Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு பெரிய நஷ்டம் தேடிவரப்போகுதாம் -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் பெரிய இழப்புகளை சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
லான்ச்பாக்ஸிற்கு ஒருடைம் இந்த பீட்ருட் தேங்காய் சாதம் செய்யுங்க - குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 அன்பான ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுபவர்களாம் - உங்க ராசி என்ன? -
உங்க பர்ஸில் ஒரு துண்டு சிவப்பு பேப்பரை வையுங்க.. அப்புறம் நடக்குற அதிசயத்தை பாருங்க.. -
நார்த் இந்தியன் ஸ்வீட் கார்ன் மசாலா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு பட்டாசா இருக்கும் -
திரிகோண வீட்டில் நிகழும் சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது! உஷார்.. -
இந்த நாடுகளில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தங்க நகை அணிய மாட்டார்களாம் - ஏன் தெரியுமா? -
ஆகஸ்ட் 12-ல் நிகழும் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சாணக்கிய நீதி படி இந்த பழக்கங்கள் உள்ளவர்களை பணம் தேடி வருமாம்... உங்ககிட்ட இது இருக்கா?
பண்டைய இந்தியாவின் சிறந்த அரசியல் ஞானியாகவும், பொருளாதார அறிஞராகவும் விளங்கியவர் சாணக்கியர். சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கான தீர்வை விளக்கியுள்ளார்.
பண்டைய இந்தியாவின் சிறந்த அரசியல் ஞானியாகவும், பொருளாதார அறிஞராகவும் விளங்கியவர் சாணக்கியர். சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கான தீர்வை விளக்கியுள்ளார். சாணக்கிய நீதி ஒருவரை வழிநடத்துவது மட்டுமல்லாமல், உயரங்களை அடைவதற்கான உறுதியான வழிகளையும் கூறுகிறது.

அனைவரின் வாழ்க்கையிலும் பணம் முக்கிய பங்கு வகிக்கிறது. பணம் இல்லாதவர்கள் இந்த சமூகத்தால் இழிவாக பார்க்கப்படுகிறார்கள். பணம் சம்பாதிக்க வேண்டும் மற்றும் பணக்காரராகவ வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள், அதற்காக கடுமையாக உழைக்கவும் செய்கிறார்கள். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் செல்வம் தொடர்பான பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் பணக்காரர் ஆக விரும்பினால், சில விஷயங்களை நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

நேரத்தின் மதிப்பை உணர்ந்து கொள்ளுங்கள்
குழந்தை பருவத்திலிருந்தே நீங்கள் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ நேரத்தின் மதிப்பை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்திலும் இதைக் குறிப்பிட்டுள்ளார். உலகின் மிக சக்தி வாய்ந்த பொருளாக நேரம் கருதப்படுகிறது. காலம் எல்லோருக்கும் ஒன்றுதான். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. ஒருமுறை இழந்தால், காலம் திரும்ப வராது. அதனால்தான் நேரத்தின் மதிப்பை உணர்ந்தவர் வாழ்க்கையில் ஒருபோதும் தோற்றுப் போவதில்லை.

இலக்குகளிலிருந்து விலகாதீர்கள்
இலக்கை அடைய சரியான நேரத்தில் முடிவுகளை எடுப்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். குறிக்கோளுடன் இருப்பவர்களுக்கு, எதிர்காலத்தில் அவர்களின் வாழ்க்கை பாதை சீராகிவிடும். நேரத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு அதைச் சரியாகப் பயன்படுத்துவதால்தான் இதெல்லாம் சாத்தியமாகிறது என்று சாணக்கியர் கூறுகிறார்.

லட்சுமி தேவியின் ஆசீர்வாதம்
சாணக்கியரின் கூற்றுப்படி, செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மி தேவி, நேரத்தின் மதிப்பைப் புரிந்துகொள்பவர்களுக்கு எப்போதும் தனது ஆசீர்வாதங்களைப் பொழிவார். அத்தகையவர்கள் சரியான நேரத்தில் சரியானதைச் செய்கிறார்கள். எனவே அவர்களின் பாதை மிகவும் எளிதாக இருக்கும். இந்த விதியை வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் எப்போதும் கிடைக்கும். மாறாக, இன்றைய வேலையை நாளைக்காக தள்ளிப்போடுபவர்கள் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை இழக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் வாழ்வில் எப்போதும் செல்வமும் மகிழ்ச்சியும் இருக்காது.

தற்பெருமை கூடாது
சாணக்கியர் கூற்றுப்படி, ஒருவரின் நேரம் நன்றாக இருக்கும் போது, அவரிடம் தற்பெருமையும் அதிகரிக்கத் தொடங்குகிறது. அத்தகையவர்கள் நல்லது கெட்டதை வேறுபடுத்திப் பார்க்க மறந்து விடுகிறார்கள். இவர்களின் ஆணவத்தைப் பார்த்து நண்பர்களும் உறவினர்களும் ஒதுங்குகிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் தங்கள் செயல்களுக்கு வருந்துவார்கள். அப்படிப்பட்ட ஒருவருக்கு கெட்ட காலம் வரும்போது, அவர்களுக்கு யாரும் உதவ முன்வர மாட்டார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.

சரியான முறையில் பணம் சம்பாத்திக்க வேண்டும்
நீங்கள் பணம் சம்பாதிக்க விரும்பினால், உங்களின் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். இலக்குகள் இல்லாத ஒரு நபர் ஒருபோதும் வெற்றியாளராகவோ அல்லது பணக்காரராகவோ இருக்க முடியாது. மேலும் சரியான வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். ஒழுக்கக்கேட்டில் சம்பாதித்த பணம் இன்று இல்லாவிட்டாலும் நாளை உங்களை விட்டுப் போய்விடும் என்பது உறுதி.

தானம் செய்ய வேண்டும்
சாணக்கியரின் கூற்றுப்படி, அவ்வப்போது ஏழைகளுக்கு தானம் செய்வது இறைவனின் அருளையும் உங்கள் செல்வத்தையும் அதிகரிக்கும். உங்கள் வீட்டில் வறுமை இருக்காது. ஆனால் அதிகப்படியான தானம் கொடுப்பது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் சாணக்கியர் கூறுகிறார். எப்பொழுதும் உங்கள் எல்லைக்குள் தானம் செய்யுங்கள். தானம் செய்வதன் மூலம் ஒரு நபரின் பணம் இரட்டிப்பாகத் தொடங்குகிறது.

பணத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்
சாணக்கியரின் அறிவுரையின் படி, பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல, அதைச் சரியாகப் பயன்படுத்தக் கற்றுக் கொள்வதும் அவசியம். பணத்தைச் சரியாகப் பயன்படுத்தாவிட்டால், அது கையிலிருந்து தண்ணீர் போலப் பாயும். எனவே பணத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அது போதாது என்கிறார் சாணக்கியர். அதிக பணம் சம்பாதிப்பது மட்டுமே உங்களை பணக்காரர்களாக மாற்றாது, அதனை சரியாக பயன்படுத்துவதும் அவசியம்.



Click it and Unblock the Notifications