப்பட்ட சவால்களையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவார்கள். காதல் வாழ்க்கையில், நிதானமாக நடக்க வேண்டும். இல்லாவிட்டால் அதிக மன அழுத்தத்தை அடைவீர்கள். திருமணமாகாதவர்கள், இந்த ஆண்டிற்குள் வாழ்க்கைத் துணையை பெறுவார்கள்.

ரிஷபம்
மகாளய அமாவாசை நாளானது ரிஷப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் உணர்வுகளை மிகச்சிறப்பாக வெளிப்படுத்துவார்கள். இதனால் சமூகத்தில் புகழ் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு இந்நாள் நன்றாக இருக்கும். காதல் வாழ்க்கையில் இணக்கம் காணப்படும். சிலர் காதலில் விழலாம். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். கலைத்துறையுடன் தொடர்புடையவர்கள் ஆதாயமும் மரியாதையும் பெறுவார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். பெற்றோரின் ஆதரவுடன் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் நீங்கும். வாகனம் வாங்க விரும்புபவர்கள் அல்லது நிலம், வீடு வாங்க முயற்சிப்பவர்கள் இந்த நாளில் தங்கள் முயற்சியில் வெற்றி பெறலாம். இந்நாளில் பேச்சின் தாக்கம் அதிகரிக்கும். பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர்ந்திழுப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பக்கத்து வீட்டாருடன் இணக்கமாக இருப்பது நல்லது. இல்லாவிட்டால் பதற்றம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டில் இந்த 4 கிரக சேர்க்கை நிகழ்ந்துள்ளதால், தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் திடீர் முன்னேற்றத்தைக் காணலாம். ஏதேனும் புதிய வேலைக்கு விண்ணப்பித்திருந்தாலோ அல்லது எங்காவது ஒரு நேர்காணலுக்கு விண்ணப்பித்திருந்தாலோ, அதில் நேர்மறையான முடிவு கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் இருக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நிதி சம்பந்தமாக கடந்த காலத்தில் உங்கள் மனதில் இருந்த கவலைகள் நீங்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

மீனம்
மீன ராசியின் 7 ஆவது வீட்டில் 4 கிரகங்கள் சேர்ந்துள்ளதால், இந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். குறிப்பாக திருமண வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை காணலாம். காதலிப்பவர்கள், தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இது சிறந்த காலம். . ஊடகத்துறை, அரசியல் துறையில் பணிபுரிபவர்களுக்கும் ஒருவித சாதனைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. சிலர் தொழில் தொடங்கவும் வாய்ப்புக்கள் தேடி வரும். மனதளவில் நல்ல மாற்றங்கள் தெரியும். முக்கியமாக இக்காலத்தில் பொருள் இன்பம் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications