சொந்த வீடு நிலம் வாங்கும் யோகம் உங்களுக்கு இருக்கா? எந்த ராசிக்காரர்களுக்கு எப்போது கிடைக்கும்?

சொந்த வீட்டில் வசிக்கும் யோகம் எல்லோருக்கும் கிடைக்காது. சொந்த வீடு அமைய ஜாதகத்தில் நான்காம் வீடு நன்றாக இருக்க வேண்டும்.

சொந்த வீட்டில் சகல வசதிகளுடன் வாழ்க்கையை அனுபவிப்பதற்கு நமக்கு பாக்கியம் தேவை. செவ்வாய் பூமிக்காரகன். நமக்கு வீடு, நிலம் போன்ற சொத்துக்கள் சேரவேண்டும் என்றால் செவ்வாயின் பரிபூரண அருள் தேவை. சொந்த வீடு அமைய ஜாதகத்தில் நான்காம் வீடு நன்றாக இருக்க வேண்டும். ஜாதக கட்டத்தில் வசிப்பிடம், சொந்த வீடு, என்பதைப் பற்றி லக்னத்திற்கு நான்காம் வீடான சுகஸ்தானம் உணர்த்துகிறது.

Astrological Analysis On Yoga Of Own House

சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது சொந்த வீடு ஒருவருக்கு நிலைக்க வேண்டும் என்றால் ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் வலுவான நிலையில் இருக்கவேண்டும். நவகிரகங்களில் சூரியனுக்குஅடுத்தபடியாக பராக்கிரமம் மிக்கவராக, செயல் ஆற்றல் உள்ளவராகக் கருதப்படுபவர் இவர். பூர்வீகச் சொத்தில் உரிய பங்கு கிடைக்குமா என்பனவற்றைத் தீர்மானிப்பவர் செவ்வாய்.

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தால் ரியல் எஸ்டேட், நிலம் வாங்கி விற்கும் தொழில், கட்டடத் தொழில், சிவில் இன்ஜினியரிங் போன்றவற்றில் புகழும், பணமும் குவியும். பிறந்த நேரத்தின் அடிப்படையில் அமைந்த கிரகங்களின் அடிப்படையிலும் சுகஸ்தானம் என்று சொல்லப்படும் அமைப்பும், பஞ்சமா ஸ்தானம், பாக்கியஸ்தானம் மற்றும் லக்கினாதிபதி அது போன்று இன்னும் வேறு சில அமைப்புகளும் அமர்வு, பார்வை, சேர்க்கை போன்றவற்றால் பாதிக்கப்பட கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுகம் தரும் சுக்கிரன்

சுகம் தரும் சுக்கிரன்

செவ்வாய் பூமிக்காரகன். நமக்கு பலவகையில் சொத்து சேரவேண்டும் என்றால் செவ்வாயின் பரிபூரண அருள் தேவை. பூமி செவ்வாய் என்றால் அந்த நிலத்தின் மேல் கட்டப்படும் கட்டிடம் சுக்கிரன். ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருக்கவேண்டியதும் மிக அவசியம். ஒருவர் தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் வீடு வாங்கினாலும், கடன் வாங்கி வீடு வாங்கினாலும், மூதாதையர் சொத்து மூலம் வீடு கிடைக்கும் அமைப்பு இருந்தாலும் சொந்த வீட்டில் குடியிருக்கும் பாக்கியம் வேண்டும்.

யோகம் எப்படி இருக்கு

யோகம் எப்படி இருக்கு

சொந்த வீடு அமைய ஜாதகத்தில் நான்காம் வீடு நன்றாக இருக்க வேண்டும். ஜாதக கட்டத்தில் வசிப்பிடம், சொந்த வீடு, என்பதைப் பற்றி லக்னத்திற்கு நான்காம் வீடான சுகஸ்தானம் உணர்த்துகிறது. சொந்த வீட்டில் சகல வசதிகளுடன் வாழ்க்கையை அனுபவிப்பதற்கு நமக்கு பாக்கியம் தேவை.

ஜாதக கட்டம் எப்படி?

ஜாதக கட்டம் எப்படி?

ராசிக்கு சனி 4ஆம் வீட்டில் வரும் போது இடமாற்றம், ஊர் மாற்றம், சொந்த வீட்டில் பால் காய்ச்சும் யோகம் இருக்கும். ஜாதகத்தில் நான்கு, ஐந்து, ஒன்பது ஆகிய ஸ்தானங்களில் அல்லது அதன் அதிபதிகளின் சாரம் அல்லது அந்த கிரகங்களுடன் 6, 8, 12ம் அதிபதிகள் சேரும்போது, பரிவர்த்தனை அல்லது ஒருவரை ஒருவர் சமசப்தமமாகப் பார்க்கும்பொழுது அந்த தசா யோக அம்சத்தில் இருந்தால் திடீரென்று செல்வம், செல்வாக்கு, சொத்து குவியும்.

எந்த ராசிக்காரர்களுக்கு எப்போது?

எந்த ராசிக்காரர்களுக்கு எப்போது?

மேஷ ராசிக்காரர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். செவ்வாய் பூமிக்காரகனென்றாலும் மேஷராசிக்காரர்களுக்கு 42 வயதுக்கு மேல்தான் சொந்தவீடு யோகம் அமையும். ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் ராசியதிபதி என்பதால் இவர்களுக்குச் சுகபோகமான வீடு எளிதில் அமைந்துவிடும். ரிஷப ராசிக்காரர்களுக்கு 32 வயதில் வீடுவாங்கும் யோகம் வந்துவிடும். மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் ராசியதிபதி என்பதால் இவர்களுக்கு வீடு அமைவது சற்று காலதாமதமாகும். கடக ராசிக்காரர்கள் கடும் உழைப்பாளிகள். இவர்களுக்கு 49 வயதுக்கு மேல் சொந்தவீடு அமையும் யோகம் கிடைக்கும்.

வீட்டோடு மாப்பிள்ளை

வீட்டோடு மாப்பிள்ளை

சிம்ம ராசிக்காரர்களுக்கு பூர்வபுண்ணிய பலத்தால் பிறக்கும்போதே சொந்தவீடு அமைப்பு இருக்கும். சிலருக்கு வீட்டோடு மாப்பிள்ளையாகச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். சுய சம்பாத்யத்தில் 60 வயதுக்கு மேல்தான் சொந்த வீடு யோகம் அமையும். கன்னி ராசிக்காரர்களில் பலர் கூட்டுக்குடும்பமாக இருப்பார்கள். எப்போது வேண்டுமானாலும் இவர்கள் வீடு வாங்குவார்கள். துலாம் ராசிக்காரர்கள் 36 வயது முதல் 41 வயதுக்குள் சொந்த வீடு வாங்குவார்கள். விருச்சிக ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு மாடி வீடாக அமையும் 45 வயதிற்கு மேல் வீடு வாங்குவார்கள்.

இளம் வயதில் வீடு வாங்கலாம்

இளம் வயதில் வீடு வாங்கலாம்

தனுசு ராசிக்காரர்கள் குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்களுக்கு 5 முதல் 9 வயதுக்குள்ளாகவே சொந்த வீடு அமைந்துவிடும். மகர ராசிக்காரர்களுக்கு அதிபதி சனி பகவான் எளிதில் வீடு கொடுத்து விடுவது யோகம்தான். இவர்கள் வாங்கிய அல்லது கட்டிய வீடு மூன்று நான்கு தலைமுறைக்குக்கூட நிலைத்து நீடிக்கும். கும்ப ராசிக்காரர்கள் பெரும்பாலும் கூட்டுக்குடும்ப வாழ்க்கையிலிருப்பார்கள். இவர்களுக்கு 35 வயதிற்கு மேல் சொந்த வீடு அமையும். மீன ராசிக்காரர்கள் 22 வயதுக்குமேல் எப்போது முயன்றாலும் சொந்த வீடு அமையும்.

வாஸ்து நாளில் பூஜை

வாஸ்து நாளில் பூஜை

வாஸ்து நாட்களில் குடியிருக்கும் வீட்டிலோ வாடகை வீட்டிலோ வாஸ்து பகவானுக்கு பூஜை செய்ய சொந்த வீடு யோகம் அமையும். சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்யலாம். வாஸ்து புருஷன் விழித்திருக்கும் நாட்கள் தவிர, மற்ற சுப நட்சத்திரங்களில் வாஸ்து பூஜை செய்யலாம். வாஸ்து தோஷங்களை நீக்கும் சக்திவாய்ந்தவராக, மண்ணச்சநல்லூரில் உள்ள பூமிநாதர் கோவிலில் அருளும் பூமிநாதசுவாமி இருக்கிறார். வாஸ்து சம்பந்தமாக அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி செய்யக் கூடியவராக இறைவன் பூமிநாத சுவாமி விளங்குகிறார்.

செவ்வாய் பகவானுக்கு பூஜை

செவ்வாய் பகவானுக்கு பூஜை

செவ்வாய்கிழமைகளில் செவ்வாய் பகவானை நினைத்து வணங்கலாம். செவ்வாய் கிழமை துவரம்பருப்பு தானம் செய்யலாம். செவ்வாய் பகவானின் அருள் கிடைக்க வைத்தீஸ்வரன் கோவிலில் அருள்பாலிக்கும் செவ்வாய் பகவானை வணங்க வீடு நிலம் வாங்குவதில் ஏற்படும் தடைகள் நீங்கும். சொந்த வீட்டில் வசிக்கும் யோகம் வரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, February 25, 2020, 17:29 [IST]
Desktop Bottom Promotion