For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு வருடத்தில் 7 பெரும் தூண்களை இழந்த பாஜக... அது பற்றிய தொகுப்பு இதோ உங்களுக்காக...

By Mahibala
|

பாஜக மிகப்பெரிய தேசிய கட்சி என்பது நமக்குத் தெரியும். தொடர்நது இரண்டு முறை மத்தியில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்த அமைப்பைத் தோற்றுவித்தவர் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி.

இவர் தன்னுடைய 93 வயதில் கடந்த வருடம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அந்த ஆகஸ்ட்டில் தொடங்கி, தற்போதைய ஆகஸ்ட் வரை ஒரு வருடத்தில் மட்டும் பாஜவின் மூத்த தலைவர்கள் 7 பேர் இறந்திருக்கிறார்கள். அவர்கள் யார் யார்? எப்படி இறந்தார்கள் என்பது பற்றி இந்த தொகுப்பில் விளக்கமாகப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடல் பிஹாரி வாஜ்பேயி (16, ஆகஸ்ட், 2018)

அடல் பிஹாரி வாஜ்பேயி (16, ஆகஸ்ட், 2018)

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சொந்த கட்சி, எதிர்கட்சி, குடிமக்கள் என எல்லோருக்கும் பிடித்த பிஜேபி தலைவர் என்றால் அதில் முதல் இடத்தில் இருப்பவர் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயியாகத் தான் இருப்பார். சிறுநீரக நோய்த் தொற்றின் காரணமாக சிகிச்சைப் பலனின்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி உயிரிழந்தார். அவருடைய வயது 93.

பாஜகவை தோற்றுவித்தவரும் இவர் தான். பாஜகவின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர். இந்தியாவை உலக அரங்கில் திரும்பிப் பார்க்க வைத்த பொக்ரான் அணுகுண்டு சோதனையை நடத்தியது இவர் தான். இவருடைய இந்தியா ஒளிர்கிறது வசனம் ஒளிராம இடமே கிடையாது என்று கூட சொல்லலாம். இவருடைய இழப்பு உண்மையிலேயே பேரிழப்பு தான்.

MOST READ: டாய்லெட் சீட் மேலே தூக்கிட்டு பயன்படுத்தணுமா இல்ல கீழ வெச்சு பயன்படுத்தணுமா?

மதன்லால் குரானா (27 அக்டோபர் 2018)

மதன்லால் குரானா (27 அக்டோபர் 2018)

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் டெல்லியின் முன்னாள் முதல்வருமாக இருநடதவர் மதன்லால் குரானா. இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி, கடந்த ஆண்டு (2018) அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி காலாமானார். அப்போது அவருக்கு வயது 82. இவர் 1993 - 96 வரை டெல்லி முதலமைச்சராகவும் 2004 ஆம் ஆண்டு ராஜஸ்தான் கவர்னராகவும் பிணபுரிந்திருக்கிறார்.

அனந்த குமார் (12 நவம்பர் 2019)

அனந்த குமார் (12 நவம்பர் 2019)

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் அனந்த குமார். கர்நாடகாவில் பாஜகவை வலுப்படுத்த பெரும் பணியாற்றியவர் இவர் தான். இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருங்கிய நண்பர்களுள் ஒருவரும் ஆவார்.

கடந்த 2014-2019 அமைச்சரவையில் மத்திய அமைச்சரவையில் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராகவும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராகவும் இருந்தார். பெங்களூர தெற்கு நாடாளுமன்ற தொகுதியில் 6 முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தன்னுடைய 59 வது வயதில் உடல்நலக் குறைவால் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி காலமானார்.

மனோகர் பாரிக்கர் (17 மார்ச் 2019)

மனோகர் பாரிக்கர் (17 மார்ச் 2019)

கோவா முதல்வர் மனோகர் பரிக்கரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம். இவர் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்ததோடு, சில காலம் எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆலோசனைகளையும் பெற்று வந்தனர். இவர் 2014 - 2017 வரையிலும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார். வீட்டில் இருந்தபடியே தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் தன்னுடைய 63 வது வயதில் கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதி மரணமடைந்தார்.

MOST READ: ஷாருக்கான் கிட்ட இருக்கற விலையுயர்ந்த 10 பொருள்கள் என்னென்னனு தெரியுமா?...

சுஷ்மா சுவ்ராஜ் (6 ஆகஸ்ட் 2019)

சுஷ்மா சுவ்ராஜ் (6 ஆகஸ்ட் 2019)

டெல்லி முதலமைச்சராகவும் கடந்த மக்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்தவர் சுஷ்மா சுவ்ராஜ் 25 வயதில் முதல்முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றவர் சுஷ்மா. இவர் கடந்த 6 ஆம் தேதி மதியம் திடீரென மூச்சுத்திணறல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு வயது 67. முதல் பெண் வெளியுறவுத் துறை அமைச்சர் என்ற பெருமைக்குரிய பாஜக மூத்த தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் இவர்.

பாபுலால் கௌர் ( 21 ஆகஸ்ட் 2019)

பாபுலால் கௌர் ( 21 ஆகஸ்ட் 2019)

மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தவர் பாபுலால் கௌர். சட்டம் பயின்றவர். பத்துமுறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்திருக்கிறார். பாஜகவைதட தூக்கி வளர்த்த மூத்த தலைவர்களில் ஒருவர். இவர் தன்னுடைய 89 ஆம் வயதில் கடந்த 21 ஆம் தேதி மறைந்தார்.

MOST READ: அருண் ஜேட்லி மரணம்... இந்த நேரத்தில் அவர் பேசிய 6 முக்கியமான விஷயங்கள் இதோ...

அருண் ஜேட்லி (24 ஆகஸ்ட் 2019)

அருண் ஜேட்லி (24 ஆகஸ்ட் 2019)

கடந்த மக்களவையில் நிதியமைச்சராக இருந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியர். இவரை வட இந்தியாவின் அரசியல் சாணக்கியர் என்று கூட அழைப்பதுண்டு. சட்டத் துறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார். அரசு வழக்கறிஞராக இருந்திருக்கிறார். இவருக்கு வயது 66. சுவாசக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு என பல பிரச்சினைகளின் காரணமாக எடல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த அவர், கடந்த 24 ஆம் தேதி மதியம் காலமானார். இவருடைய இழப்பு உண்மையிலேயே இந்தியாவுக்கு குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync
English summary

Bjp Loses 7 Stalwarts Within a Year

The BJP lost several of its leaders including former External Affairs Minister (EAM) Sushma Swaraj, former Prime Minister Atal Bihari Vajpayee, former Goa Chief Minister Manohar Parrikar, Union Minister Ananth Kumar in last one year. Sushma Swaraj and Arun Jaitley died in a span of 18 days.
Desktop Bottom Promotion