Just In
- 15 min ago
உங்களின் அதீத உடலுறவு வேட்கை உங்கள் திருமண வாழ்வை எப்படி அழிக்கும் தெரியுமா?
- 37 min ago
இதுல ஒன்ன தேர்வு செய்யுங்க... உங்களோட ஸ்ட்ராங் சைடு என்னன்னு நாங்க சொல்றோம்...
- 1 hr ago
கர்ப்பிணி பெண்கள் வேகவைத்த முட்டையை சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா?
- 2 hrs ago
உங்க ராசியின் சின்னத்தோட உண்மையான அர்த்தம் என்னனு தெரியுமா? அது உங்கள பத்தி என்ன சொல்லுது தெரியுமா?
Don't Miss
- Sports
அவர் எடுத்தது ரொம்ப தப்பான முடிவு.. சிஎம் பங்க்கை காய்ச்சி எடுத்த அண்டர்டேக்கர்!
- Automobiles
2021 மாடல் 890 ட்யூக் பைக்கை வெளியீடு செய்தது கேடிஎம்... இந்திய இளைஞர்களால் இதை கையில் பெற முடியுமா?
- Movies
கணவருக்கு பிறந்த நாள்.. கட்டியணைத்து முத்தம் கொடுத்த குஷ்பு.. வைரலாகும் போட்டோஸ்!
- Finance
கிட்டதட்ட 750 புள்ளிகள் சரிவு.. சென்செக்ஸ் 49,000 கீழ் முடிவு.. காரணம் என்ன..!
- News
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை மக்கள் பார்வையிட 28 முதல் அனுமதி - அமைச்சர் அறிவிப்பு
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சாணக்கிய நீதியின் படி இந்த குணமுள்ளவர்கள் வாழ்க்கையில் தீராத செல்வத்தை பெறுவார்களாம்...!
மனிதர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பெரும்பாலும் பொருள் சார்ந்ததாகவே இருப்பதை ஒருபோதும் மறுக்க முடியாது. தன்னிடம் இருக்கும் செல்வத்தின் அடிப்படையிலேயே தங்கள் மகிழ்ச்சியின் எல்லைகளை மனிதர்கள் அமைத்துக் கொள்கிறார்கள். இந்து மதத்தில், லக்ஷ்மி தேவி செல்வம் மற்றும் செழிப்பின் பாதுகாவலராக வணங்கப்படுகிறார்.
பூமியில் மனித வாழ்க்கையை பொறுத்தவரை அத்தகைய பொருள்சார்ந்த மகிழ்ச்சியை பூர்த்தி செய்வதற்கான செல்வம் எப்போதுமே ஒரு முக்கிய தேவையாகவே இருந்தது. எனவே லக்ஷ்மி தேவி தொடர்ந்து ஏராளமான செல்வத்தையும் செழிப்பையும் எங்களுக்கு ஆசீர்வதிப்பார் என்று பிரார்த்தனை செய்கிறோம். செல்வத்தின் பற்றாக்குறை மகிழ்ச்சியான வாழ்க்கையில் இடையூறை ஏற்படுத்துகிறது. வாழ்க்கையில் ஏற்படும் செல்வத்தின் பற்றாக்குறையை எப்படி போக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறியுள்ளார்.

சாணக்கிய மந்திரம்
சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி " முர்கா யாத்திரை புஜியந்தே தன்யம் யாத்திரை சுசிஞ்சிதம் | தம்பத்தே கலாஹோ நாஸ்தி தத்ரா ஸ்ரீ ஸ்வயமகதா " இதன் அர்த்தம் என்னவெனில் இந்த ‘மூன்று' காரியங்களைச் செய்வதை மனதில் வைத்திருக்கும் ஒருவர், எப்போதும் லக்ஷ்மி தேவியின் அருளால் ஆசீர்வதிக்கப்படுவார் என்பதாகும்.

முதல் காரியம்
முட்டாள்களுக்கு பதிலாக ஒரு புத்திசாலியின் ஞானத்தையும், அறிவையும் பாராட்டும் குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பமாகும். அந்த குடும்பத்தில் லக்ஷ்மி தேவி வசித்து, ஆசீர்வதிக்கிறார், அங்கு நீதிமான்கள் மதிக்கப்படுகிறார்கள், ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்.

இரண்டாவது காரியம்
ஒருவரின் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தன் வீட்டிற்கு வரும் விருந்தினரை அவமதிக்காத வீடு, வீட்டிற்கு வருபவர்களை வெறும் கையுடனும், வெறும் வயிறுடனும் திருப்பி அனுப்பாத வீடு கோவிலை விட புனிதமானதாகும். லக்ஷ்மி தேவி அத்தகைய வீடுகளையும் குடும்பங்களையும் அபரிமிதமான செல்வத்துடனும், செழிப்புடனும் வாழ ஆசீர்வதிக்கிறார்.
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் செக்ஸ் விஷயத்தில் கில்லியாக இருப்பார்களாம் தெரியுமா?

மூன்றாவது காரியம்
கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் ஒன்றாக வாழும் வீடு, லக்ஷ்மி தேவியால் ஆசீர்வதிக்கப்படுகிறது. தம்பதியினர் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தாலோ அவர்களில் ஒருவர் ஒருவருக்கொருவர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்ந்து அவமரியாதை செய்தால் அந்த குடும்பம் லக்ஷ்மி தேவியால் கைவிடப்படும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றியும் சாணக்கியர் கூறியுள்ளார்.

பண இழப்பு
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று சாணக்கியர் சொன்ன முதல் விஷயம் உங்களின் நிதி நெருக்கடி. நீங்கள் நிதி இழப்பை சந்திக்கிறீர்கள் என்றால், அதை உங்களுக்குள்ளேயே வைத்திருங்கள். இதற்குக் காரணம், உங்கள் பணப் பிரச்சினையைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ளும்போது, அவர்கள் ஒருபோதும் உங்களுக்கு உதவ மாட்டார்கள், அவர்கள் ஆதரவைக் காட்டினாலும் அது போலியானது.

தனிப்பட்ட பிரச்சினைகள்
சாணக்கியரின் கூற்றுப்படி எப்போதும் ரகசியமாக வைக்க வேண்டிய இரண்டாவது விஷயம் உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகள். தங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நபர்கள் எப்போதும் கேலி செய்யப்படுவார்கள், அவமதிக்கப்படுவார்கள். மக்கள் தங்கள் பின்னால் சிரிப்பார்கள்.
உங்களை சுற்றியும் உங்கள் வீட்டை சுற்றியும் இருக்கும் கண்திருஷ்டியை எளிதில் எப்படி விரட்டலாம்?

மனைவியின் குணம்
ரகசியமாக வைக்கப்பட வேண்டிய மூன்றாவது விஷயம் மனைவியின் குணம் மற்றும் நடத்தை. இதனை ரகசியமாக வைத்திருப்பவர்கள்தான் இறுதியில் ஞானி எனப்படுகிறார்கள். மற்றவர்களுக்கு முன்னால் தங்கள் மனைவிகளைப் பற்றி பேசும் ஆண்கள் தாங்கள் விரும்பாத ஒன்றைச் சொல்லலாம் என்று அவர் கூறினார்.