Latest Updates
-
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
சாணக்கிய நீதி படி பெண்களின் இந்த 4 பழக்கங்கள் அவர்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியை அழித்துவிடுமாம்...!
சாணக்கியர் பண்டைய இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அரசியல்வாதி ஆவார். தனது சாணக்கிய நீதியில் தன் கருத்துக்களையும், அறிவுரைகளையும் பதிவு செய்துள்ளார்.
சாணக்கியர் பண்டைய இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அரசியல்வாதி ஆவார். தனது சாணக்கிய நீதியில் தன் கருத்துக்களையும், அறிவுரைகளையும் பதிவு செய்துள்ளார். இதில் பணம், உடல்நலம், வியாபாரம், திருமண வாழ்க்கை, சமூகம், வாழ்வில் வெற்றி என அனைத்தைப் பற்றியும் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். இதனுடன் சாணக்கிய நீதியில் பெண்களைப் பற்றியும் பல விஷயங்களைக் கூறியுள்ளார்.

சில பழக்கவழக்கங்களால் பெண்கள் எப்போதும் குடும்பத்திற்கு பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். ஒரு பெண் தன் சில கெட்ட குணங்களால் குடும்பம் முழுவதையும் கஷ்டப்படுத்துவார். இந்தப் பழக்கங்கள் மேலோங்கினால் அவர்களால் குடும்ப வாழ்க்கை நரகமாகிவிடும். சாணக்கியரின் கூற்றுப்படி பெண்களின் எந்தெந்த பழக்கங்கள் குடும்பத்தை அழிக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

உடல்நலக் குறைவை மறைப்பது
சாணக்கியரின் கூற்றுப்படி கூற்றுப்படி, பெண்கள் பெரும்பாலும் தங்கள் நோய்களை மற்றவர்களிடமிருந்து மறைக்கிறார்கள். தனக்கு உடல்நிலை சரியில்லாதபோதும், கணவரிடம் அல்லது குடும்பத்தினர் முன் இதைப் பற்றிக் கூறுவதில்லை. அவர்கள் தங்கள் மன அழுத்தத்தை தாங்களாகவே எதிர்கொள்கின்றனர், இது அவர்களின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது. முறையான சிகிச்சையின்றி நீண்டகாலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த நோய்கள் மோசமடையத் தொடங்குகின்றன. இதனால் அவர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரும் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே பெண்கள் தங்கள் நோயைப் பற்றி ஒருபோதும் மறைக்கக் கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.

பொய் சொல்வது
பெண்கள் பல விஷயங்களுக்காக பொய் சொல்வதாகவும், இந்தப் பழக்கத்தால் பலமுறை பிரச்சனைகளில் சிக்குவதாகவும் சாணக்கியர் கூறுகிறார். இருப்பினும், ஆண்களுக்கும் பொய் சொல்லும் பழக்கம் உள்ளது. ஆனால் வீட்டில் உள்ள பெண்கள் பொய் சொல்ல ஆரம்பித்தால் அவர்களுடன் சேர்ந்து குடும்ப உறுப்பினர்களும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும் சாணக்கியர் கூறுகிறார். ஒரு பொய் சிறிது காலத்திற்கு மகிழ்ச்சியைத் தரும், ஆனால் உண்மையை நீண்ட காலம் மறைக்க முடியாது. உண்மை வெளிவந்தால் குடும்பத்தில் இருந்த மகிழ்ச்சியும் மறைந்துவிடும். பெண்களுடன் ஆண்களும் இதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

அனைத்து விஷயங்களுக்கும் தலையாட்டுவது
பெரும்பாலும் பெண்கள் தங்கள் கணவர் அல்லது குடும்ப உறுப்பினர்களின் அனைத்து முடிவுகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள். எதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. யாரும் வருத்தப்படக்கூடாத என்பதற்காக இதைச் செய்கிறார்கள். அது தவறு என்று பின்னாளில் வருந்துகிறார்கள். பெண்களும் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்தி, தங்கள் சுயமரியாதையை தக்கவைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களை மறைப்பது
மகிழ்ச்சியான குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கைக்கு கணவனும் மனைவியும் ஒரே கருத்தைக் கொண்டிருப்பது மிகவும் அவசியம். பெரும்பாலும் பெண்கள் குடும்பம் அல்லது கணவர் முன் தங்கள் கருத்தை தெரிவிக்க மாட்டார்கள். அவர்கள் குடும்ப சண்டைகளைத் தவிர்க்க விரும்புகிறார்கள். ஆனால் அதன் பிறகு அடிக்கடி வருந்துவார்கள். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவரவர் சூழ்நிலைக்கேற்ப கருத்து சொல்ல வேண்டும் என்கிறார் சாணக்கியர்.

சிறந்த மனைவியின் குணங்கள்
- மென்மையாக பேசுபவர்கள்
- பணத்தை சேமிப்பவர்கள்
- நல்ல குணம் கொண்டவர்கள்
- கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்
- உறவுகளை சீர்படுத்துபவர்கள்



Click it and Unblock the Notifications