Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
வரலட்சுமி விரதம் இருந்தால் இந்த 16 விஷயங்களும் உங்களுக்கு நடக்குமாம்...
வரலட்சுமி விரதம் இருப்பதால் ஏற்படுகின்ற பதினாறு வகையான ஆத்ம நன்மைகள் பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.
ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை நாளில் வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. அந்த தினத்தன்று இந்தியா முழுவதும், குறிப்பாக தென்னிந்தியாவில் இந்த வரலட்சுமி விரதம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக ஆடி மாதத்தில் வருகின்ற பௌர்ணமியை அடுத்து வருகின்ற வெள்ளிக்கிழமையில் பெரும்பாலும் வரலட்சுமி விரதம் வருகிறது. இந்த விரதத்தைக் கடைபிடிப்பதால் நிறைய நன்மைகள் உண்டாகும்.

இந்த வரலட்சுமி வரதம் இருக்கிற பொழுது ஆன்மீக ரீதியாக நம்முடைய உடல் மற்றும் மன ரீதியாக 16 வகையான ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன. அவற்றைப் பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.

விரதத்தால் கிடைக்கும் 16 நன்மைகள்
உடல் அழகு பெறும்
பசுக்கள் மற்றும் வேலையாட்களும் உங்கள் வீட்டில் பெருகும்.
பகை நீங்கும்
கல்வி ஞானம் அதிகரிக்கும்
எல்லா ஐஸ்வர்யங்களும் பெருகும்
நிலையான செல்வம் உண்டாகும்
வறுமை நீங்கும்
பெரிய மகான்களுடைய ஆசிர்வாதம் கிடைக்கும்.
தானியங்கள் பெருகும்
வாக்கை நிறைவேற்றும் ஆற்றல் உண்டாகும்
வம்சம் விருத்தியடையும்
பதவி உயர்வு உண்டாகும்
வாகன வசதிகள் உண்டாகும்
ஆட்சி, அதிகார யோகம் கிடைக்கும்
தொழிலில் விருத்தி ஏற்படும்
எல்லா ஞானங்களும் பெருகும்.

மகாலட்சுமி ஸ்துதி சொல்லுதல்
நாம் எங்கு சென்று தேடிப் பார்த்தாலும் கிடைப்பதற்கு அரிதாகக் கிடந்த அற்புதமான ஸ்துதிகள் நிறைய பழங்கால ஓலைச்சுவடிகளில் இருந்து சமஸ்கிருதத்தில் சில ஸ்துதிகளை எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள் நம்முடைய முன்னோர்கள்.
லட்சுமி ஸ்துதிகளை தினமும் சிறிது நேரம் சொல்லி வழிபட்டு வந்தால் செல்வங்களை அள்ளித் தருகின்ற அனைத்து ரூப சக்திகளையும் வழிபட்ட ஒட்டுமொத்த பலனும் உங்களுக்குக் கிடைக்கும்.

பெண்களுக்கு
குறிப்பாக பெண்களுக்கு நிறைய நன்மைகளை இந்த லட்சுமி ஸ்துதி கொடுக்கும். பெண்கள் தினமும் மனம் உருகி 11 முறை இந்த மந்திரங்களைச் சொல்லி வழிபட்டு வந்தால் சகல செல்வங்களும் உங்களுக்குக் கிடைக்கும்.

மஹாலட்சுமி மந்திரங்கள்
முதல் மந்திரம்
சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
இரண்டாவது மந்திரம்
வசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
மூன்றாவது மந்திரம்
தநலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
நான்காம் மந்திரம்
க்ருஹலக்ஷ்ம்யை க்ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
ஐந்தாம் மந்திரம்
சாந்திலக்ஷ்ம்யை தாந்திலக்ஷ்ம்யை க்ஷேமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வாத்மாநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
ஆறாம் மந்திரம்
ஸத்யலக்ஷ்ம்யை தயாலக்ஷ்ம்யை ஸெளக்கிய லக்ஷ்ம்யைநமோ நம:
நம: பாதிவ்ரத்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
ஏழாம் மந்திரம்
கஜலக்ஷ்ம்யை ராஜலக்ஷ்ம்யை தேஜோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸர்வோத்கர்ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
எட்டாம் மந்திரம்
ஸத்வலக்ஷ்ம்யை தத்வலக்ஷ்ம்யை போதலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே விஜ்ஞானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
ஒன்பதாம் மந்திரம்
ஸ்தைர்யலக்ஷ்ம்யை வீர்யலக்ஷ்ம்யை தைர்ய லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வெளதார்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யைநமோ நம:
பத்தாம் மந்திரம்
ஸித்திலக்ஷ்ம்யை ருத்திலக்ஷ்ம்யை வித்யாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கல்யாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
பதினோராம் மந்திரம்
கீர்த்திலக்ஷ்ம்யை மூர்த்திலக்ஷ்ம்யை வர்ச்சோலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்வநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:



Click it and Unblock the Notifications