Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
ஆடி மாதத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
சூரிய பகவான் ஜூலை 16 ஆம் தேதி கடக ராசிக்கு இடம் பெயர்கிறார். அப்படி இடம் மாறும் போது தான் ஆடி மாதம் பிறக்கிறது. பொதுவாக கிரக நிலைகளில் மாற்றம் ஏற்படும் போது, அது ராசிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு மாதமும் சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வார். அந்த வகையில் சூரிய பகவான் ஜூலை 16 ஆம் தேதி கடக ராசிக்கு இடம் பெயர்கிறார். அப்படி இடம் மாறும் போது தான் ஆடி மாதம் பிறக்கிறது. பொதுவாக கிரக நிலைகளில் மாற்றம் ஏற்படும் போது, அது ராசிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிலும் சூரிய பகவான் கடக ராசிக்கு செல்லும் போது, சனி பகவானுக்கு எதிரெதிராக இருக்கிறார்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரிய பகவான் அதிகாரம், ஒருவருக்கு கிடைக்கும் பதவி, மரியாதையைக் குறிப்பிடக்கூடியவராக கருதப்படுகிறது. அதேப் போல் சனி பகவான் மெதுவாக செல்லக்கூடியவர் மற்றும் கடின உழைப்பாளி என்றும் சொல்லப்படுகிறது.
என்ன தான் சனி பகவான் சூரிய பகவானின் மகனாக இருந்தாலும், இவர்கள் இருவரும் இந்த மாதத்தில் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த முயல்வதால், ஒருசில ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருப்பது மிகவும் நல்லது. இப்போது எந்த ராசிக்காரர்கள் ஆடி மாதத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று காண்போம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். அரசு சம்பந்தமான விஷயங்களால் சங்கடத்தை சந்திக்க வேண்டியிருக்கும். ஆகவே தேவையில்லாத பிரச்சனைகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. செலவுகள் அதிகமாக இருக்கும். செலவைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பீர்கள். இதனால் விரக்தி கூட அடைவீர்கள். என்ன நடந்தாலும், உங்களின் கோபத்தை குடும்ப உறுப்பினர்கள் மீது வெளிக்காட்டாதீர்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள இறை வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் தங்களின் வேலை மற்றும் தொழிலில் சிறிது சிக்கல்களை சந்திக்க வாய்ப்புள்ளது. கண் மற்றும் காது சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்கலாம். உங்கள் வேலையில் கவனத்தை செலுத்தி சரியாக செய்து வந்தால், உங்கள் உயர் அதிகாரியிடம் கெட்ட பெயர் வாங்குவதில் இருந்து தப்பிக்கலாம். சனி மற்றும் சூரியன் எதிரெதிர் இருப்பதால், நிதி பிரச்சனைகளை சந்திக்கலாம். இதன் விளைவாக உங்களின் பல வேலைகளும் பாதிக்கப்படலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் ஆடி மாதத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தங்களின் எந்த திட்டங்களையும் இந்த மாதத்தில் செயல்படுத்த முயற்சிக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பொறுமையாக பேசுவது நல்லது. எந்த துறையில் பணியாற்றினாலும் பொறுமையுடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்பாராத மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். பண பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் பண இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை இழக்க வாய்ப்புள்ளது. அதிக உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு முடிவையும் அவசரமாக எடுத்துவிடாதீர்கள். முக்கியமாக எதிலும் முதலீடு செய்யாதீர்கள். எதிலும் போட்டி போடாதீர்கள். எதையும் நிதானமாக யோசித்து செய்யுங்கள். இல்லாவிட்டால் தேவையில்லாத பிரச்சனையில் சிக்குவீர்கள். உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இதனால் உங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். இந்த மாதத்தில் பண பிரச்சனையை சந்திக்கக்கூடும். யாரிடமும் கடன் வாங்குவதையும், கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. பயணம் மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இக்காலத்தில் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அனைவருடனும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. இல்லாவிட்டால், மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவீர்கள்.



Click it and Unblock the Notifications
