Latest Updates
-
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்!
சாணக்கிய நீதியின் படி இந்த 6 வகை பெண்களை திருமணம் செய்து கொள்வது மரணத்தை விட கொடியதாம்...!
ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் பின்னும் ஒரு பெண் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் ஒரு பெண் தோல்வியுற்ற மற்றும் விரக்தியடைந்த ஆணின் பின்னால் இருக்கலாம்.
ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் பின்னும் ஒரு பெண் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் ஒரு பெண் தோல்வியுற்ற மற்றும் விரக்தியடைந்த ஆணின் பின்னாலும் இருக்கலாம். இந்த விஷயத்தை ஆச்சார்ய சாணக்கியரே தனது சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். சில குறைபாடுகள் உள்ள பெண்களைப் பற்றி அவர் கூறியுள்ளார்.

அத்தகைய பெண்கள் சொர்க்கம் போன்ற வீட்டை நரகமாக மாற்றுகிறார்கள். இந்த குணங்கள் கொண்ட பெண்களை ஆண்கள் மனைவியாக்கும் தவறை ஒருபோதும் செய்யக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். அவர்களுடனான வாழ்க்கை மரணத்தை விடக் கொடியது என்று சாணக்கியர் கூறுகிறார்.

ஒழுக்கக் கேடானவர்கள்
ஒழுக்கம் இல்லாத பெண்களுடன் வாழ்வது மிகவும் கடினம். அத்தகைய பெண்கள் குடும்பப் பெயரை மூழ்கடிக்கிறார்கள். அவர்களால் சமூகத்தில் உங்கள் மரியாதை குறைய வாய்ப்புள்ளது. அவர்களுக்கு மக்களிடம் மரியாதையுடன் பழகத் தெரியாது. இதன் காரணமாக சமூகமும் மக்களும் நம்மை விட்டு விலகிச் செல்ல வாய்ப்புள்ளது.

முட்டாள் பெண்கள்
முட்டாள் பெண்களும் நல்ல வீட்டை பாழாக்குகிறார்கள். அவர்களால் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க முடியாது. அவர்களின் முட்டாள்தனத்தால், கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. அவர்கள் சிந்திக்காமல் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். அவர்களின் முட்டாள்த்தனம் உங்களை கேலிக்குள்ளாக்கும்.

கடுமையான வார்த்தைகளை பேசுபவர்கள்
கடுமையான வார்த்தைகளை பேசும் ஒரு பெண்ணும் மனைவியாக இருக்க தகுதியற்றவர்தான். அத்தகைய பெண்களால் தங்கள் குடும்பத்தை சுமூகமாக நடத்த முடியாது. இவர்களின் வருகையால் வீட்டில் சண்டை சச்சரவுகள் அதிகமாகும். குடும்ப உறுப்பினர்களுக்குள் இடைவெளி ஏற்படும். அவர்களை யாருக்கும் பிடிக்காது. கணவனும் அவரை காலப்போக்கில் வெறுக்க ஆரம்பிப்பார்கள்.

எதிர்மறை குணம் கொண்டவர்கள்
எதிர்மறையான தன்மை கொண்ட பெண்ணும் மனைவியாக இருக்க தகுந்தவர் அல்ல. இத்தகைய பெண்கள் பெரும்பாலும் தீய இயல்புடையவர்கள். அது ஒருபோதும் மேம்படுவதில்லை. அவர்கள் சுயநலவாதிகளாக செயல்படுகிறார்கள், அவர்கள் தன்னை மட்டுமே கவனித்துக்கொள்கிறாள். அவர்கள் விரைவில் எதிரிகளாக மாறுகிறார்கள். அவர்கள் தங்களின் எதிர்மறை குணத்தால் வீட்டைப் பாழாக்குகிறார்கள்.

அதிக செலவு செய்பவர்கள்
அளவிற்கு அதிகமாக செலவு செய்யும் பெண்களும் வாழ்க்கையை கடினமாக்குவார்கள். அத்தகைய பெண்கள் வீட்டில் செல்வத்தை இருக்க எப்போதும் அனுமதிக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட பெண்கள் கணவரின் வருமானத்தை விட அதிகமாக செலவு செய்கிறார். அப்படிப்பட்ட பெண்ணை மனைவியாக்கிக் கொண்டால், கணவர் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது.

ஏமாற்றும் பெண்கள்
ஏமாற்றும் பெண்களுடன் வாழ்வதும் பரிதாபகரமானது. திருமணத்தில் விசுவாசம் மிக முக்கியமானது. ஆனால் சில பெண்கள் கணவரைத் தவிர்த்து பிற ஆண்களிடமும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அத்தகைய பெண் தன் கணவனின் வாழ்க்கையை நரகத்தை விட மோசமாக்குகிறார்கள்.



Click it and Unblock the Notifications
